Dec 28, 2010

2010ல் வீதி ஒழுங்குகளை மீறியதற்காக 119 பில். ரூபா அறவீடு


வீதி ஒழுங்கு விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 2010ஆம் ஆண்டில் 119 பில்லியன் ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இதேவேளை 2011 ஜனவரி முதல் வாகன போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டு பொலிஸ் திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வேலைத் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபர் மேலும் தகவல் தருகையில்:

போக்குவரத்து விதிகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்பிற்கமைய வாகனங்களில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் என்று குறிப்பிட்ட அவர், அது ஜனவரி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

வீதி போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் தேவையான ஆலோசனைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

120 மின் அலகுக்குள் கட்டண மாற்றமில்லை

90 அலundefinedகு மின்கட்டண முடிவை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மின்சார சபைக்கு பணிப்பு90 வீதமானோருக்கு பாதிப்பில்லை



ஜனவரி மாதம் முதல் 90 அலகுக்கு மேல் மின் கட்டணத்தை அதிகரிக்கும் முடிவை இடை நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மின்சக்தி அமைச்சிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 120 அலகு வரை மின் கட்டணத்தில் மாற்றம் செய்யாது 120 அலகுக்கு மேற்படும் அலகுகளுக்கு மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க, அமைச்சின் செயலாளர் சீ. பெர்டினன்டஸ், திறைசேரி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுத் தலைவர் ஜயதிஸ்ஸ கொஸ்தா உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஜனவரி மாதம் முதல் 90 அலகுக்கு மேல் மின் கட்டணத்தை 8 வீதத்தினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பில் மக்கள் பயன்பாட்டு ஆணைக் குழு பொதுமக்களின் கருத்துக்களை கேட்ட றிந்தது. இதனடிப்படையிலேயே மின் கட்டண உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட இருந்தது.

நாட்டில் 46 இலட்சம் மின் பாவனை யாளர்கள் உள்ளனர். மின் கட்டணத்தை 120 அலகிற்கு மேல் உயர்த்துவதால் 4 இலட்சம் பேர் மட்டுமே கட்டண அதிகரி ப்புக்கு உள்ளாவர். இவர்கள் மொத்த பாவனையாளர்களில் 8 வீதமானவர்களாகும் என மின்சக்தி அமைச்சு கூறியது. புதிய திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள் அடங்கலாக 90 வீதமானவர்களின் மின் கட்டணத்தில் எதுவித மாற்றமும் ஏற்படாது.

இது தவிர 2011 வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு அரச ஆஸ்பத்திரிகள், மத ஸ்தலங்கள், பாடசாலைகளின் மின் கட்டணத்தை 25 வீதத்தினால் குறைக்கும் திட்டமும் அதேபோல அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சு கூறியது.

தற்பொழுது நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி 8 வீதமாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் 6 வீதமாக குறைந்துள்ளது. முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. எனவே, இந்த நிலைமைகளை மேலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே அறிவித்த மின் கட்டண உயர்வு நாட்டின் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளுக்கு உகந்ததல்ல என மேற்படி கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. மின்சார சபை நஷ்டத்தில் இயங்குவதால் குறிப்பிட்ட அளவினால் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளபோதும் அதனை நியாயமான முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் இங்கு தெரி விக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

வடகொரியாவுக்கு பதிலடி தர தென்கொரிய அதிபர் அழைப்பு

சியோல் : "வடகொரியாவுக்குப் பதிலடி கொடுப்பதற்கு ஒன்று திரளுங்கள்' என்று தென்கொரிய மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார், அந்நாட்டு அதிபர் லீ மியுங் பாக். தென்கொரிய தேசிய வானொலியில் நேற்றுப் பேசிய அவர் இதுகுறித்து கூறியதாவது: வடகொரியா இனிமேல் ஏதாவது ஒரு தாக்குதல் நடத்தினாலும், அதன் மீது இரக்கம் காட்டாமல் கடுமையாகத் தாக்குவோம். நமது நாட்டின் பாதுகாப்பு தற்போது ஒரு ஆபத்தான நிலையில் இருக்கிறது.

இந்த நேரத்தில், நமக்குள் வேறுபாடுகள் எழுவதை நாம் அனுமதிக்க முடியாது. நமது போர்க் கப்பல், வடகொரிய நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு அதில் இருந்தவர்களில் 46 பேர் உயிரிழந்த சம்பவம், நம்மில் பல்வேறு கருத்து வேறுபாடுகளை உண்டாக்கியது.

அந்தக் கருத்து வேறுபாடுகள் தான், இயான்பியாங் தீவு மீது வடகொரியா தாக்குதல் நடத்த வழிகாட்டி விட்டது. அதனால், நாம் ஒன்று திரண்டு நமது ஒற்றுமையைக் காட்டினால், வடகொரியா நம்மை எதிர்க்க அஞ்சும். நடந்த தாக்குதலுக்குச் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம். அதுதான் போரைத் தடுக்கும், அமைதியை நிலைநிறுத்தும். வடகொரியா உடனான அமைதியான இணக்கத்தையே இப்போதும் தென்கொரியா விரும்புகிறது. இவ்வாறு லீ மியுங் பாக் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தான், தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம் க்வான் ஜின்னும், சீனப் பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங்லீயும் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம், சீனத் தலைநகர் பீஜிங்கில் சந்தித்து, இந்தப் பிரச்னை குறித்து பேசுவர் என்ற செய்தி வெளியானது.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்காவில் பனிப்புயல்: 2,000 விமானங்கள் ரத்து : ஆறு மாகாணங்களில் அவசர நிலை

நியூயார்க் : அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோர பகுதியில், நேற்று கடும் பனிப்புயல் வீசியதால், நாட்டின் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆறு மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில், தற்போது பனிக்காலம் நிலவி வருகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஐரோப்பாவில் பெரும்பான்மையான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், அங்கு பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று கடுமையான பனிப்புயல் வீசியது. நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் வீசிய இப்புயலால், இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. நியூயார்க் விமான நிலையங்கள் மூடப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையங்களில் தங்கியுள்ளனர். நியூயார்க்கில் மட்டும் 46 செ.மீ., அளவிற்கு பனி பெய்தது. மாசாசூசெட்ஸ், மெயின், மேரிலேண்ட், நியூஜெர்சி, வடக்கு கரோலினா மற்றும் விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தென் மாகாணங்களான ஜியார்ஜியா மற்றும் தெற்கு கரோலினா ஆகியவை, 100 ஆண்டுகளுக்கு பின் கடுமையான பனிப்பொழிவை சந்தித்துள்ளன. எனினும், தலைநகர் வாஷிங்டன் இந்த புயலில் இருந்து தப்பியுள்ளது. அங்கு சிறிய அளவில் மட்டும் பனிப்பொழிவு காணப்பட்டது. மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் வீசிய இந்த பனிப்புயல், நியூஜெர்சி, நியூயார்க் நகரையும், கனடா நாட்டையும் தாக்கியதாக வானிலை ஆய்வு மையத்தினர் கூறியுள்ளனர்.

பனிப்புயல் காரணமாக கிறிஸ்துமஸ் முடிந்த பின்னும் மக்கள் அவரவர் ஊர்களுக்கு திரும்ப முடியாமல் பெரும் அவதிக்குள்ளாயினர். பெரும்பாலான வணிக நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. அவசியம் ஏற்பட்டால் ஒழிய, பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று மக்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ரஷ்யாவிலும் பனி: கடும் பனிப்பொழிவு காரணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள டொமொடெடோவோ விமான நிலையம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறது. அங்கு எந்தவிதமான மின் விளக்குகளும் எரியவில்லை. விமான நிலையத்தின் முதலுதவி மையமான இத்தார் டாசில் உள்ள அவசர நிலை விளக்குகள் கூட கடும் பனி காரணமாக இயங்கவில்லை.

விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தெரு விளக்குகளும் செயல்படவில்லை. விமான நிலையத்தில் தங்கியுள்ள பயணிகள் வைத்திருக்கும் மொபைல்போன் திரைகளில் இருந்து வெளிப்படும் ஒளி தான் அங்கு பலருக்கு வழிகாட்டி கொண்டிருக்கிறது
மேலும் இங்கே தொடர்க...

Dec 27, 2010

சிங்களவர்களுடன் எவ்வாறு வாழ்வது? சிறுபான்மையினருக்கு விரைவில் கருத்தரங்கு - நீதியமைச்சர்

சிறுபான்மை ,இனத்தவர்கள் பெரும்பான்மை ,இனத்தவருடன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றி விளக்குவதற்காக விரைவில் கருத்தரங்கொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மடவளை மதீனா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.

இந்நாட்டில் சிறுபான்மை என்ற ,இனபேதம் ,இல்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

,இருப்பினும் சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை சார்ந்து வாழும்போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் உண்டு' என அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

Dec 26, 2010

10 ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவம்


தேசிய பாதுகாப்பு தினத்தில் பத்து ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த மக்களின் நலன்களில் அக்கறையுடன் ஊடகங்கள் வாயிலாக செய்திகளைப் பிரசுரித்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதற்காக நல்ல சிந்தனைகளை வெளிப்படுத்திய மைக்காக இவ்விருது வழங்கப்பட்டது.

இவ்விருதை தினகரன் இணை ஆசிரியர் மர்லின் மரிக்கார், தினக்குரல் உதவி ஆசிரியர் பா. கிருபாகரன், லக்பிம சாந்தினி புஷ்பா சமரக்கொடி, லக்பிம சுனித்திரா ஜீவணி மிதிமதுர, அஞ்சலா முத்துத்தம்பி உட்பட பத்துப் பேர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வை சிறப்பாக நடாத்த ஒத்துழைப்பு நல்கிய யாழ். மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ். மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவுக்கும் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்
மேலும் இங்கே தொடர்க...

அம்பாந்தோட்டையில் இன்று தேசிய சாரணர் ஜம்போரி

சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு:ஜனாதிபதி அதிதி: 31 வரை விசேட ஏற்பாடுதேசிய சாரணிய சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எட்டாவது தேசிய சாரணர் ஜம்போரியும், ஒன்பதாவது குருளைச் சாரணர் ஜம்போரியும் இன்று 27 ஆம் திகதி அம்பாந்தோட்டை அங்குனுகொல பெலஸ்ஸவில் நடைபெறவுள்ளன.

இதில் வெளிநாட்டு சாரணர்களோடு வடக்கு, கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் அதிகமான சாரணர்கள் பங்குபற்றவுள்ளதோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்தும் கூடுதலானோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று ஆரம்பிக்கும் இந் நிகழ்வு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இன்று அம்பாந்தோட்டையில் தேசிய ஜம்போரியை ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைப்பதாக உலக பாராளுமன்ற சாரணர் சங்கத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்தார்.

திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறும் தேசிய ஜம்போரியில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவுடன், இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் சி. பட்டுவன்கல உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டு தகவல் வழங்கினர்.

அம்பாந்தோட்டையில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கும் தேசிய ஜம்போரியில் யாழ்ப்பாணத்திலிருந்து 650 சாரணர்களும் கண்டியிலிருந்து 600 சாரணர்களும் கலந்து கொள்கின்றனர். இலங்கையில் தற்போது 49 ஆயிரம் சாரணர்கள் உள்ளனர்.

இதனை 2013 இல் ஒரு இலட்சமாக அதிகரிக்கவும் நாட்டின் சகல பாடசாலைகளிலும் சாரணர் இயக்கத்தை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக திரு. பட்டுவன்கல தெரிவித்தார்.

இலங்கையில் அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ளதால், 2012 இல் சாரணர் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 29 ஆவது ஜம்போரியை இலங்கையில் நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக ஜனவரி 04 ஆம் திகதி அலுவலகமொன்றும் திறந்து வைக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 32 மில்லியன் சாரணர்கள் உள்ள நிலையில், ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் 25 மில்லியன் சாரணர்கள் இருப்பதாகவும் பிரதம ஆணையாளர் தெரிவித்தார். இப்பாசறை காலத்துக்குள் பங்குபற்றுபவர்களுக்கு சாரணர் செயற்பாடுகள் பல ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன் அவற்றுள் ஆராய்ச்சி பரிசோதனை, பிரயாணங்கள் இளைஞர் வேலைத் திட்டங்கள், நாடகங்களுக்கும் பாசறைத்தீ,(இஅஙஆ ஊஐதஉ), “ஸ்கில் ஒரமா" (நஓஐகக ஞதஅஙஅ) நடவடிக்கைகளும் படக் காட்சிகள் என்பனவும் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளன.

கலை, கலாசார நிகழ்ச்சிகள், விநோத சுற்றுப் பயணங்கள், குருளை சாரணர் கலை நிகழ்ச்சிகள், விசேடமாக திறந்த வெளியரங்கு நிகழ்வுகள் (ஞடஉச அஐத ஈஐநடகஅவ) விமானப் படை நாய்களின் சாகஸ விளையாட்டுக்கள், விமானப் படை கண்காட்சி அரங்கு (அஐத இதஊப உலஏஐஆஐபஉஐஞச நபஅகக) முதற்தடவையாக குதிரை சாகஸ விளையாட்டுக்களில் விமான சாரணர்கள் பங்கு கொண்டு சாகஸங்கள் நிகழ்த்துவர்.

மகளிர் சாரணர்களும் பங்குபெற உள்ளார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

11 மாவட்டங்களில் பெரும் சோகம்; கதறி அழுது கண்ணீர் அஞ்சலி






சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட ஆறாண்டு நிறைவை வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதி மக்கள் உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தனர்.

உறவுகளையும், உடன்பிறப்புகளையும் இழந்து தவிக்கும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர். கிழக்கில் உறவுகளின் கல்லறைகளுக்கு தீபமேற்றி, மலர்த்தூவி நெஞ்சுருக நினைவு கூர்ந்ததைக் காணக்கூடி யதாக இருந்தது.

