Sep 30, 2010

அனுராதபுர சிறுவர் தின நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி, பாரியார், பிரதமர்



சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி அனுராதபுரம் சுவர்ணபாலி மகளிர் கல்லூரியில் நாளை முதல் மூன்று தினங்களுக்கு தேசிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மகளிர் விவகார சிறுவர் மேம்பாட்டு அமைச்சர் ஏற்பாடு செய்துள்ள இந்த தேசிய நிகழ்வு நாளை முதலாம் திகதி தொடக்கம் 3ம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் பிரதமர் டி. எம். ஜயரட்ன, சிரேஷ்ட அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பலரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...

மாலைதீவில் இரு இலங்கை மீனவர்கள் நேற்று விடுதலை

மாலைதீவு கடற் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவரும் விடுதலை செய்யப் பட்டுள்ளதோடு அவர்கள் விமானம் மூலம் இன்று இலங்கை வந்தடைய உள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு கூறியது. பேருவளையில் இருந்து இரு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 8 பேர் மாலைதீவு கடற் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் அறுவர் கடந்த ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்டனர். ஏனைய இருவருக்கும் 6 மாத சிறையும் 8 இலட்சம் ரூபா வீதம் தண்டமும் விதிக்கப்பட்டது. தண்டப் பணம் செலுத்தாததால் ஒன்றரை வருட மேலதிக சிறைத் தண்டனை வழங்கப்பட்டதாக அமைச்சு கூறியது.
மேலும் இங்கே தொடர்க...

தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த மறுத்தால் அமெரிக்க தரைப்படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தும்

அமெரிக்க இராணுவத் தளபதி

வொஷிங்டன், செப். 29

பாகிஸ்தானில் உள்ள பழங்குடி இனப் பகுதியில் தஞ்சம் புகுந்து இருக்கும் வெளிநாட்டு தீவிரவாதிகள் முகாம்களை தகர்க்க நீங்கள் மறுத்தால், எங்கள் தரைப்படை உங்கள் நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்கும் என்று அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் டேவிட் எச். பெட்ராயஸ் பாகிஸ்தானை எச்சரித்தார். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு உள்ள நேட்டோ இராணுவத்தின் தளபதியான அமெரிக்க இராணுவ ஜெனரல் பெட்ராயஸ் நிருபர்களிடம் கூறியதாவது,

பாகிஸ்தானில் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியானது அல்கைதா, தலிபான் தீவிரவாதிகளின் சொர்க்கமாக இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசாங்கம் தயங்குகிறது. இது அமெரிக்க அதிகாரிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தீவிரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில் பாகிஸ்தானின் பங்கு இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியான வடக்கு வசீரிஸ்தானில் தீவிரவாதிகளின் கட்டமைப்பை தகர்க்க பாகிஸ்தான் மறுத்தால், அமெரிக்க தரைப்படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும். தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் அரசாங்கம் தாக்குதல் நடத்தாமல் இருப்பதால்தான், அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்களை அதிகரித்து இருக்கிறது. கடந்த 24 நாட்களில் 20 ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

ஏவுகணைத் தாக்குதல்கள் தவிர, மற்ற வழிகளிலும் போர் விரிவு அடைந்து வருகிறது. அமெரிக்க ஹெலிகொப்டர்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 50 தலிபான் தீவிரவாதிகள் பலியானார்கள்.

பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்காக தனி நடவடிக்கை கட்டளை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் தாக்குதலுக்கான திட்டத்தை வரையறுத்து வருகிறார்கள். இவற்றுக்கு ஒபாமாவின் ஒப்புதல் பெறப்பட இருக்கிறது.

இவ்வாறு தளபதி பெட்ராயஸ் தெரிவித்தார். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் 150க்கும் மேற்பட்ட முகாம்களில் தாக்குதல் நடத்தி அவற்றை அழிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

Sep 28, 2010

சரணடைந்த புலிகளை கொலை செய்ய பாதுகாப்பு செயலர் உத்தரவிட்டார் என தெரிவித்ததற்கெதிரான சரத் மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்





வன்னியில் இறுதிக்கட்ட போரின் போது வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைய வந்த புலிகளின் முன்னாள் சிரேஷ்ட தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டதாக பொய்யான தகவல்களை சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கியதாக சரத் பொன்சேகாவுக்கு எதிரான தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை இன்று ஆரம்பமாகியது. மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகளின் குழு முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றது. இன குரோதத்தை தோற்றுவிக்கும் வகையிலும் அரசிற்கு எதிராக காழ்ப்புணர்ச்சியை ஏற்படத்தும் வகையிலும் பொய்யான தகவல்களை வழங்கினார் என குற்றம் சுமத்தியே சட்டமா அதிபர் இந்த மனுவை சரத் பொன்சேகாவுக்கு எதிராக தாக்கல் செய்துள்ளார். மனுதாரர்கள் சார்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.சண்டே லீடர் பத்திரிகையின் செய்தியாளர் பிரட்ரிகா ஜேன்ஸ் உட்பட்டோர் மன்றில் ஆஜராகியிருந்தனர். இந்தநிலையில் இன்று சுகவீனம் காரணமாக பிரதிவாதியான சரத் பொன்சேகா மன்றில் ஆஜராவில்லை என அவரின் சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அயோத்தி தீர்ப்புக்கு தடையில்லை அயோத்தியில் பலத்த பாதுகாப்பு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பதை நிர்ணயிக்கும் வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பளித்துள்ளது.

தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏகமனதாக இந்தத் தீர்ப்பை வழங்கியது.

கடந்த அறுபது ஆண்டுகளாக அயோத்தியில் சர்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பதில் இந்து மற்றும் முஸ்லிம் மக்களிடையே பிரச்சினை இருந்து வந்தது.

இதன் பின்புலத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பை கடந்த வாரம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் லக்னோ கிளை வழங்கவிருந்தது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இந்த மூன்று நீதிபதிகளில் ஒருவர் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு அதற்கு முன்னர் வழங்கப்படாவிட்டால், வழக்கை மீண்டும் விசாரிக்கும் நிலை ஏற்படும்.

கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், இருதரப்பாரும் மீண்டும் பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் வகையில் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, தீர்ப்பை ஒத்தி வைக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மனுதாரரில் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களை கேட்ட பிறகு, மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பை அளிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியாவை ஆளும் கூட்டணிக்கு தலைமை வழங்கும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் வரவேற்றுள்ளன.

மிகுந்த பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் வியாழக்கிழைமை மாலை 3.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சிறிலங்காவில் சமஷ்டி அரசியல் தீர்வு தற்போது தேவையில்லை - ஐக்கிய தேசியக் கட்சி

சிறிலங்காவில் சமஷ்டி முறைமையிலான அரசியல் தீர்வு தற்போது தேவைப்படவில்லையென பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. விடுதலைப்புலிகளுடன் சமஷ்டி முறையிலான தீர்வு தொடர்பில், இணக்கமும், போர்நிறுத்த ஒப்பந்தமும் செய்து கொண்டிருந்த ஐதேகட்சி, இப்போது ஆயுதம் தரித்த போராளிகள் இல்லாததால் பிராந்தியங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டிய தேவையில்லை எனத் தெரிவித்துள்ளதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிபிசின் சிங்களச் சேவைக்கு ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அளித்த செவ்வியியொன்றின்போதே இத்தகைய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இத தொடர்பில் மேலும் அறிகையில்; தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பதிலும் பார்க்க வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் அன்றாட விடயங்களுக்கு தீர்வுகாண்பதே இப்போது அவசிய தேவை. ஆயினும் மாகாண சபைகளை உருவாக்குவதற்கு வழிவகுத்த 13 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்வதற்கோ அல்லது திருத்துவதற்கோ ஐ.தே.க. ஆதரவளிக்கமாட்டாது.

அவர் அச்செவ்வியில் மேலும், 13 ஆவது திருத்தமானது இலங்கையின் அரசியலமைப்பின் ஓர் அங்கமாகவுள்ளது. அதற்கு நாம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோம். 13 ஆவது திருத்தம் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதும், இதுவரை அத்திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. தற்போது இராணுவம் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த பின்னர் காலம் மாறிவிட்டதாகவும் ஆதலால் அத்தகைய அரசியல் தீர்வுக்கான தேவை இல்லையென தெரிவித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

சிறிலங்காவில் பெரும்பாண்மைக் கட்சிகள் காலத்திற்குக் காலம் மாறிமாறித் தமிழ்மக்கள் பிரச்சனையில் பாதகமான முடிவுகளை எடுத்து வந்தனர். அதனால் எழுந்த பாரிய அழிவுகள் மொத்த நாட்டினைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியதை அனைவரும் நேரடியாகச் சந்தித்திருந்த போதும், அதற்குரிய சரியான தீர்வினைக் கண்டுகொள்ளாது காலம் கடத்துவதிலேயே கருத்தாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளுடன் இணக்க ஒப்பந்தம் செய்திருந்த ஐதேகட்சி, அந்த வேளையிலேயே ஓப்பந்தத்திற்கு விரோதமாகச் செயற்படுவதாகவும், செயலற்ற பேச்சுவாரத்தைகள் மூலம், காலத்தை இழுத்தடிப்பதாகவும், விடுதலைப்புலிகள் குற்றச் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

நியூயோர்க்கில் ஒற்றைச் சக்கரத்துடன் வெற்றிகரமாகத் தரையிறக்கினார் நிஜ ஹீரோ!

சினிமாக்களில் வரும் சண்டைக்காட்சிகளில் ஒற்றைச் சக்கரத்தில் வாகனங்களை ஒட்டி, பரபரப்பாவார்கள் சினிமாக் கதாநாயகர்கள். உண்மையில் விமானம் தரையிறக்கும் வேளை, சில்லில் ஏற்பட்ட கோளாறினால், 60 பயணிகளுடன் ஒரு விமானம் விபத்துக்குள்ளாக இருந்ததை தவிர்த்து, ஒற்றைச் சில்லுடன் விமானத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கியுள்ளார் ஒரு கதாநாயக விமான ஓட்டுனர்.

கடந்த சனிக்கிழமை டெல்டா எயர்லைனுக்கு சொந்தமான ஜெட் விமானம் நியூயோர்க் விமானத்தில் தரையிறங்க இருந்த போது இந்த நிகழ்வு நடந்தது. விமானம் தரையிறக்கும் நேரம் கியர் பழுதாகியது. தரையிறக்கும் சில்லுகளும் இயங்கவில்லை. ஒரே ஒரு சில் மட்டுமே இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அந்த பைலட் அந்த ஒரு சில்லை மட்டுமே பயன்படுத்தி வெற்றிகரமாக விமானத்தை தரையிறக்கினார்.

இத்தனைக்கும் அந்த விமானத்தை அவர் ஓட்டிவரவில்லை . ஆபத்துக்கு உதவிபுரியும் உடனடி பைலட்டாக அந்த விமானத்தில் பயணம் செய்த 49வயதான டேவிட் ப்ரேடாதான் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அம்பாறையில் ஒக்டோபர் 3ஆம் திகதி அரசின் சேவை, அபிவிருத்திகள் தொடர்பான தெளிவூட்டும் விசேட மாநாடு

அரசாங்கத்தின் சேவைகளையும் அபிவிருத்தியின் பயன்களையும் மக்களுக்கு உரிய வகையில் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராமசேவை அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் விசேட மாநாடொன்று எதிர்வரும் ஒக் டோபர் முதலாம் திகதி அம்பாறையில் நடைபெறவுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு அமைச்சர் ஜோன் செனவிரட்னவின் தலைமையில் நடைபெறும். அன்றைய தினம் அம்பாறை மாவட்டத்தில் 26 மில் லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக் கப்பட்டுள்ள மஹா ஓயா பிரதேச செயலாளர் காரியா லயம் அமைச்சரினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

அரசாங்கம் மாவட்ட ரீதியில் முன்னெடுக் கும் அபிவிருத்தியின் பயன்களை மக்களுக்கு உரிய வகையில் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கும் கிராமசேவகர்களுக்கும் தெளிவுபடுத்தும் மாநாடுகள் மாவட்ட ரீதியாக நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

இணக்க சபைக்கு கூடுதல் அதிகாரம்; ரூ. 2 1/2 இலட்சம் வரையான பிணக்குகளை விசாரிக்க முடியும்

இணக்கச் சபைகளின் ஊடாக இரண்டரை இலட்சம் ரூபா வரையிலான பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடு செய்து தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியுமென்று நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

இது விடயமாக நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இணக்கச் சபைகளின் மூலம் இதுவரை காலம் 25 ஆயிரம் ரூபா வரை சம்பந்தப்பட்ட பிணக்குகள் மாத்திரமே விசாரணை செய்யப்பட்டன.

தற்போது இணக்க சபைகளின் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. முறைப்பாட்டாளரும், பிரதிவாதியும் தமது சார்பில் இணக்க சபைக்கு ஒவ்வொரு பிரதிநிதியைத் தெரிவு செய்ய முடியும்.