மத வழிபாடு களில் கலந்துகொண்ட மக்கள் ஆழிப் பேரலை அள்ளிச்சென்ற உறவுகளின் நினைவாக அன்னதானம் வழங்கியதுடன் தண்ணீர் பந்தல்களையும் நடத்தினர்.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிகளுக்கு அருகில் ஒன்று கூடிய உறவுகள், கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். கிழக்கின் கரையோர கிராமங்களில் நேற்றுக் காலை பெரும் சோகம் கெளவியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

தென் பகுதியில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட இடங்களிலும் மக்கள் சோகமே உருவாக உறவுகளை நினைவுகூர்ந்தனர். உறவுகளின் பிரிவுத்துயரில் தோய்ந்த மக்கள் நீண்ட நேரம் ஓரிடத்தில் குழுமியிருந்து அஞ்சலி செலுத்தினர். இவ்வாறு 11 மாவட்டங்களில் சுனாமியின் சோக வடு நேற்று மீண்டும் மக்களை ஞாபகமூட்டிச் சென்றுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வானுவாத்து நாட்டில் பயங்கர நிலநடுக்கம்


சிட்னி : பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள வானுவாத்து நாட்டில், நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 என, பதிவான இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த 2004 டிசம்பர் 26ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட பெரும் சுனாமியால் இரண்டு லட்சத்து 20 ஆயிரம் பேர் இறந்தனர். சுனாமி தாக்குதலின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் உலகம் முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியா அருகிலுள்ள வானுவாத்து நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 என பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஹவாய் தீவில் இயங்கிவரும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்தது. அதில், கடல் அலைகள் பற்றிய பதிவுகள், சுனாமி ஒன்று உருவானதைக் காட்டுகின்றன. அதனால், சுனாமி அலைகள் கடலோரப் பகுதிகளைத் தாக்கக் கூடும்' என, குறிப்பிட்டிருந்தது. ஆனாலும், நிலநடுக்கத்தால் கடலில் வழக்கத்தை விட சற்று அதிக உயரத்தில், அலைகள் உருவானதே தவிர பெரிய அளவில் சுனாமி தாக்கவில்லை. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், எவ்வித பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

குண்டுவீச்சு: வடகொரிய வீரர்கள் குஷி


பீஜிங் : தென்கொரியத் தீவு மீது, தங்கள் நாட்டு படையினர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதைப் பார்த்து, சந்தோஷம் அடைந்து அந்த வெற்றியைக் கொண்டாடியதாக, வடகொரிய ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர். இது குறித்து வடகொரிய "டிவி' நிலையம் ஒன்றுக்குப் பேட்டியளித்த வடகொரிய ராணுவ வீரர்கள் சிலர்,"நாங்கள் சந்தோஷத்தில் கூச்சலிட்டோம். எங்கள் வாழ்வை உயர்த்தி விட்டோம். எங்கள் கொரிய மக்கள் ராணுவத்தின் தலைவருக்காக (வடகொரிய அதிபர் கிம் ஜாங் இல்) நாங்கள் போராடுவோம். எங்களை முதலில் தாக்கிய எதிரியை பழி வாங்கும் நடவடிக்கையைத் துவக்கி விட்டோம்,'' என்றனர். வடகொரியாவின் தாக்குதல் குறித்து, அந்நாட்டு ராணுவ வீரர்கள் "டிவி'யில் தோன்றி பேட்டியளிப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

நீர்மூழ்கி கப்பல்களை தாக்கும் போர் விமானங்கள்:

தீவிரம் "நீர்மூழ்கிக் கப்பல்களை குறி பார்த்து தாக்கும் போர் விமானங்கள் அடுத்தாண்டு முதல் தைவான் ராணுவப் பணியில் ஈடுபடுத்தப்படும்' என்று அந்நாட்டு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. சீனாவுக்கு எதிரான தைவானின் நடவடிக்கையாக இதை ஆசிய நாடுகள் கருதுகின்றன. தென் சீன கடல் பகுதியில், சீனாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மை மற்றும் ராணுவத்தை அதிநவீனமாக்கும் அதன் செயல்பாடுகள், கிழக்காசிய நாடுகள் மத்தியில் பீதியை கிளப்பி வருகின்றன. இந்நிலையில், சீனாவிடம் இருந்து முழுமையாக விடுபடத் துடிக்கும் தைவான் நாட்டுக்கு, நீர்மூழ்கிக் கப்பலை குறி பார்த்து தாக்கும் பி-3சி ரக போர் விமானங்களை விற்பதாக அமெரிக்கா ஒப்பந்தம் செய்தது. அதன்படி, அடுத்தாண்டில் 12 பி-3சி ரக போர் விமானங்களில் ஒன்றை அமெரிக்கா, தைவானுக்கு வழங்கும். இது, தற்போது தைவானில் செயல்பாட்டில் இருக்கும் எஸ்-2டி விமானங்களுக்கு மாற்றாக இருக்கும். கடந்த 1949ல் சீனாவில் நிலவி வந்த ஷியாங்கே ஷேக் தலைமையிலான குவாமின்டாங் கட்சியின் சர்வாதிகாரத்துக்கு எதிராக மா சே துங் நடத்திய புரட்சியின் போது, ஷேக் உட்பட அக்கட்சியின் பெரும்பான்மையோர் தைவானில் தஞ்சம் அடைந்தனர். ஷேக், தைவானில் தனது ஆட்சியை உருவாக்கினார். அமெரிக்கா அதற்கு ஆதரவு தெரிவித்தது. அது முதல் தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்து தனியாக செயல்பட்டு வருகிறது. மாவோவுக்குப் பின் வந்த டெங் ஷியாவ்ப்பிங்கும், அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் பலரும் தைவான், சீனாவுடன் சேர வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். 1980ம் ஆண்டுகளில் தைவானில் ஜனநாயக ஆட்சி உருவானது. கடந்த 2005ல், சீன ராணுவத் தலைவராக ஹூ ஜிண்டாவோ பொறுப்பேற்ற போது, தைவான் சீனாவிடம் இருந்து விடுதலையாகப் போவதாக எதிர்காலத்தில் பிரகடனம் செய்வதைத் தடுக்கும் வகையில், "பிரிவினைக்கு எதிரான சட்டம்' ஒன்றை கொண்டு வந்தார். குவாமின்டாங் கட்சியின் மாயிங் ஜியோ அதிபராக பொறுப்பேற்ற பின், இரு தரப்பு உறவையும் மேம்படுத்தி வந்தார். 2008, டிசம்பரில் 60 ஆண்டு கால பகைமையை மறக்கும் வண்ணம், சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து துவங்கியது. ஆனால், 2009ல் சீனாவின் வடக்கு மற்றும் தென்பகுதியில் உள்ள முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்கக் கூடிய மூன்று ஏவுகணைகளை தைவான் பரிசோதித்து, இரு தரப்பிலும் மீண்டும் பகைமையை வளர்த்தது. இந்நிலையில் அமெரிக்கா, சீனாவின் ஓர் அங்கம் தைவான் என்பதை ஏற்றுக் கொண்டாலும், தைவான் மீது அன்னிய நாட்டு தாக்குதல் நேரும் பட்சத்தில் தான் உதவி புரிவதாக ஓட்டளித்து ஆயுதங்களை வாரி வழங்கியது. தைவான் தனது பகுதி என்று வலியுறுத்தி வரும் சீனா, தைவானுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவு காரணமாக, அதன் மீது போர் தொடுத்து தன்னுடன் இணைப்பதற்கு தயங்கி வருகிறது. தைவானும் இந்த சாக்கில் ஆயுதங்களை குவித்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

Dec 13, 2010

தமிழ் ஊடகவியலாளரைத் தாக்கியோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் - பா.அரியநேத்திரன்

நாட்டில் சுமுகமான நிலை தோன்றியுள்ள இக்காலத்தில் மட்டக்களப்பில் தமிழ் ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பகுதியில் ஊடகவியலாளர் மாணிக்கபோடி சசிக்குமார் (வயது 35) இனந்தெரியாத குழுவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்கப்பட்டார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே பா. அரியநேரத்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

“இத்தாக்குதலானது பொதுமக்கள் மத்தியில் அச்ச சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இவ்வாறான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். உரிய தரப்பினர் அதற்கான நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் என்ற தகவலில் உண்மையில்லை: ஆளும் தரப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்படவேண்டும் என அமைச்சரவை யோசனை முன்வைக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள்,

விநாயகமூர்த்தி முரளீதரன் - பிரதியமைச்சர் (மீள்குடியேற்றம்)

வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் தேசிய கீதமானது ஒரு மொழியிலேயே பாடப்படுகிறது. ஆனால் இலங்கை அரசியல் அமைப்பின் படி இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடும் முறை உள்ளது.

இந்நிலையில் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தீர்மானமானது நம்பகத் தன்மையற்றதாகும்.

பி.திகாம்பரம் - நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்படும் என்ற தகவல் உண்மையற்றது. அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படுமாயின் எமது எதிர்ப்பை நாம் வெளியிடுவோம்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழில் தேசிய கீதம் பாடத் தடை: தமிழக முதல்வர் கண்டனம்




இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கீதம் ரத்து செய்த முடிவு ஈழத்தமிழர்கள் மனதை மேலும் புண்படுத்தும். இலங்கை அரசின் இந்த செயல் கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழர்கள் இந்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லவென அரசாங்கம் செய்தி விடுக்கிறதா? மனோ கணேசன் கேள்வி





தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்படுவது பெருமைக்குரிய ஒரு விடயம் என்பது அரசாங்கத்திற்கு புரியவில்லையா? அல்லது நீங்கள் இந்நாட்டை சேர்ந்தவர்கள் அல்லவென தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்தி விடுக்கின்றதா? என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது தடைசெய்யப்படுவது தொடர்பில் எழுந்துள்ள தேவையற்ற சர்ச்சைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதற்கு எதிராக அமைச்சரவையில் நடைபெற்ற கருத்து பரிமாற்றம் தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதை தடைசெய்வது தொடர்பாக அமைச்சரவையில் கருத்து பரிமாறப்பட்டது உண்மையாகும்.

ஆனால் இது தொடர்பில் அரச நிறுவனங்களுக்கும், பாடசாலைகளுக்கும் சுற்று நிருபம் அனுப்பப்படுவதற்கு இறுதி முடிவெடுக்கப்பட்டதா என்பது தொடர்பாக தமிழ் பேசும் மக்களுக்கு அரசாங்கம் உடனடியாக விளக்கமளிக்கவேண்டும்.

இறுதி முடிவு எடுக்கப்படாவிட்டாலும் கூட இத்தகைய முறையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெறுவதே தமிழ் பேசும் மக்களை ஆத்திரமடைய வைத்துள்ளது.

அமைச்சரவையில் இவ்விவகாரம் பேசப்பட்டப்பொழுது தமிழிலும், தேசிய கீதம் பாடப்படுவது தொடரவேண்டும் என்ற கருத்துகளை தெரிவித்த அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ராஜித சேனாரத்ன ஆகியோரை நாம் பாராட்டுகின்றோம்.

அதேவேளையில் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழ் பேசும் சமூகங்களைச் சார்ந்த அமைச்சர்களும் கலந்துகொண்டார்களா என்பதையும், கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்தார்களா என்பதையும் அறிந்துகொள்வதற்கு தமிழ் பேசும் மக்கள் ஆவலாக இருக்கின்றார்கள்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் தேசிய கீதம் இரண்டு மொழிகளிலும் பாடப்படுவதில்லை என்று கூறுவதே அடிப்படையில் ஒரு தவறான தகவலாகும்.

உலகில் முன்னணி நாடுகளில் ஒன்றான கனடாவில் தேசிய கீதம் ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் உத்தியோகப்பூர்வமாக பாடப்படுகின்றது.

ஆரம்பத்தில் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட கனடிய தேசிய கீதம் பிறகு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் விமல் வீரவன்ச தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதை தடுக்கும் முகமாக எமது அயல் நாடான இந்தியாவை உதாரணம் காட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தியாவின் தேசிய கீதம் அந்நாட்டின் பெரும்பான்மையினர் பேசும் மொழியான ஹிந்தி மொழியில் பாடப்படுவதாக இவர் திருவாய் மலர்ந்துள்ளார்.

இது இவரது பெரும்பான்மை வாதத்தையும், அறியாமையையும் காட்டுகின்றது. உண்மையில் இந்தியாவின் தேசிய கீதம் வாங்களா மொழியில் பாடப்படுகின்றது. இந்தியாவின் சனத்தொகையை மொழி ரீதியாக வரிசைப்படுத்தினால், முதலில் இந்தியும், அடுத்து தெலுங்கும், மூன்றாவதாக தமிழும் இருக்கின்றன.

நான்காவதாக அதிகம் பேர் பேசும் வங்காள மொழியில் அமைந்துள்ள தேசிய கீதத்தை அனைத்து இந்தியர்களும் பாடுவது இந்தியாவின் பெருமையாகும்.

இந்தியாவில் 15 இற்கும் மேற்பட்ட தேசிய மொழிகள் இருக்கின்ற காரணத்தினால் அனைத்து மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படுவது சாத்தியம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் இரண்டே மொழிகளை கொண்டுள்ள இலங்கையில் இது நீண்டகாலமாகவே சாத்தியமாகியுள்ளது. இந்த பெருமைக்குரிய விடயத்தை தகர்த்து எறிந்து இந்த அரசாங்கம் எத்தகைய தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்போகின்றது என்பது கடளவுக்குத்தான் வெளிச்சம். இதை இந்நாட்டில் உள்ள தமிழ் பேசும் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
மேலும் இங்கே தொடர்க...

Dec 12, 2010

மெக்சிகோ துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் பலி

மேற்கு மெக்சிகோவில் இரு குழுவினரிடையே இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜெலிஸ்கோ நகரில் வருடாந்த மத நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நேருக்கு நேர் துப்பாக்கிப்பிரயோகம் நடைபெறுகையில் பொதுமக்கள் அச்சத்துடன் பாதுகாப்பு தேடி ஓடியுள்ளனர். இதன்போது சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையே ஏற்படும் மோதல் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

Dec 10, 2010

கொழும்பு துறைமுகத்தில் 50 கிலோ ஹெரோயின் மீட்பு



கொழும்பு துறைமுகத்தில் 50 கிலோ நிறையுடைய ஹெரோயினை போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பிரிவினர் சற்றுமுன்னர் கைப்பற்றியுள்ளனர்.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிசிற மென்டிஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேகத்தின்பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

சட்டவிரோதமாக நீரைப் பெறுவதனால் 2.7 பில்லியன் ரூபா நஷ்டம்

சட்டவிரோதமாக நீரைப் பெற்றுக் கொள்வதனால் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு வருடமொன்றுக்கு 2.7 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகின்றது என நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

''பிரதான நீர்விநியோகக் குழாய்களில் இருந்து சட்டவிரோதமான முறையில் நீர்பெற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர்சோதனை நடவடிக்கைளின்போது சட்டவிரோத நீர்ப்பாவனையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர் மற்றும் நீர்விநியோக நடவடிக்கைகளுக்கு கடுமையான சட்டதிட்டங்களை வகுப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மனித உரிமைகள் தினத்தைப் பிரகடனம் செய்ததையடுத்து கடந்த 62 ஆண்டுகளாக மேற்படி தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல பாகங்களிலும் பல்வேறு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மீது சர்வதேச மட்டத்தில் யுத்தக் குற்ற விசாரணை வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச அளவிலான விசாரணை அவசியம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானிய "சனல் 4' தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பப்பட்ட 5 நிமிட காணொளியைக் கொண்டு சர்வதேச மட்டத்தில் ஒரு விசாரணையை முன்னெடுக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சென்ற வருடம் ஒளிபரப்பப்பட்ட கானொளியின் நீட்டிப்பு கானொளி என குறிப்பிட்ட கானொளி ஒளிபரப்பப்பட்டுள்ளது.

அக் கானொளியில் உள்ள ஒரு பெண்ணின் உடல் விடுதலைபுலிகள் இயக்கத்தின் தொலைக்காட்சி சேவையில் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவினுடையது என சர்வதேச தமிழ் ஊடகங்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயின் ஒளிபரப்பப்பட்ட கானொளி சித்தரிக்கப்பட்டவை என இலங்கை அரசு தெரிவிக்கிறது என ஏபி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

Dec 9, 2010

கிளிநொச்சியில் 22,000 பேர் பாதிப்பு; 1000 ஏக்கர் வயல் நிலம் வெள்ளத்தில் நாநூறுக்கும் மேல் கால்நடைகள் உயிரிழப்பு


அடைமழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 5628 குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 564 பேர் பாதிக்கப் பட்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் நேற்று தெரிவித்தார்.

இம் மழை காரணமாக சுமார் ஆயிரம் ஏக்கர் வயல் நிலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் நானூறு கால் நடைகள் உயிரிழந்திருப்பதாகவும் அவர் குறிப் பிட்டார்.

ஜனாதிபதி செயலணியின் அங்கீ காரத்தோடு மழையால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்தும் சமைத்த உணவு, நிவாரணம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; அடைமழையினால் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் 2327 குடும்பங்களைச் சேர்ந்த 8010 பேரும், கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் 2612 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 789 பேரும், பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் 689 குடும்பங் களைச் சேர்ந்த 2786 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 764 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாய், நுளம்பு வலைகள், சவர்க்காரம், குழந்தைகளுக்கான உடுதுணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன என்றார்.

அடைமழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குளங்கள் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஆராய அமைச்சரவை உப குழு


வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஆராயவென ஜனாதிபதி தலைமையிலான 15 பேர் கொண்ட உயர்மட்ட அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அமைச்சரவை உப குழுவை நியமித்துள்ளார். பிரதமர் உள்ளிட்ட 15 அமைச்சரவை அமைச்சர்களை உள்ளடக்கிய இவ்வுபகுழு, வாழ்க்கைச் செலவு மற்றும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற பொருளாதார அபிவிருத்தி பணிகள் ஊடாக மக்களுக்கு கிடைக்கும் பலன்கள், எவ்வகையான நிவாரணங்கள் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என்பது பற்றியும் ஆராய்ந்து பரிந்துரை செய்யும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த உயர்மட்ட அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இச் சமயத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கடற் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்

கடற் பாதுகாப்பு மற்றும் கடற் படை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் 21 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டதோடு, 6 கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இலங்கையின் கடற் படையின் 60 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்த ஏற்பாடுகள் நடைபெற்றன.

இதில் பிரதம அதிதிகளாக இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

தேடப்படும் குற்றவாளி அல்ல தேவானந்தா"







இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1986 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சென்னை சூளைமேடு துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அவ்வழக்கு நடைபெறும் நான்காவது அமர்வு நீதிமன்றத்திடம் அது விடுத்துள்ள கைது வாரண்ட்டைத் திரும்பப் பெறுமாறு டக்ளஸ் தேவானந்தா கோரவேண்டும் என்றும், தவிரவும் முன் ஜாமீன் கோர உயர்நீதிமன்றத்தை அவர் அணுகலாம் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டது.

ஒருவர் கொல்லப்பட்ட சூளைமேடு வழக்கு விசாரணையின்போது ஆஜராகாத தேவானந்தா தேடப்படும் குற்றவாளி என் 1990ஆம் ஆண்டில் அமர்வு நீதிமன்றம் அறிவித்தது.

அதைச் சுட்டிக்காட்டி சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயுடன் இந்தியா வந்திருந்த டக்ளஸ் தேவானந்தாவைக் கைதுசெய்யவேண்டும் என்று ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய பரபரப்பு ஏற்பட்டது.

நடவடிக்கை ஏதும் எடுக்கப்படும் முன் இலங்கை திரும்பிய டக்ளஸ், தான் தேடப்படும் குற்றவாளி என்ற அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

தனது தீர்ப்பில் நீதிபதி அக்பர் அலி, "சூளைமேடு வழ்க்கில் டக்ளஸ் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற உத்திரவு வெளியிடப்பட்டபோது, அவர் இந்தியாவில் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, தேடப்படும் குற்றவாளியாக டக்ளஸ் தேவானந்தாவைக் கருத அவசியமில்லை. ஆனால் வழக்கு தொடர்கிற நிலையில் டக்ளஸ் கைது வாரண்ட்டைத் திரும்பப் பெறச்சொல்லி அமர்வு நீதிமன்றத்தை அணுகவேண்டும், முன் ஜாமீனுக்கு உயர்நீதிமன்றத்தை அணுகலாம்" எனத் தீர்ப்பளித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மக்கள் தற்போதுதான் நிறைய துன்பங்களை அனுபவிக்கின்றனர்: சிறிதரன்

வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் கடந்த காலங்களை விட தற்போது தான் அதிக துன்பங்களை அனுபவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

நடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால மற்றும் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறிதரன் எம்பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையற்றிய அவர்,

"கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தை விட தற்போது தான் மக்கள் அதிகளவு துன்பங்களை எதிர்கொள்கின்றனர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் இளைஞர்கள் யுவதிகள் மற்றும் வயோதிபர்கள் சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாடசாலைகள் இராணுவ ஸ்தலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்ச் சமூகத்தின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைகின்றன. மேலும் சனல் 4 தொலைக்காட்சியில் பல தமிழ் யுவதிகள் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதுவே ஒரு சிங்கள சமூகத்தில் நடைபெற்றிருக்குமாயின் நீங்கள் பொறுத்துக் கொண்டு இருப்பீர்களா?

தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசமான வட, கிழக்கில் அரசில் தீர்வு இல்லாமல் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. மேலும் நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பினரால் எதிர் கட்சிகளின் கருத்துக்கு ஆதரவு வழங்குவது இல்லை. சத்தம், கூச்சல் போட்டு சபை நடவடிக்கைகளைக் குழப்புகின்றனர். இது ஜனநாயகத்திற்குப் பொறுத்தமற்றதொரு செயலாகும்" எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

Dec 6, 2010

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் இரத்து

இலங்கைக்கான 3 நாள் உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எலஸ்டேயார் பர்ட்டின் விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் டொமினிக் வில்லியம் தெரிவித்துள்ளார்.

மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை நாளை செவ்வாய்க் கிழமை ஆரம்பிக்கவிருந்தார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அழுத்தங்கள் காரணமாகவே அவர் இலங்கை விஜயத்தை இரத்துச் செய்துள்ளார் என டொமினிக் வில்லியம் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கடற்படையினரால் தாக்கப்பட்ட பஸ் சாரதி மன்னார் வைத்தியசாலையில் அனுமதி

மடுவில் இருந்து மன்னாருக்கு பயணிகளை ஏற்றி வந்துகொண்டிருந்த தனியார் பஸ் சாரதி ஒருவர் கடற்படைக் குழுவினரால் நேற்று தாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆரோக்கியம் தவப்பிரகாசம் (வயது-41) என்பவரையே கடற்படைக் குழுவினர் தாக்கியுள்ளனர். முருங்கன் இசைமாளத்தாழ்வு பகுதியில் வைத்து கடற்படை குழுவினரால் இவர் வழிமறிக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளார். பயணிகள் இவரைக் காப்பாற்றி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தாக்கதலுக்குள்ளான சாரதி ஆ.தவப்பிரகாசம் கருத்துத் தெரிவிக்கையில்,

"மடுத்திருத்தலப் பகுதியில் இருந்து நேற்று மாலை 2.15மணியளவில் சுமார் 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்தோம். இதன் போது முருங்கன் இசைமாளத்தாழ்வு பகுதியூடாக வந்து கொண்டிருந்த போது பஸ்ஸுக்குப் பின்புறமாக கடற்படையினரின் டிரக் ரக வாகனம் வந்துகொண்டிருந்தது. டிரக் வண்டி பஸ்ஸை முந்திக்கொண்டு செல்ல வழிவிடப்படாததால், சுமார் 5 கடற்படை வீரர்கள் என்னைத் தாக்கினர்" என்றார்.

இது தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சாரதி தாக்கப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளாப்படாவிட்டால் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

டெங்கு நோயை பரப்பும் அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: மைத்திரிபால சிறிசேன

டெங்கு நோய் பரவுவதற்கு வழியேற்படுத்தும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

''இதுதொடர்பான அறிவுறுத்தல்கள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெங்கு நோய் பரவுவதற்கு 90 சதவீதம் அரச நிறுவனங்கள் காரணமாக அமைந்துள்ளன என தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் போது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களின் சுற்றுச் சூழலை 2 வாரகாலத்திற்குள் சுத்தப்படுத்தாவிடில் ஊடகங்களின் மூலம் பெயர்கள் வெளியிடப்படும்.

அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 13 பாடசாலைகள் டெங்கு நோயை பரப்பக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது" என அமைச்சர் மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் வினாடிக்கு 760 கனமீற்றர் நீர்வெளியேற்றம்

பல வருடங்களின் பின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இன்று காலை முதல் ஒரு வினாடிக்கு 760 கனமீற்றர் நீர்வெளியேற்றப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மலையகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பிரதான நீர் தேக்கங்கள் அனைத்தும்; நிறைந்துள்ளன. கண்டி விக்டோரியா நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள விக்டோரியா நீர் தேக்கத்தை பார்வையிடுவதற்காக பெரும் தொகையான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

நீருக்கடியில் சுவாசிக்க புதிய நீச்சல் உடை : அமெரிக்காவில் கண்டுபிடிப்பு


லண்டன் :ஆழ்கடல் செல்லும், "ஸ்கூபா டைவிங்' வீரர்களும், மீன்களைப் போல் சுவாசிக்கும் வகையில் புதிய நீச்சல் உடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள உயிரினங்கள் மற்றும் புதைபொருட்கள் பற்றி, "ஸ்கூபா' வீரர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். நீருக்கடியில் சுவாசிப்பதற்காக, ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதால், ஆய்வுப் பணிகளை முழுமனதாக நடத்த முடியாது. இதை கருத்தில் கொண்டு, "ஸ்கூபா' வீரர்களும், நீருக்கடியில் சுவாசிக்கும் விதமாக, புதிய நீச்சல் உடையை அமெரிக்காவைச் சேர்ந்த அர்னால்டு லான்ட் கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து அர்னால்டு லான்ட் கூறியதாவது: ஆழ்கடல் செல்லும், "ஸ்கூபா' வீரர்கள் சுவாசிப்பதற்காக, இந்த நீச்சல் உடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, திரவ நிலையில் உள்ள சிறப்பு கரைசல் (பெர்ப்ளூரோ கார்பன்) பயன்படுகிறது. இந்த கரைசலில் பெருமளவு ஆக்சிஜன் கலந்திருக்கும். இதனை அணிந்துள்ள ஒருவரின் காது, மூக்கு மற்றும் நுரையீரல் பகுதிகளில் உள்ள ஆக்சிஜன் வெளியேறாமல் கட்டுப்படுத்தப்படும். சுவாசிக்கும்போது, ஆக்சிஜன் நிரம்பிய குமிழ்கள் திரவ நிலையில், மூக்கு வழியாக சென்று அவரது நுரையீரல் பகுதியை அடைகிறது. நுரையீரல் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு மூக்கு வழியாக வெளியேறாமல், ரத்தத்தில் கலந்து, கால்களில் உள்ள "பெமோரல்' நரம்புகளை வேகமாக இயக்க உதவும். சாதாரண காற்றை சுவாசிப்பது போன்ற உணர்வுதான் நமக்கு ஏற்படும். இவ்வாறு அர்னால்டு லான்ட் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவுக்கு சலுகை ஜெயிலர் அதிரடி சஸ்பெண்ட்


கொழும்பு : இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை, செய்தியாளர்களுடன் பேச அனுமதித்த ஜெயிலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. இவர், தளபதியாக இருந்த போது, ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில், இவருக்கு 30 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர், வெலிக்கடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மற்ற வழக்குகள் தொடர்பான விசாரணைக்காக, பொன்சேகா சிறையில் இருந்து அடிக்கடி கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுவது வழக்கம். சமீபத்தில் ஒரு நாள், இதுபோல் அவர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது, அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் பேச, அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பொன்சேகாவை, செய்தியாளர்களுக்கு பேச அனுமதி அளித்த ஜெயிலர் டுமிண்டா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், பொன்சேகாவை அழைத்துச் சென்ற சிறைத் துறை வாகனத்தின் டிரைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - பிரிட்டன் இடையே கசப்புணர்வு அதிகரித்தது


கொழும்பு : இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் பிரிட்டன் சுற்றுப் பயணத்தின் போது ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இதையடுத்து, பிரிட்டன் வெளியுறவுத் துறை உயரதிகாரி, தனது இலங்கை சுற்றுப் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷே, கடந்த வாரம் பிரிட்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, லண்டன் விமான நிலையம் முன் திரண்ட ஏராளமான தமிழர்கள், ராஜபக்ஷேவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது, போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, ராஜபக்ஷேவுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராஜபக்ஷேயின் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.