பிரதேச செயலகத்தில் நியமிக்கப்பட்டுள்ள இணக்க சபைத் தலைவர்களில் ஒருவரைத் தெரிவு செய்து கொள்ள முடியும். இந்த மூவரின் தலைமையில் பிரச்சினை விசாரணை செய்யப்பட்டுத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். பொதுமக்கள் நீதிமன்றம் சென்று அலைக்கழிவதைத் தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.இதற்கென இணக்க சபை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆராய்வதற்கென நீதி பிரதியமைச்சர் ரெஜினோல்ட் குரே தலைமையில் நேற்று (27) காலை நீதி அமைச்சில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. நீதியமைச்சின் செயலாளர் சுகத கம்லத், இணக்க சபை ஆணைக் குழுவின் மேலதிகச் செயலாளர் திருமதி கமலினி சில்வா, பதில் செயலாளர் அரந்தர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

பெரும்போக நெற் செய்கைக்கென ரூ. 15,000 மில். உரம் இறக்குமதி

எதிர்வரும் பெரும்போக நெற் செய்கைக்கு தேவையான உர வகைகளை 15 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் அரசாங்கம் ஏற்கனவே இறக்குமதி செய்துள்ளது.

இந்த உரத்தை விவசாயிகளுக்கு நேர காலத்துடன் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பெரும்போகம் ஆரம்பமாவதற்கு முன்னர் தேவையான உர வகைகள் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது தடவை இதுவாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் த்ரும்போகத்தின் போது 7 இலட்சத்து 46 ஆயிரம் ஹெக்டயர் காணியில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில் யூரியா உரம் ஒரு இலட்சத்து 94 ஆயிரம் மெட்ரிக் தொன்னும், பொட்டா சியம் உரம் 67 ஆயிரம் மெட்ரிக் தொன்னும், பொட்டேஸ் உரம் 60 ஆயிரம் மெட்ரிக் தொன்னும் பெரும்போக நெற் செய்கையின் போது தேவைப்படுவதாக விவ சாய அமைச்சின் செயலாளர் ஈ.கே.

கருணாதிலக்க கூறுகிறார். தேவையான உர வகைகள் கொண்டுவரப்பட்டுள்ளதால் முன்னரைப் போலன்றி இம் முறை விவ சாயிகளுக்குத் தேவையான உர வகைகள் அனைத்தையும் நேர காலத்துடன் கொடுக் குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டின் அபிவிருத்திக்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையரின் ஒத்துழைப்பு அவசியம்

அமெரிக்க, ஹுஸ்டன் நகரில் நடந்த வரவேற்புபசாரத்தில் ஜனாதிபதி மஹிந்த

நாட்டை அபிவிருத்தி செய்வ தற்கு வெளிநாடுகளில் வாழும் அனைத்து இலங்கையரதும் ஒத்துழைப்பு எதிர்காலத்திலும் அவசியம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 65 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குபற்றிய பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் கடந்த சனிக்கிழமை (25) ஹுஸ்டன் நகரத்துக்கு விஜயம் மேற்கொண்டனர்.

ஹுஸ்டன் நகரில் வசிக்கும் இலங்கையர்கள் வெஸ்டின் ஹோக் ஹோட்டலில் ஜனாதி பதிக்கும் அவரது பாரியாருக்கும் விசேட வரவேற்புபசாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

500க்கு மேற்பட்ட இலங் கையர்கள் கூடியிருந்த இந்த நிகழ்வில் ஹுஸ்டன் நகரின் காங்கிரஸ் பிரதிநிதி சீலா ஜெக்சன் மற்றும் ஹுஸ்டன் மேயர் அனிஸ் பார்க்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கை தற்போது இன, மத, பேதமின்றி அனைவருக்கும் சமாதானமாக வாழக் கூடிய நாடாக உள்ளது. 2005 இல் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு மக்கள் எனக்கு ஆணை வழங்கினர். அதனை நான் செவ்வனே நிறைவேற்றியுள்ளேன். அது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ள ப்பட்ட யுத்தமல்ல.

இதேவேளை 2010 இல் மக்கள் மீண்டும் எமக்கு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஆணை வழங்கி யுள்ளனர். அதனை நிறைவேற்றுவதற்கு வெளி நாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களினதும் ஆதரவு எதிர்காலத் திலும் அவசியப்படுகின்றது என்றார்.

இந் நிகழ்வில் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி சீலா ஜெக்ஸன் லீ உரையாற்று கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இலங்கை துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் இரு நாடுகளினதும் நட்புறவு மேலும் வலுப்படுத்தப்படும் வகையில் ஜனாதிபதி யின் விஜயம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

பலாலி உயர் பாதுகாப்பு வலய பாடசாலைகள் மீளக் கையளிப்பு இருபது வருடங்களாக வேறு இடங்களில் இயங்கியவை



பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தி லுள்ள வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினரால் கல்வி நடவடிக்கைகளுக்கென கையளிக்கப்பட வுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் மீளக் கையளிக்கப்படவுள்ள இந்த பாடசாலையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் இன்று நேரில் சென்று பார்வையிடுகின்றனர்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் உட்பட அந்தப் பிரதேசத்திலுள்ள மேலும் சில பாடசாலைகளை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, வட மாகாண அபிவிருத்திக் கான ஜனாதிபதி விசேட செயலணியின் தலைவர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் இந்த பாடசாலையைக் கையளிக்கிறார்.

அதன் பின்னர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி ஆகியோரிடம் இப்பாடசாலை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

1946 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை சுமார் 64 வருடம் பழைமை வாய்ந்தது என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டதை அடுத்து 1990 ஆம் ஆண்டு தொடக்கம் வசாவிளான் பாடசாலை யாழ். உரும்பிராய் பகுதியில் தற்காலிகமாக இயங்கி வருவதாகத் தெரிவித்த அவர், தற்பொழுது அங்கு 1352 மாணவர்கள் கல்வி கற்பதாகவும் குறிப்பிட்டார்.

இன்றைய நிகழ்வில் 1532 மாணவர்களும் பங்கு கொள்ளவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தப் பாடசாலை சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரவினால் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய கல்லூரியாக தரமு யர்த்தப்பட்டதாக வட மாகாண கல்விப் பணிப்பாளர் ப. விக்னேஸ்வரன் தெரிவி த்தார். இந்தப் பாடசாலை புனரமைக்கப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டிலுள்ள ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் கல்வி அமைச்சின் வேலைத் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவித் திட்டத்தினால் இந்தப் பாடசாலை புனரமைப்பு, நிர்மாணத்திட்டத்தி ற்கென 60 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப் படவுள்ள இத் திட்டத்தின் மூலம் சேதமடைந்த கட்டடங்கள் புனரமைக்கப்படவு ள்ளதுடன், பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆய்வு கூடங்கள், நூலகம், போன்றவை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருத்தப் பணிகள் நிறைவுற்ற பின்னர் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்த அவர், இதன் மூலம் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

Sep 26, 2010

இலங்கை வடக்கில் உள்ளாட்சித் தேர்தல்

கொழும்பு, செப்.26: இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் தேர்தலை நடத்துவது குறித்து அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.

30 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கு மாகாணக் கவுன்சிலுக்கு தேர்தல் நடக்கவுள்ளது.

இதை அந்நாட்டின் செய்தித்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புகவெல்ல ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியது: வடக்குப் பகுதியில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களில் 90 சதவீதம் பேர் அவர்களது சொந்த ஊர்களிலேயே மறு குடியமர்த்தப்பட்டுவிட்டனர். இன்னும் 10 சதவீதம் பேர் முகாம்களில் தங்கியியுள்ளனர். அவர்களையும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 சதவீதம் பேரும் விரைவில் மறுகுடியமர்த்தப்படுவர்.

இந்த பணி நிறைவடைந்ததும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் வடக்கு மாகாணக் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்தப்படும். வடக்குப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அப்பகுதி உள்ளாட்சி அமைப்பு 30 ஆண்டுகளாகச் செயல்படவில்லை. முடங்கிக்கிடந்தது. வடக்குப் பகுதியில் தேர்தல் நடைபெறாததால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வாக்குரிமை நசுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வடக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடத்துவதன் மூலம் அப்பகுதியின் உள்ளாட்சி அமைப்பு புத்துயிர் பெறவுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ஜனநாயகம் நிலைநாட்டப்படவுள்ளது. இத்தேர்தலில் நிச்சயம் மக்களின் உணர்வுகள் பிரதிபலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாகாணத் தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் வெளியே சுதந்திரமாக வந்து அச்சமின்றி வாக்களிக்கலாம். அவர்கள் தேர்தல் மூலம் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் என்று கெஹெலிய ரம்புகவெல்ல தெரிவித்தார்.

""வடக்குப் பகுதியில் 2009-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் யாரது பெயரெல்லாம் இருந்ததோ, அவை அப்படியே இருக்கின்றன. யார் பெயரும் நீக்கப்படவில்லை. இதனால் வாக்காளர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்று அந்நாட்டு தேர்தல் துணை ஆணையர் பி.எம். சிறிவர்தன் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இறை நம்பிக்கை உடல் நலத்துக்கு நல்லது: ஆய்வில் தகவல்




பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் சமூகநல ஆய்வாளர் கிறிஸ்டோபர் ஸ்கெய்டில் ஒரு ஆய்வு மேற்கொண்டார். அதில் இறைவழிபாட்டில் நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் சிறந்த உடல்நலத்துடன் விளங்குகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இறைவழிபாட்டில் ஆழ்ந்த 423 பேரிடம் கடந்த 1972-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் 96 பேர் மதமாற்றம் ஆகினர். 54 பேர் இறைவழிபாட்டில் இருந்து முழுவதுமாக விலகிவிட்டனர். ஆனால் முழுமையான இறைவழிபாட்டில் ஈடுபட்டவர்கள் சமூகநலம், உடல்நலம் மற்றும் நன்னடத்தையில் சிறந்து விளங்கினர்.

இதன்மூலம் இறைவழிபாடு உடல்நலத்துடன் மனநலத்தையும் வளர்க்கும் என ஆராயச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெடி விபத்துக்கள் நடக்கும்:இலங்கைக்கு பெரும் அபாயம்

இலங்கை போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள பெரும்பாலான வெடிபொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, கரடியனாறில் நடந்தது போல, எதிர்காலத்தில் மேலும் பல வெடி விபத்துகள் நடக்கலாம்' என, தகவல் வெளியாகியுள்ளது.இலங்கையில் சமீபத்தில் கரடியனாறு என்ற இடத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் எதிர்பாராதவிதமாக வெடித்தன. இதில் 27 போலீசார் உயிரிழந்தனர். சாலை கட்டுமான பணிகளுக்காக சீன நிறுவனம் ஒன்றால், போலீஸ் ஸ்டேஷனில் இந்த வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து இலங்கையைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாக பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி:இலங்கையில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு பணிகளுக்காக வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 80 சதவீத போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள வெடிபொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் தான் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு லட்சம் கிலோ வெடிபொருட்கள், எந்தவித பாதுகாப்பும் இன்றி வைக்கப்பட்டுள்ளன. எனவே, கரடியனாறில் நடந்தது போன்ற, மேலும் பல வெடிவிபத்துகள் எதிர்காலத்தில் நிகழும் அபாயம் நிலவுகிறது. இதை தவிர்ப்பதற்காக, போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள வெடிபொருட்களை, சேமிப்பு கிடங்குகளுக்கு மாற்றுவது குறித்து, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

“ஒபாமா உலக வில்லன்” ஈரான் வர்ணனை






அணுசக்தி கொள்கை தொடர்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒரு தனியார் டெலிவிஷனுக்கு பேட்டிஅளித்தார். அப்போது, அணு சக்தி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை வளர்க்க அது உதவும்.

ஈரானும் அதை விரும்பும் என கருதுகிறேன். உலக நாடுகளும் அதையேதான் விரும்புகின்றன என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த ஐ.நா.சபை பொது கூட்டத்தில் ஈரான் அதிபர் மகமத் அகமதினேஜாத் பேசினார்.

அப்போது, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் இஸ்லாமிய குடியரசுகளின் மீது மதிப்பும் மரியாதையுடன் நடந்து கொண்டால் அணுசக்தி குறித்த புதிய பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது என்றார். இந்த நிலையில் ஷிராஷ் நகருக்கு வந்த ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலிலரிஜான் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு உலக வில்லன். அவர் எப்படி ஈரானுக்கு உதவி செய்ய முடியும். அமெரிக்கர்கள் உலகம் முழுவதும் பழி பாவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, ஒபாமாவின் உதவி எங்களுக்கு தேவையில்லை. அவரது வார்த்தையில் உண்மை இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அமெரி.வர்;த்தகர்கள் இலங்கையில் முதலிட ஆர்வம் வர்த்தக கவுன்சில் அமைப்பது குறித்தும் ஆராய்வு




நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிலுள்ள முக்கிய வர்த்தகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து கலந்து ரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

அமெரிக்காவின் பிரபல வர்த்தகர்கள் பங்குபற்றிய கூட்டமொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றது. இதில் பிரபல வர்த்தகர்கள் 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

விமான சேவை, பாதுகாப்பு, விருந்தோம் பல், சுற்றுலா மற்றும் பான வகைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் அங்கு கூடியிருந்தனர். கொக்கா கோலா, போயில், கூகுல், ஹில்டன் ஹோட்டல், ஸ்டார்வுட் ஹோட்டல் ஆகிய நிறுவனங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களைச் சேர்ந்த உரிமையாளர்கள் மற்றும் வர்த்தக சம்மேளன பிரதிநிதிகளும் அதில் இருந்தனர்.