பிரிட்டனில் ராஜபக்ஷேவுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 3ம் தேதி, கொழும்பில் உள்ள பிரிட்டன் தூதரகம் முன், அரசு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இலங்கை வீட்டு வசதித் துறை அமைச்சர் விமல் வீரவன்சா தலைமையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பயங்கரவாதத்துக்கு ஆதரவாக பிரிட்டன் செயல்படுவதாகக் கூறி, அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இந்த சம்பவங்கள் காரணமாக, பிரிட்டன் - இலங்கை நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, பிரிட்டன் வெளியுறவுத் துறை துணைச் செயலர் அலஸ்டார் பட், தனது இலங்கை சுற்றுப் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார். இந்த வாரத்தில் அவர் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்வதாக இருந்தது.

இதுகுறித்து இலங்கையில் உள்ள பிரிட்டன் தூதரக இணையதளத்தில், "வெளியுறவுத் துறை செயலரின் சுற்றுப் பயண தேதியை மாற்றுவது குறித்து கடந்த சில வாரங்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

Dec 1, 2010

ராஜதந்திர உறவு அம்பலம் : சீனாவில் விக்கி லீக்ஸுக்குத் தடை

அமெரிக்க-சீன ராஜதந்திர உறவுகள் குறித்தான ரகசியத் தகவல்களை வெளியிட்ட விக்கி லீக்ஸ் இணையத்தளத்தை சீனா இன்று தடைசெய்துள்ளது.

வடகொரியா மோசமான குழந்தை என சீனா தெரிவித்துள்ளதாக ராஜதந்திரத் தகவல்களில் குறிப்பிடப்பட்டிருந்தன. இது மாத்திரமல்லாமல் அமெரிக்க – சீன உறவின் ரகசியங்கள் பலவும் வெளியாகியதாகப் பேசப்பட்டது.

இந்த ரகசிய ஆவணங்களால் சீனாவுக்கு வடகொரியாவுக்கும் இடையிலான நட்பு முறிவடையும் சாத்தியம் இருப்பதாகச் செய்திச் சேவைகள் பல சுட்டிக்காட்டியிருந்தன.

இந்நிலையில் விக்கி லீக்ஸ் இணையத்தளத்தை சீனா இன்று தடை செய்துள்ளது.

எனினும் தமது இணையத்தளம் சீனாவில் தடைசெய்யப்படவில்லை என விக்கி லீக்ஸ் கருத்து வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

Nov 24, 2010

பொன்சோகவிற்கு சிறையில் உடற்பயிற்சி கருவிகள்






இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு சிறையில் உடற்பயிற்சி கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழிக்க நடந்த சண்டையை தலைமை ஏற்று நடத்தியவர், முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் இவர் அதிபர் ராஜபக்ஷேவை எதிர்த்து போட்டியிட்டார். இதை தொடர்ந்து இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த ராணுவ கோர்ட் இவருக்கு 30 மாத சிறை தண்டனை அளித்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தற்கொலை படை தாக்குதலில் பொன்சேகா பலத்த காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட உடல் பாதிப்புகள் காரணமாக, தற்போதும் அவர் மருந்துகள் உட்கொண்டு வருகிறார். உடல் நலத்தை பேணுவதற்கு வசதியாக உடற்பயிற்சி கருவிகளை அவருக்கு வழங்கும் படி கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவருக்கு தற்போது உடற்பயிற்சி கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. பலத்த மழையினால் அவர் அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் தண்ணீர் கசிவதால் கூரையை பழுது பார்க்கும் பணி நடக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

அதிக வெப்பமாகும் ஏரிகள் : "நாசா' ஆய்வில் தகவல்

உலகம் முழுவதும் கடந்த 25 ஆண்டுகளாக ஏரிகள் சூடாகி வருவதாக "நாசா' ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் "நாசா' மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஸ்நீடர், சைமன் ஹூக் ஆகியோர் செயற்கைக் கோள் அளித்த விவரங்களை வைத்து, உலகம் முழுவதும் உள்ள 167 பெரிய ஏரிகளை ஆய்வு செய்தனர். கடந்த 85ம் ஆண்டு முதல் ஏரிகளின் வெப்பநிலை குறித்து ஆய்வு செய்த போது, சில ஏரிகள் 1.8 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஏரிகள் அதிகம் வெப்பமடைந்து காணப்படுகின்றன. சைபீரியா, மங்கோலியா, வடக்கு சீனா பகுதிகளில் மிதமான வெப்பம் அதிகரித்துள்ளது. பூமி கோளத்துக்கு தெற்குப் பகுதியில் உள்ள ஏரிகளில் அவ்வளவாக வெப்பம் உயரவில்லை. வடக்கு ஐரோப்பாவில் ஏரிகளை சுற்றியுள்ள காற்று பகுதியை விட, தண்ணீர் பகுதியில் வெப்பம் அதிகரித்துள்ளது. ஏரிகளின் வெப்பம் அதிகரிப்பதால் பாசி அதிகம் படிந்து, மீன் இனம் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு : கருணாநிதி கிருஷ்ணாவிடம் வலியுறுத்து

இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் அரசியல் தீர்வொன்றுக்கு வலியுறுத்துமாறு தமிழக முதல்வர் மு.கருணாநிதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருடி;ணாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நாளை வருகை தரவுள்ளார்.

"மீளக்குடியமர்த்தப்படாமல் 30 ஆயிரம் மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். இது கவலைக்குரிய விடயமாகும். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இவ்விடயம் தொடர்பாக கவனத்தில் எடுக்க வேண்டும்" என மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தினை உரிய காலத்திற்குள் பூர்த்தி செய்து கொடுக்கும்படி இந்திய அரசிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வத்தளையில் தமிழ் வர்த்தகர் ஒருவரை காணவில்லை

வத்தளையில் பகுதியில் வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் தலைமயிர் வெட்டுவதற்காக சென்ற வர்த்தகர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.

வத்தளை அல்விஸ் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய கணபதி குணரத்தன என்பவரே காணமல் போயுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

Nov 22, 2010

தமிழர் பகுதிகளில் சேவையைக் குறையுங்கள்: செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இலங்கை அரசு கட்டளை


கொழும்பு,நவ.21: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் இப்போது செய்துவரும் சேவையைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இலங்கை அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

இதை சங்கத்தின் பத்திரிகைத் தொடர்பாளர் சரஸி விஜரத்ன கொழும்பில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

சேவையை ஏன் குறைக்க வேண்டும், சேவை இனி தேவைப்படவில்லையா, அந்தச் சேவைகளை இலங்கை அரசே செய்ய மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிட்டதா என்ற விளக்கம் ஏதும் இல்லாமல், சேவை செய்தது போதும் என்று மட்டும் அரசு அழுத்தம்திருத்தமாகச்

சொல்லியிருக்கிறது.

தமிழ் ஈழ விடுதலைக்காகப் போராடிய போராளிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான சண்டை கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வந்தது. அப்போதெல்லாம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு ஒரே ஆறுதலாக, உற்ற துணையாக களத்தில் நின்றது இந்த செஞ்சிலுவைச் சங்கம்தான்.

வாழைச் சேனையில் சின்னஞ்சிறு குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருந்த இல்லத்தை, விடுதலைப் புலிகளின் பாசறை என்று கூறி வான்வழித் தாக்குதலை இலங்கை விமானப்படை நடத்தியபோது உயிரிழந்தவர்களின் சடலங்களை அகற்றவும் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்யவும் ஓடோடி வந்தது இந்த செஞ்சிலுவைச் சங்கம்தான். அந்த ஒரு சம்பவம் என்று மட்டும் இல்லை, தமிழர்கள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சம்பவத்திலும் உறுதுணையாக இருந்தது இந்தச் சங்கம்தான். இது சர்வதேச அமைப்பு. இதில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் சிங்களர்களும்

அடங்குவர்.

முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள், முகாம்களிலிருந்து ஊர் திரும்பியவர்களுக்கு அவர்களுடைய பழைய வீடுகளே கிடைத்தனவா, அவர்கள் பழையபடி வேலையில் ஈடுபட முடிகிறதா, தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என்பதெல்லாம் விவரமாக எதுவும்

தெரிவிக்கப்படவில்லை.

அரசு சாராத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் இலங்கை அரசிடம் தகவல் தெரிவித்து பதிவு செய்து கொண்ட பிறகே சேவையைத் தொடங்க வேண்டும், அது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் பொருந்தும் என்று இந்த மாத முற்பகுதியில் இலங்கை அரசு கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. பதிவு செய்யாமல் தவிர்க்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் அரசு கூறியிருக்கிறது. இதைப் பார்க்கும்போது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இனி தொடர்ந்து கண்காணிப்புக்கும் அரசின் கெடுபிடிக்கும் உள்ளாகும் என்பது தெளிவாகிறது.

2009 மே மாதம் விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிவுக்கு வந்தது. போராளிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான போரில் சுமார் 70,000 பேர் இறந்ததாக அரசின் தகவல் தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பது

குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

Nov 15, 2010

தண்ணீர் மட்டுமல்ல சந்திரனில் வெள்ளியும் கண்டுபிடிப்பு





பூமியில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரத்தில் உள்ளது சந்திரன். மனிதர்கள் வாழ்வதற்கு மிகத் தேவையான காற்று, தண்ணீர் ஆகியவை இல்லை. எனவே, சந்திரனுக்கு செல்வது இயலாத செயல் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது.

சமீபத்திய ஆய்வுகள் மூலம் சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பது அறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்ணீர் மட்டும் இல்லாமல், வெள்ளி, கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட தனிமங்களும் அதிகளவில் அங்கு கலவையாக இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா, மனிதனை சந்திரனுக்கு அனுப்ப முயற்சி செய்து வந்தன. இதில், அமெரிக்கா முதலில் வெற்றி பெற்றது. கடந்த நூற்றாண்டில், 1969ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி அமெரிக்க விண்வெளி வீரர் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் இறங்கி சாதனை படைத்தார். இதை தொடர்ந்து, பல முறை விண்வெளி வீரர்கள், ஆளில்லாத ராக்கெட்டுகள் பறக்க விட்டு சந்திரனில் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2008ம் ஆண்டு அக்டோபரில் சந்திரனுக்கு சந்திரயான் -1 என்ற ராக்கெட்டை இந்தியா வெற்றிகரமாக அனுப்பி சாதனை செய்தது. சந்திரனை சுற்றி வந்த சந்திரயான்-1, பல்வேறு கோணங்களில் சந்திரனை படம் எடுத்து அனுப்பியது. அதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், சந்திரனில் தண்ணீர் உள்ளது என்று கண்டுபிடித்தனர்.இந்நிலையில், சந்திரனில் அதிகளவில் தண்ணீர் உள்ளது என்று தெரிய வந்தது. மேலும், பல்வேறு தனிமங்களும் உள்ளன என்றும், குறிப்பாக, வெள்ளி, கார்பன் டை ஆக்சைடு ஆகியவை அதிகளவில் கலவையாக இருப்பது உணர்வு செயற்கைக்கோளை கடந்த ஆண்டு சந்திரனில் மோத செய்து அதன் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ததன் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்து சந்திரனை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கூறியதாவது:சந்திரனில் லேசான ஹைட்ரோ கார்பன்கள், கந்தகம், கார்பன் டை ஆக்சைடு ஆகியவை இருப்பது உணர்வு செயற்கைக்கோள் மோதியதில் தெரிய வந்துள்ளது. சந்திரனில் காணப்படும் பெரிய பள்ளங்களில் தண்ணீர் அதிகமாக இருப்பதும், அந்த பள்ளங்களின் பரப்பில் 5.6 சதவீதம் தண்ணீர் இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது. இதுவரை சந்திரனைப்பற்றி தெரியாத நிலையில், உணர்வு செயற்கைக்கோள் சந்திரனின் இருட்டுப் பகுதியில் மோதிய வேகத்தில் 10 கி.மீ., உயரத்திற்கு தூசிகள் கிளம்பின. இதில், உறை நிலையில் நிரந்தரமாய் தண்ணீர் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. சந்திரனின் தென் துருவப் பகுதியில் காணப்படும் "கேபஸ்' என்ற பெரும் பள்ளத்தில் இருந்து எழும் தூசிகள் குறித்த தகவல்களை அறிய உலகின் பல இடங்களில் உள்ள தொலைநோக்கிகள் செயல்பட்டு வருகின்றன. சந்திரனில் பல முறை விண்கற்கள் மோதி பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, சந்திரனில் காணப்படும் நூறு கிலோ மீட்டர் அகலம் நான்கு கி.மீ., ஆழம் உள்ள பெரும் பள்ளத்தில் ராக்கெட்டை மோத விட்டு ஆய்வு செய்ய நாசா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக 585 கிலோ எடையில் ராக்கெட் தயாரிக்கப்படுகிறது. இந்த ராக்கெட், சந்திரனில் காணப்படும் பெரும் பள்ளத்தில் இரண்டு மீட்டர் ஆழத்தில் மோதுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