இதன்போது அமெரிக்க பிரபல வர்த்தகர்களை சந்தித்த ஜனாதிபதி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து ஒவ்வொருவரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.

இதற்கு அமெரிக்க வர்த்தகர்களும் தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், வர்த்தகர்கள் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கை தற்போது சிறந்த தகுதியுடைய நாடு என குறிப்பிட்டுள்ளார்.

மருந்து வகைகளை தயாரிக்கும் நிறுவனமான பைஸர் நிறுவனத்தின் முக்கியமான பிரதிநிதியொருவரின் கருத்துப்படி இருந்த வர்த்தக சந்திபானது அமெரிக்க மற்றும் இலங்கை வர்த்தக கவுன்ஸிலை உருவாக்கும் நிகழ்வாகக் கூட அமையலாம். வர்த்தக நிறுவனங்களையும் அரசாங்கங் களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாகக் கூட மாறலாம் என்ற நிலைப்பாட்டை அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் பகிர்ந்து கொண்டனர். அமெரிக்க வர்த்தக சமூகம் இந்த சந்திப்பின் போது இலங்கை அரசாங்க அதிகாரிகளையும் வர்த்தக பிர முகர்களையும் ஒரே இடத்தில் சந்திக்க முடிந்துள்ளமை பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க சிறப்பான வழியாகத் தெரிகிறது என்று பைஸர் நிறுவன அதிகாரி குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போது நிலவி வரும் சமாதான சூழலில் இடம்பெறும் வர்த்தக முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான வீடியோ விளக்கத்தையடுத்து இலங்கை ஆசியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்டநாடு என்பதை அமெரிக்க வர்த்தக சமூகம் ஏற்றுக்கொண்டது.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மற்றும் சுற்றுலாப் பயணத்துறையில் முதலிடத்தில் உள்ள நாடு என நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இவ்வருட முற்பகுதியில் குறிப்பிட்டிருந்தது பற்றியும் அமெரிக்க வர்த்தகர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. சுற்றுலாத்துறையிலும் சூழல் நட்புடன் கூடிய சுற்றுலா, சுகாதார சுற்றுலா, ஆயுர்வேதம் மூலமான நோய் தீர்க்கும் சுற்றுலா மற்றும் ஆன்மிக சுற்றுலா, இயற்கை சுற்றுலா என ஏற்படுத்த முடியுமென வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அங்கு விளக்கனார்.

இலங்கை வர்த்தக குழுவில் இடம்பெற்ற 15 வர்த்தக பிரமுகர்களுடன் அமெரிக்க வர்த்தக சமூகத்தினர் இங்கு ஒன்று கூடிப் பேசியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தூதுக்குழுவின் அமெரிக்க விஜயம் அந்தநாடு குறிப்பிடத்தக்க பொருளாதார வெற்றியை உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பெற்றுள்ள நிலையில், இலங்கையின் தனிநபர் வருமானம் கடந்த 5 வருடங்களில் இரட்டிப்பாகியுள்ள நிலையில் இடம் பெற்றுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அண்மையில் இலங்கையை வளர்ந்து வரும் சந்தையுடன் கூடிய மத்திய வருமானத்தை பெறும் நாடு என மேம்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

Sep 21, 2010

ஹெலிகாப்டர் விழுந்ததில் 9 பேர் பலி

காபூல்:ஆப்கனில் நேட்டோ படைகளின் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் ஒன்பது பேர் பலியாயினர். மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.ஆப்கனில் அமெரிக்கா தலைமையில் நேட்டோ படைகள் பாதுகாப்பு பணியில் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளன. கடந்த 2001ல் ஆட்சியை இழந்த தலிபான்கள், காந்தகார் உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கி கொண்டு வெளிநாட்டு படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் ஆப்கனில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 529 வெளிநாட்டு வீரர்கள் தலிபான்களின் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையே நேற்று, சாபுல் மாகாணத்தில் உள்ள டெய்சோபன் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த நேட்டோ படைகளின் ஹெலிகாப்டர் திடீரென நொறுங்கி விழுந்தது. இதில் ஒன்பது நேட்டோ வீரர்கள் பலியாயினர். ஒரு அமெரிக்கர், ஒரு ஆப்கன் நாட்டவர் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்தனர். ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் விபத்துக்குள்ளானதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

கணக்கு தாருங்கள்: பாக்., எம்.பி.,க்கள் கேள்வி

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் உளவு அமைப்பின் வரவு, செலவு கணக்குகளை தெரிவிக்க வேண்டும் என, அந்நாட்டு எம்.பி.,க்கள் கோரியுள்ளனர்.பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ( நவாஸ் பிரிவு) எம்.பி., சவுத்ரி நிசார் அலிகான் தலைமையில் பொதுகணக்கு குழு நேற்று முன்தினம் கூடி விவாதித்தது. பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு ராணுவ ஆட்சி காலத்தில் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது துணை மானிய கோரிக்கையின் பேரில் 40 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சி எம்.பி.,க்கள் கண்டனம் தெரிவித்தனர்.

"பாகிஸ்தான் உளவு அமைப்பு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதா? அரசின் கீழ் இயங்குகிறதா என்பது தெரியவில்லை. இந்த அமைப்பு அரசியல்வாதிகளின் பேச்சுக்களை ஒட்டுக் கேட்கிறது. பத்திரிகையாளர்களை கைது செய்து துன்புறுத்துகிறது. ராணுவத்துக்கு உளவு அமைப்பின் சேவை தேவை. ஆனால், அரசியலில் இந்த அமைப்பின் தலையீடு அதிகமாக உள்ளது. இந்த அமைப்பின் வரவு, செலவு கணக்குகளை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்' என, பொதுகணக்கு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி.,க்கள் வற்புறுத்தியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானுடன் எல்லா விஷயங்கள் குறித்தும் இந்தியா பேசத் தயார்: நிருபமா ராவ் பேட்டி






பாஸ்டன் : "காஷ்மீர் பிரச்னை உட்பட, அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இருக்கிறது. ஆனால், இருதரப்பு உறவுகளையும் சீர்படுத்தும் விதத்தில், பயங்கரவாத ஒழிப்பில் போதுமான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும்' என, இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் நடக்க உள்ள ஐ.நா., பொதுச் சபையின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிருபமா ராவ், அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:காஷ்மீர் பிரச்னை, பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவோடு சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில், அப்பிரச்னை உட்பட அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இருக்கிறது என, மிகத் தெளிவாக, நம்பிக்கையுடன், வெளிப்படையாக கூறுகிறேன்.பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்கு அப்பால், பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு, தொடர்ந்து இந்தியாவை எதிர்ப்பதற்கு ஆட்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளித்து, தாக்குதல் நடத்த சதித்திட்டமும் தீட்டி வருகின்றனர். இதனால் பாகிஸ்தானுடனான இந்திய உறவு ஒரு சிக்கலான நிலையில் இருக்கிறது.
"ஒரு பெரிய தேசம், தன் அண்டை நாடுகளுடன் எப்போதும் மோதிக் கொண்டிருந்தால் அது பலவீனமடையும்' என்று, சாணக்கியர் கூறிய கருத்தும் எங்களுக்கு தெரியும்.

தன் அண்டை நாடுகளுடன் பொருளாதார ரீதியில் இணக்கமான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என, இந்தியா விரும்புகிறது. பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையில் இந்தியா தொடர்ந்து ஈடுபடும். அதற்காக நெருடலான விஷயம் தவிர மற்றவைகளைப் பேச விரும்புகிறோம் என்று அர்த்தமல்ல.ஜம்மு - காஷ்மீர் பிரச்னை உட்பட, எல்லா விஷயங்களையும் நாங்கள் பேசத் தயாராக இருக்கிறோம். அமைதியான சூழலில் இப்பகுதியின் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்பது விருப்பம்.மும்பைத் தாக்குதல் வழக்கு தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியுடன் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் இருக்கிறது. மும்பைத் தாக்குதல் வழக்கு மிகவும் மெதுவாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.ஆப்கனில், பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும்; அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவாக உள்ளது.இவ்வாறு நிருபமா ராவ் தெரிவித்தார்.

சீனாவுடன் எல்லை பிரச்னை : இந்திய - சீன எல்லைப் பிரச்னை குறித்து நிருபமா கூறியதாவது:எல்லையைப் பொறுத்தவரை இருநாடுகளுக்கும் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இப்பிரச்னையில் குறுகிய காலத்தில் எடுக்கப்படும் மிக எளிய முடிவுகள் தீர்வாகாது. இருதரப்பு உறவுகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் முக்கியத் தடையாக இப்பிரச்னை மாறுவதை இரண்டு நாடுகளுமே அனுமதிக்காது. எல்லையில் தொடர்ந்து அமைதி நிலவுகிறது. இருதரப்பு உறவையும் போட்டியாக மட்டுமே பார்க்காமல், பதட்டமில்லாத அமைதியான முறையிலும் உள்ளது என்றும் பார்க்க வேண்டும்.சீனாவுடனான இந்திய உறவு, நடைமுறைக்குரியதாக இருக்குமே தவிர, ஒத்துப்போகாத முறையில் இருக்காது. ஆதிக்கம் செலுத்துவதில் போட்டி அல்லது பொருளாதாரத் தேவைக்கான வளங்களைத் தேடுவதில் போட்டி என இந்த உறவு இருக்குமா என்று மிகைப்படுத்த வேண்டியதில்லை.
மேலும் இங்கே தொடர்க...

Sep 19, 2010

இந்திய பாதுகாப்பு குழு இலங்கை வருகை


இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று நேற்று இலங்கை வந்துள்ளது.

நான்கு நாள் விஜயமொன்றை மேற் கொண்டு இலங்கை வந்துள்ள இக்குழு வினர் பாதுகாப்பு அமைச்சு, வெளி நாட்டமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர். அதனையடுத்து முப்படைத் தளபதிகள் மற்றும் பிரதம பாதுகாப்பு அதிகாரியையும் இக்குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இவர்கள் கல்விச் சுற்றுலாவொன்றி ற்காகவே இலங்கை வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவெல நேற்றுத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஹசலக்க சுற்றுலா பங்களா மீண்டும் அரசுடமை


ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் தனியார் துறையினருக்கு வாடகைக்காக வழங்கப் பட்டிருந்த ஹசலக்க நெல் சந்தைப் படுத்தும் சபைக்குரிய களஞ்சியசாலையின் சுற்றுலா பங்களாவை அரசாங்கம் நேற்று மீண்டும் பொறுப்பெடுத்தது.

இதனையடுத்து குறித்த சுற்றுலா பங்களாவில் நேற்றைய தினம் அம்பாறை பிரதேசத்திலிருந்து 10 லொறிகளில் கொண்டு வரப்பட்ட 150,000 கிலோ நெல் களஞ்சியப்படுத்தப்பட்டதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் பொது முகாமையாளர் வஜிர பெரேரா தெரிவித்தார்.

சந்தைப்படுத்தல் சபையின் பொது முகாமையாளர் மற்றும் ஹசலக்க பொலிஸார் ஆகியோர் இணைந்து இந்த பங்களாவை பொறுப்பேற்றனர்.

கடந்த 2001ம் ஆண்டு முதல் குறித்த பங்களா தனியார் துறையினருக்கு சொந்தமான முறையில் வழங்கப்பட்டது போல் இருந்து வந்துள்ளது.

கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாந்து நெல் சந்தைப் படுத்தல் சபையின் தலைவர் கே.டீ. ஜயசிங்க ஆகியோர்களினது ஆலோசனை யின் பேரில் நேற்று இந்த பங்களா மீண்டும் அரச உடமையாக மாற்றப்ப ட்டிருப்பதாக பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பாவனைக்கு உதவாத 300 கிலோ பழங்கள் கொழும்பில் அழிப்பு மாநகர சபையின் திடீர் சோதனையில் கண்டுபிடிப்பு

கொழும்பு மனிங் சந்தையில் பழங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்பவர்கள், அவற்றை பழுக்க வைக்கவும் பாதுகாத்து வைக்கவும் இரசாயன பதார்த்தங்களை சேர்த்து வருவதாக தெரிய வந்துள்ளதையடுத்து கொழும்பு மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் அவதானமாக உள்ளனர்.

கடந்த வார இறுதியில் மனித பாவனைக்கு ஒவ்வாத 300 கிலோவுக்கு மேற்பட்ட பழ வகைகள் அழிக்கப்பட்டதாக பிரதான மருத்துவ அதிகாரி டொக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.

1980ம் ஆண்டின் உணவு சட்டத்தின் கீழ் இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன் அதனை மீறும் உணவுச் சாலைகளின் சொந்தக்காரர்களையும் நீதிமன்றத்தின் முன்நிறுத்த இந்த சட்டம் வழி வகுகிறது.

இவ்வாறு காலாவதியான உணவுப் பொருட்களை விற்றமை, அயடின் சேர்க்கப்படாத உப்பை விற்றமை, பழுதான பழங்கள், தேயிலை ஆகியவற்றை விற்றமை மற்றும் பழங்களை உரியநேரத்துக்கு முன்னர் பழுக்க வைக்கும் வகையில் சில வகை இரசாயன பொருட்களை பயன்படுத்தியமை ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 18 வர்த்தகர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.

இவர்கள் அனைவரும் புறக்கோட்டையை சேர்ந்தவர்கள் என்று டொக்டர் காரியவசம் மேலும் கூறினார்.

கொழும்பு மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் கடந்த வார இறுதியில் நடத்திய திடீர் சோதனைகளின் போது 114 விற்பனை நிலையங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளின் போது பெறப்பட்ட தேயிலை, மிளகாய்த் தூள், பழங்கள் காய்கறிகள், கருவாடு, இறால், நெத்தலி ஆகியவற்றின் 150க்கு மேற்பட்ட மாதிரிகள் தற்போது பரிசோதிக் கப்பட்டு வருவதாகவும் இதன் முடிவுகள் தெரியவரும் போது மேலும் சில வர்த்தகர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட கூடும் என்றும் அவர் மேலும் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவில் 6 இலங்கை மீனவர் விடுதலை; 46 தொடர்ந்தும் தடுப்பில்

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்தார்கள் என இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த மேலும் 6 இலங்கை மீனவர்கள் மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலையீட்டையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்கள் பயணம் செய்த படகு கடந்த பெப்ரவரி 21ம் திகதி இந் திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிர வேசித்து மீன்பிடித்தல் ஈடுபட்டிருந்ததுடன் போதை வஸ்து கடத்தலிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப் பட்டனர். மேற்கூறிய குற்றச்சாட்டுகள் காரணமாக குறிப்பிட்ட மீனவர்கள் பயணம் செய்த படகு தடுத்து வைக்கப்பட்டு மீனவர்கள் 6 பேரும் விடுதலை செய்யப்பட் டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீர்வள அபி விருத்தி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்று கூறுகிறது. இந்த மீனவர்களை விமான மூலம் இலங்கைக்கு அழைத்துவர அமைச்சுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா செலவாகியுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள படகை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 46 மீனவர்களும் 13 படகுகளும் இந்தியாவில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளன. எனினும் இதற்கு முன் தமிழ்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த மீனவர்கள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலையீட்டின் பேரிலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பூநகரியில் நேற்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து மீண்டது குறித்து சாட்சியமளித்தோர் விபரிப்பு


பூநகரி பிரதேசத்தில் மீளகுடியேறிய மக்களின் சாட்சியங்களைப் பெறுவதற்காக கற்றறிந்த பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்கம் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வு நேற்று பிற்பகல் பூநகரி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சொந்தக் கிராமங்களிலிருந்து முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டு வந்த போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பொது மக்கள் விபரித்தனர்.

அரசாங்கம் அறிவித்திருந்த பாதுகாப்பு வலயங்களில் புலிகள் தமது நிலைகளைப் பலப்படுத்துவதற்கான வழி ஏற்பட்டிருந்தது. மக்களை பணயமாக அவர்கள் வைத்திருந்ததால் பாதுகாப்பு படையினருக் கும், புலிகளுக்குமிடையிலான மோதலில் தாம் சொல்லொணா துன்பங்களை அனுபவித்தாகச் சுட்டிக் காட்டினர்.

புலி களின் பிடியிலிருந்து மீண்டு இராணு வத்தினரிடம் பாதுகாப்புக்காக சென்று விடுவதற்கு புலிகளுடன் பெரும் போராட் டம் நடத்த வேண்டி இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணைகள் நேற்றுக் காலை கண்டாவளை பிரதேச செயலக அலுவல கத்திலும் நடைபெற்றது. அங்கு சாட்சிய மளிக்கவென சுமார் நூறு பேரளவில் வந்திருந்தனர்.

பூநகரியிலும் சுமார் நூறு பேரளவில் சாட்சியமளித்தனர்.

நேற்று பிற்பகல் பூநகரியில் மக்களிடம் சாட்சியங்கள் பெறப்பட்டன. இரண்டு இடங்களிலும் சாட்சியமளித்தவர்கள் காணாமல் போயுள்ள தமது பிள்ளைகளைக் கண்டு பிடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டனர்.

அவர்களின் முறைபாடுகளை பெற்றுக் கொண்ட ஆணைக்குவின் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

விசாரணைகளின் பின்னர் பூநகரி மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு சென்ற ஆணைக்குழு உறுப்பினர்கள் சங்குப்பிட்டி இறங்கு துறையையும் பார்வையிட்டனர்.

இன்றைய தினம் (20ம் திகதி) முல்லைத்தீவில் விசாரணை இடம்பெறு கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

Sep 18, 2010

வெடிப்புச் சம்பவம் ஒத்துழையாமை நடவடிக்கையாக கருதப்பட முடியாது: உபய மெதவல



கரடியனாற்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் ஒத்துழையாமை நடவடிக்கையாக கருதப்பட முடியாதென இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார். அரசியல் காரணிகளோ அல்லது ஒத்துழையாமை நடவடிக்கையோ இந்த வெடிப்பின் பின்னணியில் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் கரடியனாற்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம் குறித்து விசேட விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இராணுவப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளின் குடும்பங்களுக்கு சுயதொழில் உபகரணங்கள்


மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் குடும்பங்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரிச் சங்கம் ஆரம்பித்துள்ளது.

தண்டனை பெற்ற கைதிகளின் குடும்பங்களில் நிலவும் வறுமையை நீக்கி வாழ்க்கையை உயர்த்த சுயதொழில் உபகரணங்கள் அவர்களது குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

சிறைச்சாலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறைக்கைதிகளின் மனைவிமார்களுக்கு இடியப்பம் தயாரிக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் நலன்புரிச் சங்க தலைவர் வைத்தியர் கே. இ.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறிபண்டார பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

நலன்புரி அதிகாரி எஸ். ஸ்ரீனிவா சன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி னார்.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி வழங்கும் திட்டம்

கிழக்கு மாகாணத்தில் வேலையற்றிருக்கும் இளைஞர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி வழங்கும் திட்டத்தை கிழக்கு மாகாண சபை தற்போது ஆரம்பித்துள்ளது.

முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட் டம் பிரதேச செயலக ரீதியாக அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டு ள்ளது.

திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இளைஞர்கள் மத்தியில் இத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவும் முதற்கட்டமாகத் தெரிவாகியுள்ளது.

பேத்தாழை குகனேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இது தொடர்பான வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், கலந்துகொண்டார். அவர் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் 30 பேருக்கும் இதற்கான அனுமதி அட்டைகளை வைபவ ரீதியாக வழங்கி இப்பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன கிராமிய மின்சக்தி அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் தா. உதயஜீவதாஸ், பிரதேச செயலாளர் எஸ். கிரிதரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச கடற்பரப்பில் இலங்கை மீனவர் தொழிலிலீடுபட வசதி கடற்றொழில் சட்டத்தில் திருத்தம்

சர்வதேசக் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் தொழில் செய்யும் வகையில் கடற்றொழில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.

இதற்கான பணிப்புரைகளையும், வழிகாட்டல்களையும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

இதன் மூலம் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று இலங்கை மீனவர்கள் முகம்கொடுக்க நேரும் சட்ட ரீதியான நெருக்கடிகள் மற்றும் கைதுகளுக்கு தீர்வுகாண முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையானது சகல சர்வதேச இணக்கப்பாடுகளிலும் கையொப்பமிட் டுள்ள போதும் அதற்கிணங்க கடற்றொழில்களை மேற்கொள்வதற்கு முடியாதுள்ளது. இதனை கருத்திற்கொண்டு இது தொடர் பான தேசிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி, பாதுகாப்பு, முகாமைத்துவம் ஆகியவற்றை முறைப்படுத்தும் வகையிலும் சர்வதேச பிரிவுகள் மற்றும் இணக்கப் பாடுகளை நடைமுறைப்படுத்தும் வகை யில் தற்போதுள்ள சட்டமூலத்திலே திருத்தம் செய்யப்படவுள்ளது.

இதன் கீழ் கடற்றொழில் முகாமைத்துவப் பிரதேசங்கள் தொடர்பில் புதிய உத் தரவுகளைப் பிறப்பித்தல் தற்போதுள்ள சட்டமூலத்திற்கிணங்க அதிகாரமுள்ள அலுவலர்களுக்கு சர்வதேச கடற்பரப்பில் செயற்படும் அதிகாரங்களை வழங்கல், மீன்பிடி பிரதேசங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் திருத்தத்திற்கு உட்படுத்தப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

கொள்ளையர் பயன்படுத்திய கார் ஆஸ்பத்திரி விடுதியில் கண்டுபிடிப்பு


பேருவளை நகரில் இடம்பெற்ற சம்பவத்திற்கு கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் களுத்துறை நாகொட ஆஸ்பத்திரி வைத்தியர் விடுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை தெற்கு பொலிஸார் வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.

வாகனத்தில் பல இடங்களில் துப்பாக்கி சூட்டினால் சேதம் ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்களை தேடி பொலிஸ் குழுக்கள் வலை வீசியுள்ளன.

இதேவேளை துப்பாக்கிச் சமரின் போது மரணமான அளுத்கம, மொரகல்லைப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவனான சுதில் நிலுபுல் த சில்வாவின் இறுதிக் கிரிகைகள் நேற்று முன்தினம் (16) மாலை மொரகல்ல மயானத்தில் நடை பெற்றது.

பெருமளவிலான பாடசாலை மாண வர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சர்வ மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் இறுதிக் கிரிகைகளில் பங்குபற்றினர்.

பேருவளை, மொரகல்ல போன்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது.

பேருவளை நகருக்கு சமயப் பாடசாலை சீருடை தைக்க வந்த போது சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் மரணமானார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கில் பனை அபிவிருத்திக்கென ரூ. 30 மில்லியன் ஒதுக்கீடு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார்.

அத்துடன் பனை மரங்கள் வெட்டுதலைத் தடுப்பது தொடர்பில் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட, பிரதேச செயலாளர்களுக்கும் சுற்று நிருபங்களை அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் பத்தாண்டுத்திட்டத்தின் மூலம் தற்போது 11 மில்லியனாக உள்ள பனை மரங்களை 16 மில்லியனாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதுடன் இதற்கிணங்க யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அடுத்த மாதம் எட்டு மில்லியன் பனங் கொட்டை களைப் பயிரிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது யாழ்ப்பாணத்தில் 3.5 மில்லியன், பனைமரங்களும், கிளிநொச்சியில் 3.5 மில்லியன், மன்னாரில் 3 மில்லியன் பனை மரங்களும் உள்ளன. இவற்றைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிணங்க பனை மரம் தரிப்பதை முற்றாகத் தடை செய்யும் விவசாய அமைச்சின் சுற்றறிக்கையைக் கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அவசிய தேவைகளுக்காக பனை மரம் தேவைப்படுவோர் சம்பந்தப்பட்ட பிரதேச மாவட்டச் செயலாளர்களுக்கூடாக பனை அபிவிருத்திச் சபையின் அனு மதி பெற்றே மரங்களைத் தரிக்க முடியுமென்ற கட்டளையும் பிறப் பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக்கு 726 மில்லியன் ரூபா ஒதுக்கீடு



புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசு 726 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய ஜனாதிபதியின் ஆலோசகரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

வெள்ளியன்று (17.09.2010) புத்தளம் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரத்தின, மஹிந்த யாப்பா அபேவர்தன, மில்ரோய் பர்னாந்து, தயாசித்த திசேரா, பிரதி அமைச்சரான நியூமல் பெரேரா, பாராளு மன்ற உறுப்பினர் விக்டர் என்டனி பெரேரா மற்றும் மாகாண சபை அமைச்சர் சனத் நிஸாந்த உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு திணைக்களத்திலும் நடந்து முடிந்த அபிவிருத்திப் பணிகள், நடக்க வேண்டிய அபிவிருத்திகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இங்கு தெரிவிக்கப்பட்ட பலவித குறைகளையும் கேட்டறிந்த அமைச்சர் பசில் அவற்றை விரைவில் தீர்த்து வைப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனதுரையில் மேலும் கூறியதாவது :-

அபிவிருத்தித் திட்டப் பணிகள் மக்களின் காலடிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் ஜனாதிபதியின் விருப்பமாகும். அதேபோன்று அரச அதிகாரிகள் மக்களுடன் ஒன்றிணைந்து அபிவிருத்திப் பணிகளை ஆற்ற வேண்டும்.