த்தத்தை தவிர்க்க பிரபாகரனிடம் விண்ணப்பித்தோம் ஆனால் ஏமாற்றமே: தயா மாஸ்டர்

ஒரு கட்டத்தில் நாங்கள் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான பாலகுமாரன் ஊடாக புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு யுத்தத்தை தவிர்க்கவும் உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்குமாக விண்ணப்பம் ஒன்றை அனுப்பியிருந்தோம். அந்த கடிதத்தின் ஒரு பிரதியை பாலகுமாரன் என்னிடம் அப்போது காட்டியிருந்தார். ஆனால், விண்ணப்பங்களை அனுப்பிய போதும் ஏமாற்றமே அறிகுறியாக இருந்தது என்று புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் தேசிய நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்து கொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு சாட்சியமளித்த தயா மாஸ்டர் மேலும் கூறியதாவது :

நான் ஒரு காலத்தில் புலிகளின் ஊடகத்துறையில் இணைப்பாளராகச் செயற்பட்டேன். புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் கீழே இந்த ஊடகப் பிரிவு வருகின்றது. புலிகள் அமைப்புக்கும் அரசாங்கத்திற்குமிடையில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்களில் அந்த அமைப்பை விட்டு நான் வெளியேறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். காரணம் பேச்சுவார்த்தைகளை முறிப்பதன் மூலமும் புறக்கணிப்பதன் மூலமும் மக்களின் பாதிப்புக்களை தவிர்க்க முடியாது என நான் உணர்ந்திருந்தேன். அதனால்தான் அவ்வாறான தீர்மானமொன்றை எடுத்தேன்.

போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது எண்ணிலடங்காத மக்கள் கொல்லப்பட்டனர். இரு தரப்பினருக்கு மத்தியிலும் சிக்கிய நிலையில் பலர் உயிரிழந்தனர். எனது குடும்பமும் நானும் பல தடவைகள் மரணத்தின் விளிம்பிற்கே சென்று விட்டு வந்தோம். 2009 ஜனவரியில் போர் எங்கு நடைபெறும் என்ற வரையறை இல்லாமலிருந்தது. அதன் பரிமாணம் விரிவடைந்தது. மக்கள் அங்கலாய்த்தவர்களாகக் காணப்பட்டனர். உயிரிழப்புக்கள் இடம்பெற்றன.

ஒவ்வொருவரும் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதற்கு முயற்சித்தமையே உண்மை நிலைமையாகும். அந்தக் காலகட்டங்கள் வாழ்வில் மறக்கமுடியாதவை. தப்புவதற்கு முயற்சித்த பல்லாயிரக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். அந்தச் சந்தர்ப்பங்களை நினைத்து வருந்துகிறேன்.

எப்படியோ போன உயிர்களைத் திருப்பிப்பெற முடியாது. ஒரு கட்டத்தில் நாங்கள் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான பாலகுமாரன் ஊடாக பிரபாகரனுக்கு யுத்தத்தை தவிர்க்கவும் உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்கும் ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தோம்.ஆனால், விண்ணப்பங்களை அனுப்பிய போதும் ஏமாற்றமே அறிகுறியாக இருந்தது என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா விடயத்தில் அரசாங்கத்துக்கு வழிசமைத்துள்ள ஆங்சான் சூகியின் விடுதலை : ரணில்

மியன்மாரை விட ஜனநாயக குணாதிசயங்கள் நிறைந்த நாடாக இலங்கை திகழ்கின்றபோதிலும், அந்த குணாதிசயங்கள் இன்றைய அரசாங்கத்திலும் இந்நாட்டிலும் இருக்கின்றனவா? என்பதை பரீட்சித்துப் பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் இராணுவ ஆட்சியின் 15 வருட வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவியான ஆங் சான் சூகி மீதான இந்த நடவடிக்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடயத்தில் இன்றைய அரசாங்கத்துக்கு ஒரு வழிகாட்டலாக அமைந்துள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள விஷேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

மியன்மாரின் ஆங் சான் சூகி அமைதிக்கான நோபல் பரிசு வென்றவராவார். இவருக்கு விதிக்கப்பட்டிருந்த வீட்டுக் காவல் சிறையிலிருந்து அவர் விடுதலை பெற்றிருப்பதானது ஜனநாயகத்தை மதிக்கின்ற உலக மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

கடந்த 21 வருட இராணுவ ஆட்சிக் காலத்தில் சுமார் 15 வருடங்கள் வீட்டுக் காவல் சிறையில் வைக்கப்பட்ட இவர் தமது சுதந்திரத்தைப் பறிக்கப்பட்டவராகவே இருந்தார்.

நாம் உட்பட உலகில் ஜனநாயகத்தை விரும்புகின்ற சகலரும் வெவேறு விதங்களில் மியன்மார் அரசாங்கத்திடம் வலியுறுத்தி வந்த நிலைமை காணப்பட்டது.

இருப்பினும் இந்த வலியுத்தல்களையும் கேளிக்கைகளையும் மியன்மார் அரசாங்கம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

எது எப்படியிருப்பினும் இறுதியில் ஜனநாயகமே வெற்றி பெற்றுள்ளது. நாட்டின் சுயாதிபத்தியம் என்ற போர்வையில் ஜனநாயகத்தை முடக்குகின்ற ஆட்சியாளர்களை நாம் இனம்கண்டு கொள்ள வேண்டும்.

சுயாதீனம் என்று கூறி மக்களின் சுயாதீனத் தன்மைக்கு எதிராக செயற்படுவதானது ஒரு நிர்வாகத்தின் சுயாதீன ஆட்சியாக இருக்க முடியாது.

விடுதலை பெற்றுள்ள ஆங் சான் சூகி சுதந்திர உலகில் பிரவேசித்து ?? ஜனநாயக ரீதியிலான ??? சகல அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து மியன்மாருக்கு தேவையான ஜனநாயகம் தொடர்பில் அவரது பயணம் அமைய வேண்டுமென்பது எமது பிரார்த்தனையாகும். உலகின் பல்வேறுபட்ட நாடுகளில் பல அரச தலைவர்கள் தமது சந்தர்ப்பவாத அரசியலுக்காக ஜனநாயகத்தை மிதித்து ஆட்சி நடத்துவதற்கு முயற்சிக்கின்றனர். எனினும் அவ்வாறான முயற்சிகள் சதாகாலத்தும் இல்லை என்பதை இந்த சம்பவத்தினூடாக மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம். மியன்மாரிலும் பார்க்க இலங்கை ஜனநாயகம் நிறைந்த நாடாகும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற நாடாகவும் எமது நாடு இருக்கின்றது. எனினும் அது இன்றைய நிலை பரீட்சித்துப் பார்க்க வேண்டிய சூழலுக்குள் தள்ளி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் ஆட்சியாளர்களுக்கும் மேற்படி ஆங் சான் சூகியின் விடுதலை ஒரு வழிகாட்டலாக அமைந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்க அரசு தவறியுள்ளது : சஜித்

சஜித் பிரேமதாஸ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் துரித நிவாரண சேவை களை வழங்குவதற்கு தவறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாஸ, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான அரிசியினை வழங்கினார்.

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஐ.தே.கட்சி எம்.பி.யான சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினர் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்ததுடன் நிவாரணங்களையும் வழங்கினர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

கடந் புதன்கிழமை இரவு 8.00 மணி முதல் வியாழக்கிழமை காலை 8.00 மணிவரையிலான 12.00 மணித்தியாலங்களாக பெய்த கடும் மழையினால் நாட்டின் பல பாகங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் மேல் மாகாணமே அதிக பாதிப்புக்குள்ளானது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மாகாணத்தில் இவ்வெள்ளத்தத்தினால் 70 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு அரசாங்கம் துரித நிவாரண சேவைகளை வழங்கவில்லை.

நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதனை பார்த்துக்கொண்டு ஒரு ஓரத்தில் இருக்க முடியாது. அம்மக்களின் சுகதுக்கங்களில் பங்கெடுத்து எங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ரிஸானாவின் மன்னிப்புக்கு வீட்டு எஜமானருடன் கலந்து பேசுங்கள்: சவூதி மன்னர்

சவூதி அரேபியாவில் ரிஸானா நபீக் என்ற பணிப்பெண் பணிபுரிந்த வீட்டு எஜமானருடன் கலந்துபேசி ரிஸானாவுக்கு பொது மன்னிப்பைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ், அந்நாட்டின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

மரண தண்டனையிலிருந்து ரிஸானாவை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அனுப்பிய கருணை மனுக் கோரிக்கைகளையடுத்தே சவூதி மன்னர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

மூதூரைச் சேர்ந்த பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கிற்கு ரியாத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இருந்தபோதும் பல்வேறு காரணங்களால் அவருக்கு மன்னிப்பளிக்குமாறு ஹொங்கொங்கை தளமாக கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, நியூயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஜெனிவாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை என்பனவும் பல்வேறு புத்திஜீவிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்விடயத்தை ராஜதந்திர ரீதியில் அணுகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்தது. இதனடிப்படையில், ரிஸானாவுக்கு கருணைகாட்டுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸிற்கு கடிதமொன்றை அனுப்பினார். ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரரக அதிகாரிகளினால் மன்னர் மாளிகையிடம் ஒப்படைக்கப்பட்ட இக்கடிதம் தொடர்பாக சவூதி மன்னர் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சவூதி சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு மன்னிப்பை பெற்றுக் கொடுப்பதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும் வேறுசில காரணங்களினாலும், ரிஸானா விடயத்தில்சவூதியின் நிலைப்பாடு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எவ்வாறிருந்தபோதிலும் அங்கிருந்து கிடைக்கும் பிரதிபலிப்புகள் சாதகமானவையாக தோன்றுவதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கவும் விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்குமாக, அவர் பணிபுரிந்த வீடு எஜமானரும் மரணித்த குழந்தையின் பெற்றோருமாகிய அல் ஒடாபி தம்பதிகளுடன் இது விடயமாக கலந்துரையாடுமாறு சவூதி அதிகாரிகளுக்கு மன்னர் பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் பாதிக்கப்பட்ட பெற்றோர் சம்மதிக்கும் பட்சத்தில் இரத்த உறவுக்கான நஷ்ஈட்டுத் தொகையை வழங்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் லிட்ரோ கேஸ் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

'லிட்ரோ கேஸ்' நிறுவனம் இலங்கையில் தனது சேவையை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்றது என அரசாங்க வர்த்தக நிலையத் திணைக்கள இயக்குனர் பி.எம்.எஸ். படகொட தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

" எல்.பி கேஸின் பங்குகளில் 49 வீத பங்குகளை இலங்கை இன்று உத்தியோகபூர்வமாக முழுமையான உரிமை பெறுகிறது. எல்.பி கேஸின் பெயர் லிட்ரோ கேஸாக மாற்றப்பட்டதை தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் இன்று தெரிவு செய்யப்படுவர்.

லிட்ரோ கேஸ் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் உடைமையாக்கபட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது " என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

லெப்டோஸ்பைரோஸிஸ் எனும் எலிக்காய்ச்சல் நாடளாவிய ரீதியில் தீவிரமாக பரவி வருகின்றது என தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வருடம் எலிக்காய்ச்சலினால் 89 பேர் உயிரிழந்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 627 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மேற்படி பிரிவின் புள்ளிவிபர அறிக்கை தெரிவிக்கின்றது.

எலிக்காய்ச்சலினால் ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் அதிகளவு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வயல்வெளிகளில் இருந்து எலிக்காய்ச்சல் நேரடியாக பரவுகின்றது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகளாவர். இது தொற்றுநோய் அல்ல. ஆனால் ஒரு மிருகத்திலிருந்து இன்னொரு மிருகத்திற்கு பரவும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஆசியாவிலேயே வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நடாக இலங்கை உள்ளது : விமல்

ஆசியாவிலேயே மிக வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக இலங்கை இருப்பதாக வீடமைப்பு மற்றும் பொது சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கண்டி சிட்டி சென்டர் நிலையத்தில் இடம் பெற்ற தேசிய உணவுகளைப் பிரபல்யப்படுத்தும் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதயாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த விமல், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் போது தேசிய உற்பத்திகளை ஊக்குவிக்கும் விதத்தில் பல பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளதாகக் கூறினார்.

அத்துடன் இன்றைய இலங்கைக்கும் முன்னனைய இலங்கைக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. இன்று நாம் வாழும் நாடு ஒரு புதிய நாடு. பல வருடங்களாக எம்மை வாட்டிய யுத்தததை முடிவுக்கு கொண்டுவந்த பின் உருவாக்கப்பட்டுள்ள அமைதியான நாடு இது வாகும்.