உங்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் இடத்து இவ்வருடத்தில் 8 சதவிகிதத்திற்கும் மேலாக அபிவிருத்திப் பணிகளை எட்டமுடியும்.

விவசாயத்திற்கும், மீன்பிடிக்கும் சிறந்த இடமாக புத்தளம் மாவட்டம் திகழ்கிறது.

மற்றொரு விசேஷத்தையும் புத்தளம் மாவட்டம் பெறுகின்றது. இலங்கையின் ஆகக் கூடிய மின் உற்பத்தியான நுரைச் சோலை அனல் மின் திட்டத்தின் மூலம் 900 மெகாவாட் மின் உற்பத்தி பெறப் படவுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மருந்துகளின் விலைப்பட்டியலை காட்சிப்படுத்த அமைச்சு தீர்மானம்

அடுத்த வருடம் முதல் சகல அரசாங்க ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகளுக்கு வழங்கும் மருந்துகளின் விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்த சுகாதார போஷாக்கு அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தீர்மானித்துள்ளார்.

நோயாளிகளுக்கு பாமஸிகளில் இருந்து கொள்வனவு செய்வதற்காக மருத்துவர்கள் சிபார்சு செய்யும் மருந்துகளின் விலைகளும் இதேபோல காட்சிப்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.

அரசாங்கம் இலவச மருத்துவ சேவைக்காக எவ்வளவு செலவிடுகிறது என்பதை மக்களுக்கு புரிய வைப்பதற்காகவே இந்த புதிய திட்டம் அமுல்படுத்தப்பட வுள்ளது.

மருந்து வகைகள் இலவசமாக வழங்கப்படுவதால் அவற்றின் பெறுமதியோ மதிப்போ நோயாளிகளுக்கு புரிவதில்லை. இதனால் சிறு குறையைக் கூட தூக்கிப் பிடிப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.

இது தவிர ஆஸ்பத்திரியில் இல்லாத சில மருந்துகளை வெளியில் இருந்து வாங்குமாறு மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். அத்தகைய மருந்து வகைகளின் விலைப்பட்டியல்களும் அடுத்த வருடம் முதல் காட்சிப்படுத்தப் படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

Sep 17, 2010

மட்டு. வெடிப்புச் சம்பவம்: வைத்தியசாலையில் கதறியழும் உறவுகள்

போதனா வைத்தியசாலையில் கூடியுள்ள காயமடைந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுவதாகவும் காயமடைந்தோரைப் பார்வையிட பெருந்திரளான மக்கள் வைத்தியாசாலையில் கூடியுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் வளாகத்தில் இன்று முற்பகல் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றது. இச் சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மூவர் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

இவர்களில் இருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனவும் மற்றையவர் சீன நாட்டுப் பிரஜையெனவும் அவர் குறிப்பிட்டார். இச்சம்பவத்தில் காயமடைந்த 52 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூவர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டு. வெடிப்பு சம்பவத்தில் 60 பேர் வரை உயிரிழப்பு-



மட்டு. வெடிப்பு சம்பவத்தில் 60 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சற்று முன்னர் வரை பொலிஸ் உத்தியோகஸ்தர் பொதுமக்கள் உட்பட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து எமது செய்தியாளர் தரும் தகவல்
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையர் உட்பட 31 பேர் கொரியாவிலிருந்து நாடு கடத்தல்

இலங்கையர்கள் உள்ளிட்ட 31 பேர் கொரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு ள்ளனர். கொரியாவில் பல குற்றச் செயல்க ளில் இவர்கள் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கொரிய விமான நிலையத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட கைவிரல் அடையாளம் பெறும் புதிய திட்டத்தினை அடுத்தே அவர்கள் குற்றவாளிகளாக இனங் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் குற்றச் செயல்கள் மற்றும் விசா காலாவதியாகியும் கொரியாவில் வசித்து வருகின்றமை உள்ளிட்ட செயற் பாடுகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறி யப்பட்டுள்ளதாக கொரிய நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் கொல்லப்பட்ட விவகாரம்: 5 பொலிஸ் உட்பட 9 பேர் கைது; இரு அத்தியட்சகர்கள் இடமாற்றம்






பேருவளையில் பொலிஸாருக்கும் கொள்ளைக் கோஷ்டியொன்றுக் குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸார் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் மகரகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பொலிஸாரும் நான்கு பொது மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் நுகேகொடை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் மற்றும் மிரிஹானை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் சேனாபதி ஆகியோர் நேற்று பொலிஸ் களப்பிரிவு தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

பேருவளை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வைத்து கொள்ளைக் கோஷ்டியினரை சுற்றி வளைத்துப் பிடிக்கும் நோக்கில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்குமிடையில் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது.

இதன்போது அப்பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த 07 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததுடன் அவனது தந்தை காயங்களுக்கு உள்ளானார். சம்பவத்தின்போது தப்பிச் சென்ற கொள்ளைக் கோஷ்டியினரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று 16 ஆம் திகதி மாலை களுத்துறை மேலதிக நீதவான் நாமல் பெரேரா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர் வரும் 30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ. நா. மாநாடு: ஜனாதிபதி தலைமையிலான குழு நியூயோர்க் பயணம்





ஐ. நா. வின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு நியூயோர்க்கிற்கு புதன்கிழமை பயணமானது. முற்பகல் 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட யூ. எல். 503 இலக்கமுடைய லண்டன் செல்லும் விமானத்தில் இக் குழு பயணமானது.

ஜனாதிபதி தலைமையிலான குழுவில், வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் அடங்குகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் உச்சி மாநாடு எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றது. இந்த மாநாட்டில் ஈமிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.

ஐக்கிய நாடுகளின் 65 ஆவது பொதுச் சபை அமர்வுகள் கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உலகத் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுவார்.அமைச்சர்களின் பொது விவாதங்களுக்கான அமர்வுகள் உச்சி மாநாடு எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும்.

உச்சி மாநாட்டில் ஈமிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் எனும் தலைப்பில் மட்டுமல்லாது கால நிலை மாற்றம், உணவு பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட நாடுகளின் மீளமைப்பு, பாதுகாப்பு சபை மறு சீராக்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவு ள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாகரன் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள அழிவுகளை ஒவ்வொருவரும் மீட்டிப்பார்க்க வேண்டும் பூநகரி மாவீரர் கிராமத்தில் ரங்கா எம்.பி உரை

வன்னியை முப்பது வருடங்களாகத் தம் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த பிரபாகரன் அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்கோ, அங்கு வாழ்கின்ற மக்களின் மேம்பாட்டுக்கோ எதுவும் செய்யவில்லை. மாறாக பிரபாகரனிட மிருந்து மக்களுக்கு இன்று எஞ்சி இருப்பது அழிவுகள் மாத்திரமே.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்தார். பிரபாகரனின் தேவைக்காக தம் உயிர்களை அர்ப்பணித்த வர்களின் குடும்ப உறுப்பினர் களின் நலன்புரி நடவடிக்கை களை கூட இன்று அரசாங்கமே மேற் கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தி லுள்ள பூநகரி பிரதேசத்தி லுள்ள மாவீரர் கிராமத்திலி ருக்கும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற வைபவ த்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார்.

இக்கிராமத்திலுள்ள பாடசாலையின் தேவைகளை இனம் காண்பதற்காகவும், அங்கு கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு பாடசாலை உபகரணங்களை பகிர்ந்தளிப்பதற்காகவும் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட எம்.பியுமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் புதிய இளம் எம்.பிக்கள் குழு நேற்று முன்தினம் இக்கிராமத்திற்கு விஜயம் செய்தது.

பிரபாகரனின் தேவைக்காக தம் உயிரை அர்ப்பணித்தவர்களின் உறவினர்களது ஐநூறு குடும்பங்கள் இருக்கிராமத்தில் வசிக்கின்றன. இக்கிராமம் ஏற்கனவே முத்தப்பன் கிராமம் என அழைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எம்.பி. நாமல் ராஜபக்ஷ பாடசாலை உகரணங்களைப் பகிர்ந்தளித்தார்.

இந்நிகழ்வில் எம்.பி. ரங்கா தொடர்ந்தும் உரையாற்றுகையில், வடபகுதியை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஒரு வருட காலமாக பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். ஆனால் தமிழ் மக்களின் தலைவர் என்று கூறிய பிரபாகரன் கடந்த முப்பது வருடங்களாக வட பகுதி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள அழிவுகளை ஒவ்வொருவரும் மீட்டிப் பார்க்க வேண்டும்.

அவர் இப்பிரதேசத்தை தம் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தபோது ஒரு பாடசாலையையே, குளத்தையோ அபிவிருத்தி செய்தாரா? இல்லவே இல்லை. தமது மக்களின் வாழ்வையே இவர் அழித்து நாசப்படுத்தினார். அந்த அழிவுதான் தமிழ் மக்களுக்கு எஞ்சியுள்ளது. தமது மக்களுக்கு மரணத்தைப் பெற்றுக்கொடுத்து அவர் தம் மக்களுக்கு வழங்கிய விடுதலை தான் என்ன.

நான் அரச சார்பு எம்.பி. அல்ல. ஆனால் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்யும் சேவைகளைப் பார்த்தே நான் அரச பக்கம் சார்ந்தேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டை இருபது வருடங்களுக்கும் மேல் ஆட்சி செய்ய வேண்டும். இந்தக் காலப் பகுதியில் அவர் முழு நாட்டிலும் குறிப்பாக வட பகுதியிலும் சுபிட்சத்தை ஏற்படுத்தித் தருவார். அதனால் எதிர்காலத்தில் தமிழ் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டியதில்லை. நாட்டுக்கென்று உயிரை மாய்த்துக்கொள்வதும் அவசியமில்லை. மாறாக நாட்டுக்குச் சேவை செய்யக்கூடியவர்களாக இப்பிள்ளைகள் மாறவேண்டும்.

அதற்குத் தேவையான கல்வியையோ, தொழிற் பயிற்சியையோ பெற்று தம்மை மேம்படுத்திக்கொள்வது அவசியம். இதற்குத் தேவையான வேலைத் திட்டங்களை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது என்றார்.

இந்நிகழ்வில் எம்.பிக்களான உதித லொக்குபண்டார, ஷெஹான் சேமசிங்க, கணக ஹேரத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

வட்டக்கச்சியில் ரூ. 20 மில்லியன் செலவில் இரு பாடசாலை கட்டடங்கள்






முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வட்டக்கச்சியில் இரண்டு பாடசாலைக ளில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடங்களுக்கான அடிக்கல் நேற்று நடப்பட்டது.

இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம்.பி, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர்.

வட்டக்கச்சி பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட மாணவ, மாணவிகளின் கல்வி நடவடிக்கையை கருத்திற் கொண்டு வட மாகாண கல்வி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக கற்கை நிலையங்கள் இரண்டு நேற்று திறந்து வைக்கப்பட்டதாக ஆளுநர் தெரிவித் தார்.

தலா 5 மில்லியன் ரூபா செலவில் நான்கு நிரந்தர கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள பல பாடசாலைகளுக்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்த இந்தக் குழுவினர் அங்கு நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் மேலும் 3000 ஏக்கரில் நெற்செய்கை






யாழ்ப்பாணத்தில் அடுத்த பெரும் போகத்தின் போது மேலும் மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் குழுக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பயிர்ச் செய்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு வசதியாக இம்மாத இறுதிக்குள் தென்மராட்சி, அராலி போன்ற பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை துரிதமாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், வட மாகாண ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாக ஆளுநர் சுட்டிக் காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது மேற் கொள்ளப்பட்டுவரும் பயிர் செய்கை களுக்கு மேலதிக மாகவே 3000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்கைகளை மேற் கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நிவாரணக் கிராமங்களில் இன்னும் 25,000 பேர் மாத்திரமே







இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 25 ஆயிரம் பேரே மீள்குடியேற்றுவதற்காக எஞ்சியுள்ளனர். இவர்களில் அதிகமானவர் கள் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. நிவாரணக் கிராமங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

10 வீதமானவர்களே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர்.

இவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள் ளதாக கூற முடியாது. ஏனென்றால் அவர்கள் தினமும் தொழிலுக்குச் சென்று மாலையில் திரும்பி வருகின் றனர்.
மேலும் இங்கே தொடர்க...

Sep 16, 2010

விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கை கர்ப்பபை: குழந்தை இல்லாதவர்களின் பிரச்சினைக்கு தீர்வு




பெண்களுக்கு கர்ப்பபையில் கோளாறு ஏற்பட்டால் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது பெண்களுக்கு அதிக அளவில் கர்ப்பபை புற்று நோய் ஏற்படுகிறது. அவர்களுக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது.