இவ்வாறான பண்புகளைக் கொண்ட ஒரு நாட்டில் வாழும் குடிமக்களுக்கு பல கடமைகள் உண்டு. தேசிய உணர்வுகளுடன் கூடிய தேசிய உற்பத்தியை அதிகரிக்கும் அரச திட்டத்திற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். கோதுமை மா இல்லா விட்டால் எம்மால் வாழ முடியாது என்ற கோட்பாட்டை சிலர் முன்வைக்கின்றனர். ஆனால் இது ஒரு மனோ நிலையாகும். தற்போது எமது பேக்கரிகளில் அரிசி மாவை பாவித்து பாண் தயாரிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

எனவே அரிசி மாவை கோதுமை மா போன்று மெதுமையாக மாற்றக் கூடிய மத்திய நிலையங்களை நாம் ஆரம்பித்துள்ளோம். எனவே வெகு விரைவில் அரிசி மா பேக்கரிகள் இயங்கத்தொடங்கும்.

இலங்கையில் உண்மையான தேசிய நோக்குள்ள அரசாங்கமே தற்போதே உள்ளது. நாட்டின் அனைத்து துறையிலும் தேசியத்துவத்தை முன்னெடுக்க வேண்டும். விவசாயத்தறையில் இரசாயன பசளை பாவிப்பதையும் நிறுத்த வேண்டும்;;. என்றும் அவர் கூறினார்.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கனாயக்கா மத்திய மாகாண விவசாய அமைச்சர் நிமல் பியதிஸ்;;ஸ ஆகியோரும் இங்கு உரை நிகழ்த்தினர்.
மேலும் இங்கே தொடர்க...

பொது மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தக் கூடிய பரிந்துரையை ஆணைக்குழு முன்வைக்கும் : சி.ஆர்.டி. சில்வா

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாங்கள் மேற்கொண்ட விசாரணை அமர்வுகளின் போது பொது மக்கள் வெளியிட்ட பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தக் கூடிய வகையிலான பரிந்துரையை நல்லிணக்க ஆணைக்குழு முன்வைக்கவுள்ளது. காணாமற் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு பொதுதீர்வு காண்பது அவசியம் என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.

கற்றறிந்த பாடங்களும் தேசிய நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறையில் நடைபெற்ற போது அதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த நான்கு தினங்களாக யாழ். மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்ற நிலையில் நேற்றைய தினம் ஊர்காவற்றுறையில் அமர்வு இடம்பெற்றது. இதில் பொது மக்கள் பலர் சாட்சியமளித்தனர். இந்நிலையில் ஆணைக்குழுவின் தலைவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்:

உங்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றுக்குத் தீர்வு வழங்குவது தொடர்பில் நாங்கள் அக்கறையுடன் இருக்கின்றோம். கடந்த நான்கு தினங்களாக யாழ். மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்று நாங்கள் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தோம். இன்று (நேற்று) அமர்வுகளின் இறுதிநாளாகும். இம்மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் மக்கள் தங்கள் பிரச்சினைகளை எங்களிடம் எடுத்துக் கூறினர். எமது உணர்வுகளை உங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம்.

உங்கள் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தக் கூடியவாறான பரிந்துரைகளை அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பாகும். காணாமற் போனோர் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். உங்கள் பிரச்சினைகளை ஆராய்ந்து நாங்கள் அவற்றை மதிப்பிட்டு வருகின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைப்போம். 30 வருட கால பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது அவசியம்.
மேலும் இங்கே தொடர்க...

Nov 7, 2010

நகை வாங்குவதுபோல் நடித்து 25 பவுன் நகை திருடிய பெண் கைது: ரகசிய கேமரா காட்டிக்கொடுத்தது




வியாசர்பாடி மார்க்கெட் அருகே “மேத்தா ஜுவல்லரி” என்ற பெயரில் நகை கடை உள்ளது. தீபாவளியையொட்டி, தங்கநகை வாங்குவதற்காக நேற்று முன்தினம் இங்கு அதிக அளவில் கூட்டம் இருந்தது. ஏராளமான பெண்கள் நகையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு பெண் தங்க சங்கிலி, வளையல் ஆகியவற்றை திருடி ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்தார். இதை நகைக்கடை அதிபர் சம்பத்ராஜ் ரகசிய கேமரா மூலம் பார்த்தார். உடனே கடையின் கதவு மூடப்பட்டது. நகை திருடிய பெண்ணை கடை ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது வியாசர்பாடி நகைக்கடையில் 9 பவுன் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதுதவிர சர்மா நகரில் உள்ள ”மகேந்திரா ஜுவல்லர்ஸ்” என்ற நகை கடையில் நகை வாங்குவதுபோல் நடித்து 5 பவுன் மாலையை மடியில் மறைத்து வைத்து திருடியதாகவும் கூறினார்.

இதுதவிர மேலும் 11 பவுன் நகை திருடியதாகவும் தெரிவித்தார். அந்த பெண்ணிடம் இருந்து 25 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

அயனாவரத்தை சேர்ந்த அவளது பெயர் தாட்சாயணி (37) என்பதும், நகை கடைகளில் தொடர்ந்து கைவரிசை காட்டியதாகவும் கூறினார். அவளை வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர்.

இதுதவிர கொடுங்கையூர் நாராயணசாமி தெருவில் வசிக்கும் சந்திரசேகர் என்ப வருடைய வீட்டிலும் 7 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. வணிக வரித்துறை அதிகாரியான இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்றபோது, யாரோ வீட்டுக்குள் புகுந்து நகைகளை திருடி உள்ளனர்.

புதுவண்ணாரப்பேட்டை டி.எச். ரோட்டைச் சேர்ந்தவர் மாலா (37). விதவைப் பெண். இவரது கணவர் ஸ்ரீதர் கடந்த ஆண்டு இறந்து போனார்.

கணவரின் நினைவிடம் கல்பாக்கத்தில் உள்ளது. நேற்று அவரது நினைவு நாள். இதையொட்டி மாலா கணவரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்றிருந்தார்.

இரவில் வீடு திரும்பிய மாலா வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 20 பவுன் நகை மற்றும் ரூ. 30 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சென்னையில் விலை ஏற்றம் ஒரு முருங்கைக்காய் 10 ரூபாய்



சென்னைக்கு தினமும் ஒரு லாரி அளவுக்கு முருங்கைக்காய் விற்பனைக்கு வரும். ஆனால் இப்போது சீசன் இல்லாத காரணத்தால் முருங்கைக்காய் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. மழை காலமாக இருப்பதால் பூக்கள் உதிர்ந்து முருங்கைக்காய் விளைச்சல் குறைந்துள்ளதால் தற்போது குஜராத் மாநிலத்தில் இருந்து தான் கோயம்பேடுக்கு முருங்கைக்காய் வருகிறது.

தீபாவளிக்கு முந்தைய நாள் ஒரு முருங்கைக்காய் 6 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோ 60 ரூபாய்க்கு கிடைத்தது.

ஆனால் இன்று முருங்கைக்காய் கிலோ ரூ.100-க்கு விலை உயர்ந்து விட்டது. இதனால் ஒரு சிறிய முருங்கைக்காய் 10 ரூபாய்க்கும், நீட்ட முருங்கைக்காய் 15 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இதேபோல் தக்காளி கிலோ ரூ.16-க்கும், கேரட் ரூ.40-க்கும், அவரைக்காய் ரூ.40-க்கும் விலை உயர்ந்துள்ளது. முள்ளங்கி, நூல் கோல் இன்று மார்க்கெட்டில் இல்லை.

கடந்த 2 நாட்களாக லீவு நாள் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று கூட்டமே இல்லை. காய்கறி வாங்க ஆள் இல்லாததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

காசி மேட்டில் கழுத்தை அறுத்து ரவுடி படுகொலை; தீபாவளி விருந்துக்கு அழைத்து இன்னொரு ரவுடி வெறிச்செயல்


புளியந்தோப்பு பி.கே. காலனியில் வசித்து வந்தவர் துர்கைவேல் (வயது 28) பிரபல ரவுடி. இவர் மீது எண்ணூர், புது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியில் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று மாலையில் காசிமேடு மீன்பிடித்துறை முகம் கடற்கரையில் துர்கைவேல் கத்திகுத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.

மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசிங் விரைந்து சென்று துர்கைவேலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

கொலையுண்ட துர்கைவேல் இதற்கு முன்பு காசி மேடு காசிமாநகரில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடி பவுடர் ரவியுடன் இவருக்கு முன் விரோதம் இருந்து வந்தது. இதன் பின்னர் துர்கைவேல் புளியந்தோப்பில் குடியேறினார். ஆனால் பவுடர் ரவி, துர்கைவேல் மீதான பகையை மறக்காமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் இன்னொரு நண்பர் மூலமாக துர்கைவேலை தீபாவளி விருந்துக்காக புவடர் ரவி அழைத்துள்ளார்.

இதை நம்பி துர்கைவேல் காசிமேடு மீன்பிடிதுறை முகத்துக்கு சென்றார். அங்கு வைத்து புவுடர் ரவியும் அவனது கூட்டாளிகளும் துர்கை வேலை சரமாரியாக கத்தியால் குத்தினர். பின்னர் கழுத்தை அறுத்து அவரை கொலை செய்து கடலில் வீசியுள்ளனர்.

புவுடர் ரவியை போலீசார் கைது செய்தனர். கூட்டாளிகளான தேசப்பன், இன்னொரு தேசப்பன், கார்த்திக் 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட பவுடர் ரவி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனக்கும் துர்கைவேலுக்கும் தகராறு இருந்து வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு எனது படகை துளை போட்டு கடலில் மூழ்கடித்து விட்டான். இதனால் அவன் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எப்படியாவது தீர்த்து கட்டி விட வேண்டும் என்று திட்டமிட்டேன். எங்கள் திட்டப்படி நண்பர்கள் துர்கைவேலை அழைத்து வந்தனர். மது விருந்து கொடுத்து போதையில் இருந்த போது கழுத்தை அறுத்து கொன்றோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தேசத் துரோக வழக்கு: முஷாரபுக்கு நோட்டீஸ்

முன்னாள் அதிபர் முஷாரபுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு லாகூர் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2007-ம் ஆண்டு முஷாரப், நாட்டில் நெருக்கடிநிலையை பிரகடனப்படுத்தியது தேசத் துரோகம் என்று கூறி லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருக்கும் முஷாரப், இந்த வழக்கு விசாரணையில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இதை எதிர்த்து ஒருவர் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றத்தில் முஷாரப் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடுமாறு மனுதாரர் கோயிருந்தார். இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிமன்றம், முஷாரபுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
மேலும் இங்கே தொடர்க...

மழைக்காலம் முடிந்ததும் இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள்: ப.சிதம்பரம்

போரினால் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டும் பணிகள் மழைக்காலம் முடிந்ததும் தொடங்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சென்னையில் முதல்வர் கருணாநிதியை சனிக்கிழமை காலையில் ப.சிதம்பரம் சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:

இலங்கை அதிபர் ராஜபட்ச தில்லி வந்தபோது, அவருடன் விவாதிக்கப்பட்ட விஷயங்களை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்தேன். வாழ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்த 50 ஆயிரம் பேருக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்கிற திட்டம் முன்னேற்றத்தில் உள்ளது.

விரைவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று ராஜபட்சவிடம் நாங்கள் வற்புறுத்தியிருக்கிறோம்.

மழைக்காலம் முடிந்த பிறகு, வீடு கட்டும் பணிகள் தொடங்கும் என்று அவர்கள் வாக்குறுதி தந்துள்ளனர்.

மீனவர்கள் கைது: இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் இந்த ஆண்டில் ஒரு மீனவர் உயிரிழந்துள்ளார். ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர புதிதாக யாராவது கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை.

ஒபாமா வருகை: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு முழுப் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அவரது வருகையால் இருநாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை அவரது பயணம் முடிந்த பிறகுதான் கூற முடியும். இந்திய-அமெரிக்க உறவு சீராக இருக்கிறது.

இன்னும் வலுப்படுமா என்பதை பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் கூற முடியும் என்றார் ப.சிதம்பரம்.
மேலும் இங்கே தொடர்க...

பாக்., அதிபர் சர்தாரி இலங்கை பயணம்


கொழும்பு : பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, அரசு முறை பயணமாக இம்மாதம் இலங்கை செல்கிறார். பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அரசு முறை பயணமாக இம்மாத இறுதியில் இலங்கைக்கு செல்கிறார். அவருடன், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் இலங்கை செல்கின்றனர்.

அங்கு, பாக்., அதிபர் சர்தாரி, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். அப்போது, பாதுகாப்பு, வணிகம் குறித்த பேச்சு வார்த்தைகள் இடம்பெறும் என்றும், இது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் தெரிகிறது. இஸ்லாமாபாத் - கொழும்பு இடையிலான பயணம் தொடர்பாக திட்டமிடப்பட்டு வருவதாகவும், பயணம் இறுதி செய்யப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

நேபாள மாவோயிஸ்டுகளிடம் இந்திய நக்சலைட்கள் பயிற்சி


காத்மாண்டு : இந்தியாவில் உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கும் நக்சலைட்களுக்கு, நேபாள மாவோயிஸ்டுகள் பயிற்சியளிக்கும் விவரம் தெரியவந்துள்ளது. இதற்கு, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவும் உதவி வருகிறது.

சமீப நாட்களாக இந்தியாவில் நக்சலைட் வன்முறைகள் அதிகரித்துள்ளன. அவர்களால் உள்நாட்டு பாதுகாப்பு பெரும் பிரச்னையாகி உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் செயல்படும் நக்சலைட்களுக்கு நேபாள மாவோயிஸ்டுகள் பயிற்சியளித்து வரும் விவரம் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக, நேபாள ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மற்றும் இந்தியாவில் செயல்படும் நக்சலைட் அமைப்புகளில் ஒரு பிரிவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)க்கும் உள்ள தொடர்புகளை அம்பலப்படுத்தும் விவரங்கள் அடங்கிய ஆவணங்களையும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரும் கடிதத்தையும் நேபாள அரசிடம் இந்தியா கொடுத்துள்ளது.