இவர்களுக்கு உதவும் வகையில் விஞ்ஞானிகள் செயற்கை கர்ப்பபையை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள புரோன் பல்கலைக்கழகம் மற்றும் பெண்கள்- குழந்தைகள் ஆஸ்பத்திரி மருத்துவ விஞ்ஞானிகள் கூட்டாக ஆய்வு செய்து இதை உருவாக்கி உள்ளனர்.

உடல் தசையில் இருந்தே இதை உருவாக்கி இருக்கின்றனர். இதை பெண்கள் உடலில் பொருத்தி கருவை வளர்க்க முடியும். செயற்கை கர்ப்பபை வெற்றிகரமாக அமைந்தால் குழந்தை இல்லாத பெண்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சர் பசில் தலைமையில் யாழ். மாவட்ட மீளாய்வுக் கூட்டம் முதற் தடவையாக தமிழ்க் கூட்டமைப்பும் பங்கேற்பு


யாழ். மாவட்ட அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் செயலகத்தில் இடம்பெற்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் வடமாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ இதில் கலந்து கொண்டார். யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்து விளக்கினார்.

இந்தக் கூட்டத்தில் பாரம்பரிய கைத்தொழில் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி, வட மாகாண பொது நிர்வாக செயலாளர் தி. இராசநாயகம், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ. சரவணபவன், இ. சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், பிரதேச சபை செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் பசில் மேலும் கூறியதாவது:

தீவகம் பண்ணை - வேலணை வீதியும் கட்டுவன், தொண்டைமானாறு பிரதான வீதிகள் விரைவில் மீள்புனரமைப்பு செய்யப்படும். அத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.

வலிகாமத்தில் 1990 களில் இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்கு (வலி. வடக்கு) மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுத்து அபிவிருத்திகள் செய்யப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளேன்.

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கப்படுவதற்கான பாரிய திட்டமிடலை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

துறைசார்ந்த திணைக்களங்களுக்கு ஏற்கனவே இனம் காணப்பட்டு நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்களுக்கு முழு மையாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகளை திணைக்களங்களின் தலைவர்கள் முன்வைக்க வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் சர்வதேச விஞ்ஞான ஆய்வு நிலையம்


சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி மத்திய நிலையமொன்றை இலங்கையில் நிறுவத் தீர்மானித்துள்ளதாக தொழில்நுட்ப விஞ்ஞான ஆராய்ச்சித்துறை அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இது தொடர்பான முக்கிய பேச்சு வார்த்தையொன்று அமைச்சரின் தலை மையில் செவ்வாயன்று கொழும்பில் நடை பெற்றதுடன் சர்வதேச மற்றும் தேசிய ரீதியிலான விஞ்ஞானத்துறை முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு கருத் திட்டத்தின் கீழ் இலங்கையின் மின் வலு, கடல், வான், வர்த்தகத்துறைகளை விஞ்ஞானத்துறையுடன் இணைந்ததாக முன்னேற்றும் வகையில் மேற்படி சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி மத்திய நிலையம் இலங்கையில் அமைக்கப்பட வுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேச மட்டத்திலுள்ள விஞ்ஞான ஆராய்ச்சித்துறை நிபுணர்களை இணைத்துக்கொண்டு துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுடன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்ட ங்களை மேற்கொள்ளவும் கைத்தொழிற் துறையை முன்னேற்றவும் இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

விஸா காலாவதி: பிரான்ஸ் தம்பதி காலியில் கைது


விசா காலாவதியான நிலையில் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டு தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காலி, கோட்டை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக காலி கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

காலி மஜிஸ்ட்திரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை இம்மாதம் 23ம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் இலங்கையில் தங்கியிருப்பதற்கான விசா வைத்திருக்கவில்லை. கடந்த 4ம் திகதியுடன் இவர்களது விசா காலாவதியாகியுள்ள நிலையில் இவர்கள் இலங்கையில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கான காரணங்களைக் கூற தவறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் ஆண் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். (42 வயது), பெண் மடகஸ்கரைச் சேர்ந்தவர் (23 வயது).

இருவரும் மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடமராட்சி கிழக்கில் மீள் குடியேறும் மக்களுக்காக அடிப்படை வசதிகள்

வடமராட்சி கிழக்கில் மீள்குடியேறிவரும் மக்களின் நலன் கருதி அரசின் பல்வேறு நல சேவைத் திட்டங்கள் நேற்று முன்தினம் (செவ்வாய்) பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, அரச நிர்வாகத் தொடர்பாடல் உள்ளிட்ட பல்வேறு நலச் சேவைகள் இதில் அடங்குகின்றன. ஆழியவளை – பருத்தித்துறை, ஆழியவளை - கொடிகாமம் ஆகிய பாதைகளுக்கான பஸ் சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் செம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, வடமராட்சி கிழக்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வத்திராயன் கிளை, மருதங்கேணி அரசினர் கிராமிய வைத்தியசாலை ஆகிய சேவைகள் மீள ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அத்துடன் யுத்தத்தினால் சேதமடைந்த பருத்தித்துறை பிரதேச சபையின் செம்பியன்பற்று அலுவலகம் புனரமைப்புச் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டதுடன் வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கான புதிய கட்டடம் அமைப்பதற்கு அத்திவாரக் கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.

இதுதவிர படையினால் ஆழியவளையி லும் உடுத்துறையிலும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் இரு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

புதுக்குடியிருப்பு பிரிவில் மீள்குடியேற்றம் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக் குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் மக்களை மீள் குடியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முல்லைதீவு அரச அதிபர் வேத நாயகம் நேற்று கூறினார். இதன்படி முதலில் விஸ்வமடு மேற்குப் பிரதேசத்தில் 306 குடும்பங்களைச் சேர்ந்த 989 பேர் மீள் குடியேற்ற ப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு பிரதேசத்திலே புலிகள் பெருமளவான ஆயுதங்க ளையும் மிதிவெடிகளையும் புதைத் தனர். இதனால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் மீள் குடியேற்றும் பணிகள் தாமதமடை ந்தன. இராணுவம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த பல குழுக்கள் இப்பகுதியில் மிதி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபடு த்தப்பட்டன.

இதன்படி முதற் தடவையாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மக் கள் மீள் குடியேற்றப்பட்டுள்ள தோடு அடுத்து விஸ்வமடு கிழக்கில் மக்கள் மீள் குடியேற்றப்பட உள்ள தாகவும் அரச அதிபர் கூறினார். இந்த வார இறுதிக்குள் விஸ்வமடு கிழக்கு பகுதி முற்றாக மிதிவெடிகள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்து க்காக கையளிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதேவேளை முல்லைத்தீவு மாவ ட்டத்தில் சுமார் 60 வீதமான மீள்குடியேற்றப் பணிகள் நிறை வடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கூறியது. துணு க்காய், மாந்தை மேற்கு பகுதிகளில் மீள்குடியேற்றும் பணிகள் முழு மையாக நிறைவடைந்துள்ளதோடு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் மட்டும் மீள்குடியேற்றம் எஞ்சியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். குடாவில் மீளக்குடியேற 150 சிங்கள குடும்பங்கள் விண்ணப்பம்

யாழ். குடா நாட்டில் மீளக்குடி யேறுவதற்கு 150 சிங்களக் குடும்பங்கள் விண்ணப்பித்திருப்பதாக யாழ்ப்பாண பாதுகாப்பு படையின் சிவில் விவகார பொதுசன அலுவலக அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இந்த 150 குடும்பங்களின் உறுப்பினர்களும் இடம் பெயர்ந்து அனுராதபுரம், மிஹிந்தல போன்ற பல இடங்களில் நண்பர்கள், உறவினர்களின் இருப்பிடங்களில் தற்போது தங்கி இருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், யாழ். குடா நாட்டில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்த இந்த சிங்களக் குடும்பங்களின் உறுப்பினர்களே திரும்பவும் யாழ்ப்பாணத்தில் குடியேற விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருக்கின்றார்கள். இவர்களில் பலர் திருநெல்வேலி, கொழும்புத்துறை போன்ற பிரதேசங்களில் வசித்துள்ளார்கள்.

அவர்களது காணிக்கான உரிமைப் பத்திரங்களையும் அவர்கள் வைத்திருக்கின்றார்கள். இவர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, தொழில் புரிந்துள்ளார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

Sep 15, 2010

நிபுணர் குழு பான்கி மூனை சந்திக்கவுள்ளது



இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு இந்த வாரம் ஐ.நா. செயலாளர் நாயகத்தைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

சிறைகளிலுள்ள முதியோர், சிறுவரை விடுவிக்க நடவடிக்கை ஜனாதிபதி பணிப்புரை


சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவி க்கும் சிறுவர் மற்றும் முதியவர்களை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

சிறுவர் மற்றும் முதியோரை விடுதலை செய்யும் வகையில் சிபாரிசினை தமக்கு முன்வைக்குமாறு ஜனாதிபதி அமைச்சர் டியூ. குணசேகரவிற்கு உத்தரவிட்டார்.

நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற தேசிய கைதிகள் நலன்புரி தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி அத்தாட்சிப்படுத்தப்பட்ட அனுமதி மூலமாக ஐந்து சிறைக் கைதிகளை விடுதலை செய்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சர் பசில் தலைமையில் யாழ். மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆகியன இன்று நடைபெறுகின்றன.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறுகின்ற இந்த கூட்டத்திற்கு வடமாகாண ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமை வகிக்கவுள்ளார்.

வட மாகாண அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி மற்றும் யாழ். மாவட்ட எம்.பிக்கள், உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாண்டுக்கான முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் இதுவாகும் என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அபிவிருத்தியில் சகல இனங்களுக்கும் வாய்ப்பு; பயங்கரவாதம் எதிர்காலத்தில் தலைதூக்காது கிளிநொச்சி அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் நாமல் ராஜபக

நாட்டில் அனைத்து இன மக்களும் சமமான வகையில் பயன் பெறும் துரித அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் இந்த நாட்டில் பயங்கரவாதம் ஒருபோதும் தலைகாட்ட முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கிளிநொச்சியில் கூறினார்.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் கிளிநொச்சி பிரதேச மக்களின் சுக துக்கங்கள் மற்றும் எதிர்கால தேவைகளைக் கண்டறிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று முன்தினம் (13) கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.

நாமல் ராஜபக்ஷ மற்றும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் (13) காலை கிளிநொச்சி நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள டிரைஸ்டார் ஆடைத் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டியதுடன் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கான பயிற்சி நிலையத்தையும் திறந்து வைத்தனர். அதனையடுத்து கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பல்கலைக்கழக கட்டிடத் தொகுதியையும் அவர்கள் பார்வையிட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் குளங்களைச் சீரமைக்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கல்மடுவில் உள்ள வில்லுக்குளத்தில் இடம்பெற்றது. அங்கு பிரதேசத்தின் இளைஞர் சங்கங்களின் பங்களிப்புடன் இடம் பெற்ற சிரமதான நிகழ்வுகளில் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினர்.

அங்கு தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது:-

அன்று யுத்தத்துக்கும் துப்பாக்கிக்கும் பழகிப்போன இளைஞர்களை இன்று தொழில் பயிற்சிகளுக்கு பயிற்றுவிக்க முடிகிறது. இதனால் நாட்டுக்கும் தனிப்பட்ட ரீதியிலும் அபிவிருத்தி கிடைக்கிறது. பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட அல்லது இடை நடுவில் கைவிட்ட இப் பிரதேசத்தை சேர்ந்த அனைத்து இளைஞர், யுவதிகளுக்கும் அவர்கள் மிகவும் விரும்பும், மற்றும் திறமை காட்டும் தொழிற்துறையில் ஈடுபடுவதற்கு தேவையான ஆரம்ப பயிற்சியை வழங்கும் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்கப்படும்.

பயங்கரவாதம் இந்த நாட்டுக்கு இல்லாமற் செய்தவற்றை திரும்பப் பெற இந்த பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு தேவையான வசதிகளையும் சிறுவர்களுக்கு கல்வியையும் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தொழில்களையும் உருவாக்கிக் கொடுப்பது அவசியமாகும். இதற்கான வேலைத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரதேசங்களின் குறைபாடுகள் மற்றும் நிறைவேற்றப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக முன்னேற்றக் கூட்டத்தை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு மாதமும் நடத்துவதற்கு உத்தேசித்துள்ளோம்” இவ்வாறு நாமல் ராஜபக்ஷ எம். பி. குறிப்பிட்டார்.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இந்த விஜயத்தில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அலுத் கமகே உரையாற்றும்போது இளைஞர் யுவதிகளிடம் உள்ள உண்மையான திறமைகளை கண்டறிந்து அவற்றை வளர்ப்பதற்கு உதவுவதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியில் அவர்களை பங்குதாரராக சேர்த்துக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார, ஸ்ரீரங்கா, உதித லொக்குபண்டார, கணகஹேரத், செஹான் சேமசிங்க மற்றும் கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

நகரபிதாவின் செயலை ஆட்சேபித்து வவுனியா நகரசபை உறுப்பினர்கள் மைதானத்தில் சத்தியாக்கிரகம்


வவுனியா நகரசபையின் மாதாந்தக் கூட்டத்தை நகரசபைத் தலைவர் நேற்று செவ்வாய்க்கிழமை இடை நிறுத்தி வைத்ததையடுத்து சபை உறுப்பினர்கள் 10 பேரும் மேற்படி சனநாயக விரோதச் செயலை கண்டிப்பதாகத் தெரிவித்து அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கொளுத்தும் வெய்யிலில் சுமார் இரண்டு மணி நேரம் வாய்களை கறுப்புத் துணியினால் கட்டியவாறு உறுப்பினர்கள் அமைதியான முறையில் மைதானத்தின் நடுவில் அமர்ந்திருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உப தலைவர் முகுந்தரதன் உள்ளிட்ட உறுப் பினர்களான எஸ். சுரேந்திரன், எஸ். சிவகுமார், இ. கனகையா, புளொட் உறுப்பினர்களான எதிர்க்கட்சி தலைவர் ரி. லிங்கநாதன், சு. குமாரசாமி, பார்த்திபன், பொதுசன ஐக்கிய முன்னணி உறுப்பினர்கள் லலித் ஜயசேகர, அப்துல்பாரி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எல். முனாபர் ஆகிய பத்து சபை உறுப்பினர்களும் தலைவரின் நடவடிக்கையினை ஆட்சேபித்து கட்சி பேதமற்ற முறையில் தாங்கள் இந்தப் போராட்டத்தில் இறங்கியதாக குறிப்பிட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

சணச அபிவிருத்தி வங்கி கிளிநொச்சியில் திறப்பு

சணச அபிவிருத்தி வங்கியின் புதிய கிளையொன்று நேற்று 14ம் திகதி கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த வங்கியின் கிளையை இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும், அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பியுமான நாமல் ராஜபக்ஷ நேற்றுக் காலை 8.30 மணிக்குத் திறந்து வைத்தார்.

கிளிநொச்சி பிரதேச விவசாயிகளுக்கு தேவையான கடன் வசதி, குறிப்பாக விவசாய உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான விசேட கடன் வசதி என்பன இக்கிளை ஊடாகச் செய்து கொடுக்க எதிர்பார்ப்பதாக வங்கியின் தலைவர் கலாநிதி பி. ஏ. கிரிவந்தெனிய கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சம்பந்தன், மாவையின் பிள்ளைகள் யுத்தத்தின் துன்பத்தை அனுபவிக்கவில்லை அப்பாவிகளே பாதிப்புற்றனர்; கிளிநொச்சியில் ரங்கா எம்.பி.

அரசியல் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரின் பிள்ளைகள் யுத்தத்தின்போது துன்பங்களை அனுபவிக்கவில்லை. அவர்கள் இந்தியாவிலும், இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா தெரிவித்தார்.

அப்பாவித் தமிழ் மக்களின் பிள்ளைகள் யுத்தத்தின் துன்பங்களை அனுபவிக்கையில் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரின் பிள்ளைகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங் களில் கல்வி பெற்றனர். ஆனால் தேர்தல் காலங்களில் இந்த அப்பாவி மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இவர்கள் வந்து விடுகின்றனர். தம்பிள்ளைகளைப் போன்று அடுத்தவரின் பிள்ளைகளையும் பார்க்க வேண்டிய பண்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வரவேண் டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யுத்தம் காரணமாக அழிவுற்று ள்ள கிளிநொச்சி உட்பட்ட வட பகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை யிலான தென்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் மீளக் கட்டியெழுப்பும் பணியை முன்னெடுத்திருக்கின்றனரே தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அல்லர் என்றும் அவர் கூறினார். ‘இளைஞர்களுக்கான நாளை’ அமைப்பின் தலைவரும், அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி.யுமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ள புதிய இளம் எம்.பி.க்கள் குழுவில் எம்.பி.ஜே. ஸ்ரீரங்காவும் இடம்பெற்றுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:-

‘30 வருடகாலம் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் முடிவடைந்த பின்னர் தென் பகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கிளிநொச்சி மாவட்டத்துக்கு சென்று இந்த மக்களின் தேவைகளை கண்டறிவது மிகவும் சிறப்பான உதாரணம் ஆகும். எப்போதும் நாட்டினதும் மக்களினதும் வெற்றியை நோக்கிய தேவைகளை பூரணப்படுத்தும் செயற்பாடுகள் அவசியமானவை.

யுத்தத்தால் சீரழிந்து போன பிரதேசங்களில் அரசாங்கம் ஆரம்பித்துள்ள துரித அபிவிருத்தித் திட்டங்களில் இப்பகுதி மக்கள் பிரதிநிதிகளினதும் மற்றும் அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகியது. யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பிரதேசத்தில் உள்ள சிறுவர்களே. அவர்களுக்கு உதவவேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.

மாவை சேனாதிராஜா, சம்பந்தன் ஆகியோரின் பிள்ளைகள் யுத்தத்தின்போது துன்பங்களை அனுபவிக்கவில்லை. அவர்கள் அப்போது இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வந்தனர். தமது பிள்ளைகளைப் போலவே மற்றோரின் பிள்ளைகளையும் கருதுவதற்கு நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

30 வருட காலம் துன்பங்களை அனுபவித்த மக்களின் வாக்குகள் மூலம் அதிகாரத்துக்கு வந்துள்ள பிரதிநிதிகள் மக்களின் கஷ்டங்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவுவது கடமையாகும். அக்கஷ்டங்களை அப்பிரதிநிதிகள் நேரில் கண்டறியவும் வேண்டும்.

முப்பது வருட கால பயங்கரவாதத்தினால் இழந்தவற்றை மீண்டும் ஒரே நாளிலோ 24 மணி நேரத்திலோ பெற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு பெற்றுக்கொள்ள குறிப்பிடத்தக்க காலம் செல்லும். எனினும் அதற்கான ஆரம்பம் இப்போது ஏற்படுத்தப்பட்டுவிட்டது.

நாமல் ராஜபக்ஷ மற்றும் இங்கு வருகை தந்துள்ள புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் அல்ல. எனினும், முப்பது வருடங்கள் துன்பமுற்ற மக்களுக்கான தமது கடமைகளை நிறைவேற்றவே அவர்கள் இங்கு வந்துள்ளனர். ஆனால் இதனை உண்மையிலேயே செய்ய வேண்டியவர்கள் இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளே.

ஆனால் அவர்கள் இதனைச் செய்ய முன்வரவில்லை. ஐந்து வருடங்களுக்கொருமுறை மக்களை ஞாபகப்படுத்தும் முறைமையை நாம் அனைவரும் மறந்துவிட வேண்டும். அரசாங்கம் ஆரம்பித்துள்ள அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தையும் விமர்சித்துக் கொண்டிருப்பதைவிட அதற்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றி, அதன் பயனை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஸ்ரீரங்கா குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, சந்திரகுமார, உதித லொகுபண்டார, கணக ஹேரத், செஹான் சேமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

Sep 14, 2010

முல்லைத்தீவு மீனவருக்காக ஐஸ் தொழிற்சாலை, வெளிச்ச வீடு நிர்மாணம்






முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் நலன் கருதி ஐஸ் உற்பத்தி நிலையம் மற்றும் வெளிச்ச வீடு ஆகியவற்றை நிர்மாணிக்கவுள் ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட மீன்பிடிக் குடும்பங்களுக்குத் தேவையான மீன் பிடிப் படகுகளை அமைச்சுக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த மீனவர்களின் நலனை கருத்திற்கொண்டு ரெஜிபோம் பெட்டிகள் பொருத்தப்பட்ட 65 சைக்கிள் களும் 50 தோணிகளும் கையளிக்கப் பட்டுள்ளன. நாளாந்தம் பிடிக்கும் மீன்களை பாதுகாப்பாக வைக்கும் பொருட்டே வேல்ட் விஷனின் ஒத்துழைப் புடன் ஐஸ் உற்பத்தி நிலையம் ஒன்றை முல்லைத்தீவில் அமைத்துக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள தென்று ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 13 மீனவச் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது குறைகளை ஆளுநர் கேட்டறிந்து கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

கனடா சென்றடைந்த அகதிகளின் விபரங்கள் திருட்டு




கடந்த மாதம் ‘சன் கூ’ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த அகதிகளின் விபரங்கள் களவாடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விசாரணைகளை ரொரன்டோ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கனேடிய தமிழர் பேரவையின் அலுவலகத்தில் இருந்த கணனி ஒன்றும் களவாடப்பட்ட நிலையிலேயே எம்.வி. சன். சீ கப்பலில் கனடாவை வந்தடைந்திருக்கும் 492 இலங்கைத் தமிழர்கள் தொடர்பான விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக அப்பேரவை குற்றஞ்சாட்டி உள்ளது.

இத்திருட்டு சனிக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கின்றது என்றும் இத்தமிழர்கள் குறித்த ஆவணங்கள் மாத்திரமே திருடப்பட்டிருக்கின்றன என்றும் இது ஒரு திட்டமிட்ட திருட்டு வேலை என்றும் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இலங்கை பற்றி இன்று கேள்வி




இலங்கையின் புதிய நிலைமைகள் தொடர்பிலான விவாதமொன்று இன்று செவ்வாய்க்கிழமை பிரிட்டிஷ் பாராளுமன்றில் நடைபெறவுள்ளது.

வாய்மூல கேள்வி நேரத்தின் போது பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாயதுறையிடம் கேள்விகள் கேட்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பிலும் இலங்கையுடனான பிரிட்டனின் தற்போதைய உறவு தொடர்பிலும் தமிழ் மக்களின் நிலைமை தொடர்பிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பிரிட்டிஷ் வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் மற்றும் ஏனைய வெளிவிவகாரத்துறையிடம் அமைச்சர்கள் பதிலளிக்கவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

Sep 13, 2010

அரேபியாவில் இருந்து பிலிப்பைன்ஸ் சென்றபோது விமானத்துக்குள் ரகசியமாக ஆண் குழந்தை பெற்ற பெண்; குப்பை தொட்டிக்குள் வீசிவிட்டு ஓட்டம்








அரேபிய நாட்டில் இருந்து பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டனர். இதை தொடர்ந்து விமானத்துக்குள் இருந்த குப்பைத் தொட்டியை சுத்தம் செய்ய துப்புரவு ஊழியர்கள் அதை வெளியே எடுத்து வந்தனர்.

விமானத்தை விட்டு இறங்கியதும் அந்த குப்பையை ஊழியர்கள் தரம் பிரித்தனர். அப்போது அதில் சிறிது நேரத்துக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை ஒன்று டிஷ்சு பேப்பரில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விமான நிலைய டாக்டருக்கு தகவல் கொடுத்தனர். உடனே நர்சுடன் டாக்டர் அங்கு விரைந்து வந்தார். பேப்பரில் சுற்றப்பட்டிருந்த அந்த குழந்தையை வெளியே எடுத்தனர்.

அக்குழந்தை சிறிது நேரத்துக்கு முன்புதான் பிறந்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ரத்தம் கூட காயாமல் அப்படியே இருந்தது. விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் பயணி ரகசியமாக குழந்தை பெற்று அதை குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது.

உடனே அக்குழந்தையை மணிலா விமான நிலைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து நர்சுகள் சுத்தம் செய்தனர். மேலும் உடலை பரிசோதித்தனர். அது மிகவும் உடல் நலத்துடன் உயிருடன் இருந்தது.

இதைத்தொடர்ந்து அந்த குழந்தைக்கு பாட்டில் மூலம் பால் கொடுக்கப்படடது. அதை குடித்தவுடன் அக்குழந்தை லேசாக அழ தொடங்கியது. பின்னர் அக்குழந்தை நினோய் அகினோ ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சமூகசேவகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே விமானத்தில் கள்ளத்தனமாக குழந்தை பெற்று அதை குப்பை தொட்டியில் வீசி சென்ற பெண்ணை கண்டு பிடிக்கும்படி பிலிப்பைன்ஸ் சமூக நலத்துறை செயலாளர் சரிமன் உத்தரவிட்டுள்ளார்.

அப்பெண் யார் என கண்டறிந்து அவளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், இது ஒரு கிரிமினல் குற்றம் என்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா மீதான விசாரணை : 2ஆவது இராணுவ நீதிமன்றம் இன்று

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மீதான விசாரணைகள் நடத்தவென நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்று முதல் 6 நாட்களுக்குத் தொடர்ந்து இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவச் சட்டத்திட்டங்களை மீறியது தொடர்பில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இந்த நீதிமன்றம் கூட்டப்பட்டது.