இக்கடிதம் மற்றும் ஆவணங்களை, நேபாளத்திற்கான இந்திய தூதர் ராகேஷ் சூத், நேபாள உள்துறை அமைச்சர் பீம் ரவால் மற்றும் வெளியுறவு அமைச்சர் சுஜாதா கொய்ராலா ஆகியோரை சில நாட்களுக்கு முன் சந்தித்துக் கொடுத்துள்ளார்.இந்திய தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களில், நேபாள மக்கள் விடுதலை ராணுவத்திடம் இந்திய நக்சலைட்கள் பயிற்சி பெறுவது தொடர்பாக உளவுத்துறையினர் சேகரித்துள்ள விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பயிற்சிக்கு பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா உதவுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதங்கள் மற்றும் ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்துவதாக நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."இந்தியாவில் செயல்படும் நக்சலைட் அமைப்புகளுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என, நேபாள மாவோயிஸ்டுகள் இதுவரை கூறி வந்தனர். அது பொய் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

Nov 4, 2010

ரூ.1 கோடி கேட்டு 2 பேர் கடத்தல்: 4 விரல்களை துண்டித்து அனுப்பிய கடத்தல்காரர்கள்

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பதேபூர் சிக்ரி என்ற புராதன நகரைச் சேர்ந்தவர் அனில்குமார். தொழில் அதிபரான இவரது உறவினர்கள் ரஜத், கவுரவ், ஆகியோர் கடந்த மாதம் 15-ந்தேதி காலையில் பால் வாங்குவதற்காக சென்றனர்.

அப்பேது ஜீப்பில் வந்த கடத்தல் கும்பல் இருரையும் தாக்கி ஜீப்பில் தூக்கிப் போட்டு கடத்திச் சென்றனர். பின்னர் அவர்கள் அனில் குமாருக்கு போன் செய்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தனர்.

ஆனால் அந்த அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய அனில்குமார் ரூ.25 லட்சம் வரை தர சம்மதித்தார். இதை கடத்தல் கும்பல் ஏற்றுக் கொள்ள வில்லை.

இதுபற்றி அனில்குமார் போலீசில் புகார் செய்தார். போலீசார் கடத்தல் கும்பல் பற்றி விசாரணை நடத்தி 2 பேரையும் மீட்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அனில் குமாருக்கு மீண்டும் கடத்தல் காரர்களிடம் இருந்து போன் வந்தது. அதில் பேசியவன் உங்களுக்கு தீபாவளி பரிசாக ஒரு பார்சல் அனுப்பி இருக்கிறேன். அந்த பார்சல் சுடுகாடு அருகே கிடக்கிறது. போய் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான்.

உடனே அனில்குமார் பதறியடித்துக் கொண்டு சுடுகாட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு ஒரு பார்சல் கிடந்தது. அதை பதட்டத்துடன் பிரித்துப் பார்த்த போது 4 விரல்கள் துண்டித்து வைத்து அனுப்பப்பட்டு இருந்தது.

கடத்தல் கும்பல் அனில் குமாரை மிரட்டவே கை விரல்களை துண்டித்து அனுப்பியுள்ளது. இது பற்றியும் அனில்குமார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் கை விரல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவை கடத்தப்பட்டவர்களின் கை விரல்கள் தானா ? என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவை பரி சோதனைக்காக சண்டிகாரில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடத்தல்காரர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்தரகுர்ஜார் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளை கும்பல் பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் அடிக்கடி இது போன்ற கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தற்போது கடத்தப்பட்டவர்கள் பற்றி இதுவரை எந்த துப்பும் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் பதட்டத்தில் உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

நடுவானில் பறந்தபோது விமான பாகம் உடைந்து விழுந்தது; 459 பயணிகள் தப்பினர்






சிங்கப்பூரில் இருந்து இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னிக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. 459 பயணிகள் இருந்தனர்.

விமானம் புறப்பட்டு 5-வது நிமிடத்தில் விமானத்தில் ஒருபக்க எந்திரத்தில் உள்ள மேல்பகுதி பாகம் உடைந்து விழுந்தது.

உடனே பைலட் விமானத்தை திருப்பி சிங்கப்பூரில் அவசரமாக தரை இறக்கினார். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளிக்கிழமையில் தீபாவளி லட்சுமி வழிபாடு-பலன்கள் குளியல்-தீபம் ஏற்ற உகந்த நேரம்




வெள்ளிக்கிழமையில் தீபாவளி லட்சுமி வழிபாடு-பலன்கள் குளியல்-தீபம் ஏற்ற உகந்த நேரம்
திரைப்படம் திரைப்படம்
தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களில் அமாவாசை இருந்தாலும் நாளைதான் முழுமையான சர்வ அமாவாசை ஆகும். இந்த தீபாவளி வெள்ளிக்கிழமை அன்று வருவது கூடுதல சிறப்பு வாய்ந்த தாகும். இதுபற்றி பிரபல வாஸ்து பேராசிரியர் யோகஸ்ரீ மணிபாரதி கூறியதாவது:-
இந்த தீபாவளி சித்திரை நட்சத்திரத்தில் வருவதும் சந்திரன் வெள்ளிக்கிழமை வீட்டில் இருப்பதும் நட்சத்திர அதிபதி ஆட்சியாக விருச்சிகத்தில் இருப்பதால் குருவால் பார்க்கப்படுவதால் இந்நாள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் சுக்கிரனுக்கு உகந்தநாள் வெள்ளிக்கிழமை ஆகும். சுக்கிரன் அதிதேவதை மகாலட்சுமி. எனவே மகாலட்சுமியை நாளை வழிபட்டால் கூடுதல் பலன்களை பெறலாம்.

தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய்தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தீபாவளி நாளில் கேதார கவுரி விரதம் இருந்து வழிபட்டால் மனை தோஷங்கள் நீங்கும். வீட்டில் பொன், பொருள் சேரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.

தீபாவளி அன்று குளியல், புத்தாடை உடுத்துதல், தீபம் ஏற்றுதல் கேதார கவுரி விரதம் போன்றவற்றை செய்ய உகந்த நேரம் வருமாறு:-

நாளை மாலை பிரதோஷ காலத்தில் அமாவாசை இருக்கும் நேரத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். எனவே நாளை மாலை 5.41 (சூரிய அஸ்தமனம்) முன்பே தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

நாளை அஷ்டமசுத்தியும், குருபார்வையும் உடைய கன்னியா லக்கனத்தில் அதிகாலை 2.45 மணிக்கு மேல் அதிகாலை 4.45 மணிக்கு முன்னர் தலை குளியல், புத்தாடை உடுத்துதல் நல்லது.

தீபாவளி அன்று செய்யும் மகாலட்சமி பூஜை மிகவும் சிறப்பானது. இப்பூஜையை மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை செய்யலாம்.

வெள்ளிக்கிழமை நாளில் தீபாவளி கொண்டாடப்படுவதால் அனைவரும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிலும் ரிஷபம், துலாம், ராசி லக்னக்காரர்கள் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரக்காரர்கள் அசைவத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு யோகஸ்ரீ மணிபாரதி கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

Nov 3, 2010

இலங்கை அகதிகளிடம் பண மோசடி: நாகப்பட்டினத்தில் 3 பேர் கைது



நாகப்பட்டினம், நவ.3: வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, இலங்கை அகதிகளிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினத்தில், அகதி முகாம்களில் இருந்து வெளியேறி வந்த இலங்கை அகதிகள் 14 பேர் போலீசாரால் நேற்று பிடிக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்களை அகதி முகாம்களில் இருந்து வெளியேற்றி அழைத்து வந்ததாகவும், வெளிநாடுகளில் கொண்டு போய் விட்டுவிடுவதாகவும் கூறி, அகதிகளிடம் இருந்து பண பெற்று மோசடி செய்த 3 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

மீட்கப் பட்ட இலங்கை அகதிகள் அனைவரும் மீண்டும் பத்திரமாக அகதி முகாம்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

அணிலை குழந்தையாக வளர்க்கும் அதிகாரி ராமராக கருதி வழிபடும் பக்தர்கள்





சென்னை சந்தாமணி ஆர்.வி, நகரைச் சேர்ந்தவர் மோகணேஷ். தனியார் நிறுவன மேலாளராக உள்ளார். இவருக்கு மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.இவர் தனது வீட்டில் அணில் ஒன்றை குழந்தை போல வளர்த்து வருகிறார். அவர் எங்கு சென்றாலும் அணிலும் அவரது தோளில் தொற்றிக் கொள்கிறது.

அவர் உணவு கொடுத்தால்தான் சாப்பிடுகிறது. அவர் வெளியூர் சென்று விட்டால் எதையும் சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறது.

இதனால் இந்த அணிலை அவர் மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறார். அணில் ராமபிரான் வாகனம் என்பதால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று அதை வழி படுகிறார்கள். அணிலை பார்த்ததும் ராமரை நேரில் பார்த்ததாகவே கருதி மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகிறார்கள். இதுபற்றி மோகணேஷ் கூறியதாவது:-

நான் 4 ஆண்டுகளுக்கு முன்பு 3 அணில் குட்டிகளை வளர்த்தேன். அதில் 2 இறந்து விட்டன. தற்போது இந்த அணில் மட்டும்தான் உயிருடன் உள்ளது.

இதை நானும் குடும்பத்தினரும் குழந்தை போல வளர்த்து வருகிறோம். நாங்கள் என்ன சொல்கிறோமோ அதன்படி நடக்கும். அதற்கு எல்லாமே புரிகிறது.

தினமும் அணிலுக்கு உணவாக பால், ஆப்பிள், கேக், திராட்சை போன்றவற்றை கொடுக்கிறோம். கேக்கை விரும்பி ருசித்து சாப்பிடுகிறது. இதனால் தினமும் அணிலுக்காக ஒரு கேக் வாங்குகிறேன்.

அணிலுக்கு உடல்நிலை சரி இல்லாவிட்டால் எங்கள் குடும்பமே கவலையில் மூழ்கி விடும். உடனே அதை தூக்கிக் கொண்டு செல்லப்பிராணிகள் மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளிப்போம்.

அணில் ராமபிரானின் வாகனம் என்பதால் அக்கம் பக்கத்தினர் கூட்டமாக வந்து அதை பார்த்து வழி படுகிறார்கள். இதை பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

அணிலை நோய்க் கிருமிகள் தொற்றாமல் இருக்க வெந்நீரில் டெட்டால் கலந்து தினமும் அதை துணியில் நனைத்து துடைத்த விடுவோம்.

பெரும்பாலும் அணிலை அவ்வளவு எளிதில் பிடித்து விட முடியாது. வேகமாக ஓடும் தன்மை கொண்டது.

அப்படிப்பட்ட அணில் எங்களை விட்டு பிரியாமல் இருப்பது ராமபிரானின் அனுக்கிரகமாகத்தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

போலி பாஸ்போர்ட் மூலம் கனடா செல்ல முயன்ற குஜராத் தம்பதி கைது; சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்கள்


சென்னை விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து ஒரு விமானம் வந்தது.

அதில் இருந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண்ணும் அவரது கணவரும் மலேசியாவில் இருந்து சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த தம்பதியினர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் போலி பாஸ்போர்ட்டை வைத்து கனடாவுக்கு செல்ல முயன்றதால் மலேசியாவில் இருந்து சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் சிக்கிய தம்பதியரின் பெயர் விஷால்குமார் பட்டேல் (30), சினேகல் (27). கணவன், மனைவி இருவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

கடந்த மாதம் 27-ந்தேதி மும்பையில் இருந்து சுற்றுலா விசாவில் இந்த தம்பதியினர் மலேசியா சென்றுள்ளனர். அங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் கனடா செல்ல முயன்றபோது மலேசிய குடியுரிமை அதிகாரிகள் அதை கண்டுபிடித்து விட்டனர்.

அதை தொடர்ந்து விஷால் குமார் பட்டேல்-சினேகல் ஆகியோரை சென்னைக்கு திருப்பி அனுப்பி விட்டனர். சென்னை விமான நிலையத்தில் நடந்த சோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டது.

கணவன்-மனைவி இருவரையும் சென்னை விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனி, பத்மநாபன் ஆகியோர் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கல்லால் அடித்து கொல்லும் தண்டனை மாற்றம்: ஈரான் பெண்ணுக்கு இன்று தூக்கு

ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் சகினே மொகமதி ஆஸ்தியானி. கணவரை கொலை செய்ததாகவும், வேறு ஒரு ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாகவும் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், இந்த தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்படாமல் உள்ளது. கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்தியானி. தற்போது தெக்ரானில் உள்ள தாப்ரிஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எனவே, பொதுமக்கள் மத்தியில் இவரை கல்லால் அடித்து கொல்ல அந்நாட்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு உலக நாடுகளும், சமூகசேவை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.

எதிர்ப்பு வலுவடைந்ததை தொடர்ந்து இந்த தண்டனையை ஈரான் அரசு கை விட்டது. மாறாக கணவரை கொலை செய்த குற்றத்துக்காக அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.

இந்த நிலையில், அவருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்தியானயை கல்லால் அடித்து கொல்ல விதிக்கப்பட்ட தண்டனை எதிர்த்து போராடிய உலக நிறுவனம் இத்தகவலை தெரிவித்துள்ளது. இது ஜெர்மனியில் இயங்குகிறது.