நீதிமன்றம் இறுதியாகக் கடந்த 10ஆம் திகதி கூடியது. இதன் போது சரத் பொன்சேகாவின் சட்டத்தரணிகள் சமூகமளிக்காத நிலையில், அது இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

நிருபமா 16இல் அமெரிக்கா பயணம்

இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், எதிர்வரும் 16ஆம் திகதி அமெரிக்கா செல்லவிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வரவிருப்பது தொடர்பான நிகழ்ச்சி நிரலை இறுதி செய்வது குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் நிருபமா பேச்சு நடத்தவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

ஒபாமா எதிர்வரும் நவம்பர் 9 முதல் 11ஆம் திகதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அவரது வருகையின்போது, இந்தியத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காகவே நிருபமா அமெரிக்கா செல்லவுள்ளதாகவும், ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விசா கட்டண உயர்வு, வெளிப்பணி ஒப்படைப்பு தடை விவகாரம், உயர் தொழில்நுட்ப ஏற்றுமதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் அமெரிக்க அதிகாரிகளுடன் நிருபமா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே எதிர்வரும் 20ஆம் திகதி ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நியூயோர்க் செல்லவுள்ளார். இவருடன் நிருபமாவும் அக்கூட்டத்தில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க. தலைமையகத்துக்கு முன்னால் மாகாண சபை உறுப்பினர்கள் சத்தியாக்கிரகம்?

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவி வருகின்ற பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு எட்டப்படுகின்ற வரையில் கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தென் மாகாண சபை உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டம் தொடர்பில் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு அதன் தலைமைத்துவம் தீர்வு காண்பதற்கு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லையெனத் தெரிவித்து அக்கட்சியின் எம்.பி.க்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் என சகல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் இந்த சத்தியாக்கிரகப் போராட்டமும் ஏற்பாடாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, கடந்த 8 ஆம் திகதி புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.பி.க்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட அதேவேளை மேலும் 25 எம்.பி.க்களைக் கொண்ட குழு பாராளுமன்றத்தில் தனித்து செயற்படவிருப்பதாகவும் அந்தக் குழுவிலிருந்தே எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய விருப்பதாகவும் அந்தக் குழு அறிவித்துள்ளது.

அத்துடன் கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்கோ அல்லது உள் வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டுவதற்கோ தலைமைத்துவம் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள மாகாண சபை உறுப்பினர்கள் தலைமைத்துவத்தை மாற்றியமைத்து கட்சியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாகவே இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அகதிகளின் தகவல் அடங்கிய கணினி திருட்டு : கனேடியத் தமிழ் காங்கிரஸ் தகவல்



சன் சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த இலங்கை அகதிகளின் தகவல்கள் அடங்கிய கணினி திருடப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அகதிகளின் பயண ஆவணங்கள், தொடர்பு எண்கள், பிறப்பு சான்றிதழ்கள் என்பனவும் திருடப்பட்டுள்ளன.

டொரன்டோவில் காரியாலயத்தினுள் கடந்த சனிக்கிழமை புகுந்த சிலர், இலங்கை அகதிகள் குறித்த தகவல்கள் பதியப்பட்டிருந்த கணினியை திருடிச் சென்றுள்ளாதாக தமிழ்த் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்குமிடையிலேயே இத்திருட்டு இடம்பெற்றுள்ளதாகத் கனேடியத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் டேவிட் பூபாளபிள்ளை தெரிவித்துள்ளார்.

கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை இலங்கை அகதிகள் குறித்த விவரங்களைத் திரட்டுவதற்குத் தடைவிதித்திருந்தது.

இந்நிலையிலேயே இந்தத் தகவல்கள் திருடப்பட்டுள்ளன எனவும், இதனால் அகதிகளின் பாதுகாப்பு குறித்து அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காரியாலயத்தினுள் அத்துமீறி நுழைந்து சிலர் குறித்த தகவல்களைத் திருடிச் சென்றுள்ளமையை, டொரன்டோ காவற்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது ஒரு திட்டமிடப்பட்ட திருட்டு என தெரிவித்துள்ள அவர், மேற்படிக் காரியாலயத்தில் பல கணினிகள் இருந்த போதும், குறித்த தகவல்கள் அடங்கியது மட்டும் திருடப்பட்டிருப்பது குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல்களின் அடிப்படையிலேயே இலங்கையில் உள்ள அகதிகளின் குடும்பங்கள், அவர்களுடன் தொடர்புகளை பேணி வந்தனர். எனவே உடனடியாக இது தொடர்பாகத் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜப்பான் கைப்பற்றிய சீனப் படகு பணியாளர்கள் இன்று விடுவிப்பு

தான் கைப்பற்றிய சீனப் படகில் இருந்த 14 பணியாளர்களை ஜப்பான் இன்று விடுதலை செய்தது. எனினும் அக்கப்பலின் மாலுமியை விடுதலை செய்ய அது மறுத்துவிட்டது.

மேற்படி சீனப் படகு, கடந்த வாரம் கிழக்கு சீன கடல்பகுதிக்கு அருகில் வைத்துக் கைப்பற்றப்பட்டது. இப்பகுதி, சீன - ஜப்பான் நாடுகள் உரிமை கோரி வரும் பிரச்சினைகுரிய ஒரு பிரதேசமாகும்.

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஜப்பானிய படகுகளுடன் மேற்படி சீனப் படகு மோதியிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமது கண்காணிப்பு நடவடிக்கையில் மேற்படி படகு இடையூறு விளைவித்ததாகக் கூறி ஜப்பான் இப்படகினை தடுத்து வைத்திருந்தது.

மேற்படிச் சம்பவம் சீன மற்றும் ஜப்பானுக்கிடையே பாரிய முறுகல் நிலையை தோற்றுவித்திருந்தது.

இரு நாடுகளுக்கிடையில் எரிவாயு அகழ்வு தொடர்பான பேச்சுவார்த்தையிலும் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

Sep 11, 2010

குரான் எரிப்புத் திட்டம் கைவிடப்பட்டது

புனித நூலான குரானை எரிக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக அமெரிக்க மத போதகர் டெர்ரி ஜோன்ஸ் அறிவித்துள்ளார்.

நியூயார்க் நகரில் உள்ள இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட சம்பவத்தின் 9-ம் ஆண்டு நினைவு நாளில் குரானை எரிக்கப் போவதாக இவர் அறிவித்திருந்தார். இதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து தனது திட்டத்தைக் கைவிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.

ஃபுளோரிடாவில் உள்ள தேவாலயத்தில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசிய அவர், தனது அறிவிப்புக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இதனால் இதைக் கைவிடுவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் இரட்டைக் கோபுரம் இருந்த இடத்தில் புதிதாக உருவாகும் கட்டடம் அருகே கட்டுவதாக இருந்த இஸ்லாமிய மையம் மற்றும் பள்ளிவாசல் ஆகியவற்றை வேறு இடத்தில் கட்டுவதாக உறுதி மொழி கொடுத்ததைத் தொடர்ந்து தனது திட்டத்தை வாபஸ் பெற்றதாக டெர்ரி ஜோன்ஸ் தெரிவித்தார்.

ஆனால், இஸ்லாமிய மையம் மற்றும் பள்ளிவாசலை வேறு இடத்தில் கட்டிக் கொள்வது தொடர்பாக எவ்வித உறுதி மொழியும் அளிக்கவில்லை என்று இஸ்லாமிய மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வார இறுதியில் நியூயார்க் சென்று அங்கு இமாம் ஃபைசல் அப்துல் ரயூஃபை சந்தித்துப் பேசவிருப்பதாகவும் ஜோன்ஸ் தெரிவித்தார். இது தொடர்பாக ஃபுளோரிடாவில் உள்ள மதத் தலைவர் முகமது முஸ்ரியிடம் பேசியதாகவும், வேறிடத்தில் இஸ்லாமிய மையம் அமைக்க ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறினார். ஆனால் இதை ரயூஃப் மறுத்துள்ளார். குரான் எரிப்பு திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக ஜோன்ஸ் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும் இஸ்லாமிய மையத்தை வேறிடத்துக்கு மாற்றுவது தொடர்பாக ஜோன்ஸ் மற்றும் முஸ்ரியின் அறிவிப்புகள் ஆச்சரியமளிப்பதாக அவர் கூறினார். இது குறித்து அமெரிக்க அரசுடன் பேரம் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் காக்கவே தாங்கள் விரும்புவதாக ரயூஃப் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது வேறிடத்துக்கு மாறப் போவதான அறிவிப்பு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான நாடு அமெரிக்கா அல்ல என்பதற்காக ஒபாமா நிர்வாகம் மேற்கொண்டுவரும் அனைத்து முயற்சிகளும் டெர்ரி ஜோன்ஸின் பேச்சால் சிதைந்துள்ளது.

முன்னதாக டெர்ரி ஜோன்ûஸ அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ச் சந்தித்துப் பேசினார்.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்காவில் பயங்கர தீவிபத்து: ஒருவர் பலி

சான் புருனோவில் இயற்கை எரிவாயு குழாய் வெடித்ததில் தீப்பற்றியும் எரியும் வீடுகள்.
சான் பிரான்சிஸ்கோ, செப்.10: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வியாழக்கிழமை எரிவாயு குழாய் வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர்.

இங்குள்ள சான் புருனோ நகரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் அருகில் உள்ள வீடுகளுக்கு பெரிய குழாய் மூலம் இயற்கை எரிவாயு செல்கிறது. இந்தக் குழாய் வியாழக்கிழமை வெடித்தது.

இதனால் அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீடுகள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சான் புருனோவில் உள்ள மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்துக்குள்ளான பகுதி முழுவதும் போர்க்களம் போல காட்சியளித்தது.

எரிவாயு குழாய் வெடித்த சமயத்தில் அரை மைல் தூரத்தில் விமானம் ஒன்று தாழ்வாக பறப்பது போன்ற சத்தம் கேட்டது என்று அப்பகுதியைச் சேர்ந்த டினா டிலோயா தெரிவித்தார்.

20-க்கும் மேற்பட்ட வீடுகளில் வேகமாக தீ பரவியது. ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், ரசாயனப் பொடிகளை பயன்படுத்தியும் தீ அணைக்கப்பட்டது.

45 வீடுகள் தீ விபத்துக்குள்ளானதாக உள்ளூர் பத்திரிகைககள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தின் மிக அருகில் நிகழ்ந்துள்ளது. 2001 செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க்கின் இரட்டை கோபுரம் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது.

அதன் 9-வது நினைவுதினம் வரும் 11-ம் தேதி வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது பயங்கரவாதிகளின் சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் இதுவரை அதுதொடர்பான தகவல் எதுவும் தெரியவரவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானில் ராணுவ புரட்சி ஏற்படாது: கிலான

இஸ்லாமாபாத், செப்.10: பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி ஏற்படாது என்று பிரதமர் யூசுப் ரஸக்ஷ் கிலானி உறுதிபட தெரிவித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு தனது பதவிக் காலம் முழுவதும் ஆட்சியில் இருக்கும். ராணுவத்தால், இந்த ஆட்சிக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது என்று அவர் மேலும் கூறினார்.

இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியது; இப்போதைய சூழலில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கம் ராணுவத்துக்கு இல்லை. ராணுவம் ஆட்சிக்கு வருவதற்குரிய சூழலும் இல்லை.

பல்வேறு தியாகங்களுக்குப் பிறகு 2008-ம் ஆண்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. இப்போது நீதித்துறை தன்னிச்சையாக ஜனநாயக அடிப்படையில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி செயல்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஒரு பகுதிதான் ராணுவம், இதைக் கருத்தில் கொண்டே வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் ராணுவத்தினர் முழுவீச்சில் ஈடுபடுகின்றனர். ஆனால் மக்கள் மத்தியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிவிடும் என்பதான பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது. இதுபோன்ற தேவையற்ற பேச்சுகளைப் பேசி தங்களது நேரத்தை அவர்கள் வீணடித்துக் கொள்ள வேண்டாம் என்பதே எனது கருத்து. ராணுவம் வேறு, அரசு வேறு என்று நினைப்பவர்கள் முட்டாள்களின் உலகில் வாழ்கிறார்கள் என்றே அர்த்தம்.

பொதுமக்களில் சிலர் ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் ஆர்வம் காட்டுவதாகக் கூறுகின்றனர். ஆனால் ஜனநாயக செயல்பாட்டுக்கு நீதித்துறை உறுதுணையாக உள்ளது.

ஊடகங்கள், மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைத்துமே நாட்டுக்கு தற்போதைய தேவை ஜனநாயக ஆட்சி என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. ஜனநாயகத்தை சீர்குலைக்கும் எத்தகைய நடவடிக்கையையும் உலக சமுதாயம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. தேர்தல் மூலம் மக்களாட்சி நடைபெறுகிறது. இது முழு ஆட்சிக் காலமும் தனது பணியை நிறைவேற்றும் என்றார் கிலானி.

பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டதால் 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் அரசு மெத்தனம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றன. இதனால் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.

அத்துடன் எம்க்யூஎம் என்ற அமைப்பின் தலைவர் அல்டாப் ஹுசைன் சமீபத்தில் ராணுவ தளபதிகளை சந்தித்து, ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் மிராசுதாரர்களுக்கு எதிராக கற்கால தண்டனை அளிக்கலாம் என பரிந்துரைத்திருந்தார். இதுவும் ராணுவ ஆட்சி ஏற்படக் கூடும் என்ற ஐயத்தை மேலும் அதிகரித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...