இதற்கிடையே, தூக்கு தண்டனை இன்று நிறைவேற்றப்படுமா? என தெரிய வில்லை. இது குறித்து ஈரான் அதிகாரிகளிடம் நிருபர்கள், கேட்டனர். அதற்கு பதில் சொல்ல அவர்கள் மறுத்து விட்டனர். தண்டனை இன்று நிறைவேற்றப்படலாம் அல்லது வேறு தேதிக்கு மாற்றப்படலாம் என்று மழுப்பலாக பதில் அளித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

சந்திரனுக்கு எந்திர மனிதனை அனுப்ப “நாசா” திட்டம்


சந்திரனுக்கு மீண்டும் விஞ்ஞானிகளை அனுப்ப அமெரிக்காவின் “நாசா” விண்வெளி நிறுவனம் முடிவு செய்திருந்தது. அதற்காக ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவிட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு அதிக அளவு செலவாகும் என கருதி அதிபர் ஒபாமாவின் அரசு இந்த திட்டத்தை கைவிட்டது.

இந்த நிலையில், சந்திரனுக்கு எந்திர மனிதனை (ரோபாட்) அனுப்ப “நாசா” முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1000 கோடிக்கும் குறைவாகவே செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஹீவ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மைய நாசா என்ஜினீயர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித குணங்களை கொண்ட எந்திர மனிதனை சந்திரனுக்கு பாதுகாப்பாக அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணி 1000 நாட்களில் முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

Oct 29, 2010

முதல்வர் துரோகம்: வைகோ






காவிரி பிரச்னையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுடன் இணைந்து, முதல்வர் கருணாநிதி துரோகம் இழைத்து விட்டார்,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறினார்.அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில், ஆரம்பத்திலிருந்து முதல்வர் கருணாநிதி துரோகம் செய்து வருகிறார். தனது குடும்பத்தினருக்கு பதவி பெறுவதில் தான் அவர் அக்கறை காட்டினார்."கர்நாடகாவில் மழை பெய்யவில்லை; பின், எப்படி தண்ணீர் வரும்' என்ற கேள்வியை கேட்டவரே முதல்வர் கருணாநிதி. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுடன் இணைந்து, முதல்வர் கருணாநிதி துரோகம் செய்து விட்டார்.கர்நாடக அரசும் தண்ணீர் தர முடியாது என கூறியுள்ளது. இதை மத்திய அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் செயல்.இவ்வாறு வைகோ கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழக மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி: ஜெ., பாய்ச்சல்





சென்னை : காவிரி பிரச்னையில், முன்கூட்டியே சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், தண்ணீர் திறந்துவிட முடியாது' என கர்நாடக அரசு கைவிரித்தவுடன், "சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என கருணாநிதி அறிவித்திருப்பது, தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும் என்பது பழமொழி. வெள்ளம் வந்த பிறகு அணை போட வேண்டும் என்பது கருணாநிதியின் புதுமொழி. சம்பா சாகுபடியை பாதுகாக்கும் விதமாக, முன்கூட்டியே சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், கடிதம் எழுதி காலத்தைக் கழித்து விட்டார். "தண்ணீர் திறந்துவிட முடியாது' என கர்நாடக அரசு கைவிரித்தவுடன், "சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என கருணாநிதி அறிவித்திருப்பது, தமிழக மக்களை ஏமாற்றும் செயல். கருணாநிதியின் எண்ணமெல்லாம், "கை'யுடனான தன் உறவைப் பாதுகாப்பதில் தான் இருக்கிறதே தவிர, தமிழர்களின் உரிமையைக் கேட்டுப் பெறுவதில் இல்லை. தி.மு.க., அரசு அமைந்த பிறகு 2007 பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை அளித்தது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இந்த தீர்ப்பை மத்திய கெஜட்டில் வெளியிடவோ, இறுதித் தீர்ப்பில் பரிந்துரைத்தபடி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கவோ தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், 1991ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தனது இடைக்கால தீர்ப்பை வழங்கியபோது, ஆறே மாதத்தில் அதை மத்திய கெஜட்டில் வெளியிட நடவடிக்கை எடுத்தேன்.

அனைத்து கட்சிக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களைச் சந்தித்த கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை, "தமிழக அரசு எவ்வளவு தண்ணீர் வேண்டுமென கேட்கவில்லை' எனக் கூறியிருப்பதாக செய்தி வந்துள்ளது. இதிலிருந்தே, ஏதோ எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறாரே என்பதற்காக கருணாநிதி கடிதம் எழுதியிருப்பது தெரிகிறது. கூட்டணி உறவு நீடிக்கவும், ஊழல் குற்றங்களில் இருந்து தப்பிக்கவும், வளம் கொழிக்கும் இலாகாக்களைப் பெறவும், காங்கிரஸ் தலைவரையும், பிரதமரையும் சந்திக்கிறார் கருணாநிதி. ஆனால், காவிரியில் நமக்குள்ள உரிமையைப் பெறுவதற்காக ஏன் இவர்களைச் சந்திக்க மாட்டேன் என்கிறார்?

எனது ஆட்சிக் காலத்தில், காவிரி நீரைப் பெறுவதற்காக நான்கு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினேன்; முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டுமாறு பல முறை பிரதமரை வலியுறுத்தியிருக்கிறேன். இதுதவிர, சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடி, கர்நாடகாவிடமிருந்து தண்ணீரைப் பெற்று இருக்கிறோம். ஆனால், இப்போது கடிதம் எழுதவே தயங்குகிறார் கருணாநிதி. நான்கரை ஆண்டுகளில் காவிரிக்காக ஏதாவது போராட்டம் நடத்தியிருக்கிறாரா? பிரதமரைச் சந்தித்து முறையிட்டிருக்கிறாரா? எதையும் செய்யவில்லை. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, ஜூனில் 10 டி.எம்.சி., தண்ணீரையும், ஜூலையில் 34 டி.எம்.சி., ஆகஸ்ட் 50 டி.எம்.சி., செப்டம்பர் 40 டி.எம்.சி., அக்டோபர் 22 டி.எம்.சி., என மொத்தம் 156 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்து விட்டிருக்க வேண்டும்; ஆனால், செய்யவில்லை.

நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படியோ, இறுதித் தீர்ப்பின்படியோ கர்நாடகத்திடம் தண்ணீரைப் பெற கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்? கடிதம் எழுதியதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, கர்நாடகத்திடமிருந்து சம்பா சாகுபடிக்குத் தேவையான காவிரி நீரைப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வீட்டு வசதி சங்கங்களில் கடன் வாங்கியவர்கள், நிலுவையைத் திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைத் திட்டத்தில் கால அவகாசம்

வீட்டு வசதி சங்கங்களில் கடன் வாங்கியவர்கள், நிலுவையைத் திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைத் திட்டத்தில் கால அவகாசம், அடுத்த ஆண்டு ஜூன் வரை நீட்டிக்கப்படும்' என, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:நகர்ப்புற மற்றும் கிராம வீட்டு வசதித் திட்டங்களில், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் வீடுகள் கட்டுவதற்காக பலர் கடன்கள் பெற்றிருந்தனர்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்த வருவாய்ப் பிரிவினர், நடுத்தர வருவாய்ப் பிரிவினர், உயர் வருவாய்ப் பிரிவினர் என அனைவரும் 2008ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நிலுவையில் இருந்த கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக அரசின் சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன.இவர்கள் குறைந்தளவிலான குறிப்பிட்ட கடன் தொகையையும், வட்டியையும் 2008ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் செலுத்தினால், அவர்களது மீதமுள்ள கடன் மற்றும் அபராத வட்டித்தொகை தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறப்பட்டது.

பின் அச்சலுகை 2008ம் ஆண்டு டிசம்பர், 2009ம் ஆண்டு மார்ச் என இருமுறை நீட்டிக்கப்பட்டது. தற்போது பலரும் பயனடையும் வகையில், இத்திட்டத்தில் அளிக்கப்படும் சலுகைகளை 2011ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தி.மு.க.வில் கோஷ்டிகள் இல்லாத நிலை வேண்டும்: கருணாநிதி







முதல்வர் கருணாநிதி. உடன் (இடமிருந்து) கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொதுச்செயலாளர் க.அன்பழகன், கட்சியின் பொருளாளரும், துணை முதல்வருமான
சென்னை, அக். 28: தி.மு.க.வில் கோஷ்டிகள் இல்லாத நிலையைத் தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

÷சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக மாவட்டம்தோறும் தி.மு.க.வினரின் குறைகளை முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட கட்சியின் மூத்தத் தலைவர்கள் கேட்டு வருகின்றனர். தென் சென்னை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

÷இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

÷கட்சிக்கு அப்பாற்பட்டவர்களுடன் நான் கலந்து ஆலோசித்ததில், குழு மனப்பான்மை காரணமாக ஒரு சில இடங்களிலே ஒற்றுமையின்மை இருக்கிறது தெரியவந்துள்ளது. எந்த வட்டத்திலாவது இரண்டு குழுக்கள் இருக்குமானால், அந்தக் குழுக்கள் எல்லாம் தி.மு.க.வின் முன்னேற்றத்தை அழிக்கின்ற புழுக்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

÷என்னதான் நீங்கள் இங்கே உறுதி எடுத்துக்கொண்டாலும், சபதம் மேற்கொண்டாலும், உங்களிடத்திலே உள்ள ஒற்றுமை கெட்டிப்படவில்லை என்றால், அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடியாது.

÷அந்தக் குழுக்களை, குழு மனப்பான்மையை அகற்றினால்தான், தி.முக. ஒரு லட்சியக் கூடாரம் என்பதை எடுத்துக்காட்ட நம்மால் முடியும்.

÷குழுக்கள் என்பதை மறந்துவிட்டு, குழு மனப்பான்மையை ஒதுக்கிவைத்துவிட்டு, எல்லோரும் ஒன்றுதான், எல்லோரும் தி.மு.க.தான் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும்.

÷அவ்வாறு செயல்பட்டால், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அல்ல; ஜெயலலிதாவோடு 100 பேர் அணி திரண்டு வந்தாலும், தி.மு.க.வை யாராலும் வெல்ல முடியாது; யாராலும் வீழ்த்த முடியாது.

÷இந்த இயக்கத்தில் குழுக்களே இல்லை; கோஷ்டிகளே இல்லை என்ற நிலைதான் உயர்ந்த நிலை என்பதை உணர வேண்டும்.

÷அநேகமாக, கோஷ்டிகள் இல்லாத கட்சியே தமிழ்நாட்டில் கிடையாது. நாம் மாத்திரம் ஏன் அப்படி இருக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். நமது கட்சியில் கோஷ்டிகள் இல்லாத காரணத்தினால்தான், இன்றைக்கு கூட்டணியினுடைய பிரதான கட்சியாகவும், ஆளுங்கட்சியாகவும் இருக்க முடிகிறது.

÷ஆகவே, கோஷ்டிகள் இல்லாத நிலையைத் தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும்.

÷சென்னை மாநகராட்சி மீது ஊழல் புகார் வந்தபோது, மாநகராட்சியைக் கலைத்து விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதன்மூலமாக, தி.மு.க.வுக்கு கிடைத்த மதிப்பு, மரியாதைதான் அடுத்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தது.

÷தி.மு.க. நிகழ்ச்சிகள், கூட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் செல்ல வேண்டும். அதேபோல், மாவட்டச் செயலாளர் என்றால், அடிக்கடி தலைமையகத்துக்கு வரவும், தலைவரோடு கலந்து பேசுவதையும் தனது வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி.

தென் சென்னை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பேசுகிறார்
மேலும் இங்கே தொடர்க...

தமிழகம் காவிரி நீரைப் பெற சட்டப்படி நடவடிக்கை: முதல்வர் கருணாநிதி

நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கை பெறுவதற்கு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

÷நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த கர்நாடக அரசு, இப்போதுள்ள சூழ்நிலையில் தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என்று புதன்கிழமை அறிவித்தது.

÷எனவே தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதி இதைக் கூறினார்.

÷தி.மு.க.வின் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அவருடைய தலைமையில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடந்தது.

÷அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

÷பத்திரிகைகளில் வரும் செய்திகளின் அடிப்படையில் பதில் சொல்ல விரும்பவில்லை. அப்படிக் கூறி, இரு மாநிலங்களுக்கு இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட நான் இடம் தர விரும்பவில்லை.

÷சட்டப்படி நமக்கு வந்து சேர வேண்டிய நீருக்காக தொடர்ந்து நாம் வாதாடுவோம்; நடவடிக்கை எடுப்போம்.

÷கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்ததாகவும், தமிழகத்துக்குத் தண்ணீர் தரக்கூடாது என்று அதில் முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படும் செய்திகளை இன்னும் பார்க்கவில்லை. அவற்றைப் பார்த்த பிறகுதான் அதுபற்றி கருத்து கூற முடியும்.

÷காவிரியில் தண்ணீர் திறப்பது பற்றி ஏற்கெனவே பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரடியாக கூறியிருக்கிறோம். எனவே கடிதம் எழுத வேண்டியதில்லை. அவருக்கு இதுபற்றித் தெரியும்.

÷இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அது குறித்து சட்டப்படி நாங்கள் அணுகுவோம் என்று முதல்வர் கூறினார்.

÷காவிரியில் 25 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: இந்நிலையில், கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட்டது என கர்நாடகத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

÷வியாழக்கிழமை கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 124.70 அடியாக இருந்தது. அணைக்கு வியாழக்கிழமை நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி அணைக்கு விநாடிக்கு 25,043 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து விநாடிக்கு 25,099 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. புதன்கிழமையைவிட வியாழக்கிழமை அணையில் இருந்து கூடுதலாக 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்தத் தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும். காவிரி பாசனப் பகுதியில் உள்ள மற்றோர் அணையான கபினியில் நீர்வரத்து குறைவாக இருந்ததால், அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.
மேலும் இங்கே தொடர்க...