
ஆபாச இணையத்தளங்கள் 188 ஐ எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கும்படி மகளிர் மற்றும் சிறுவர் நீதிமன்றம், தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே 107 ஆபாச இணையங்கள் தடைசெய்யப்பட்டுள்ள போதும் புதிதாக மேலும் 81 இணையங்களைக் கட்டுப்படுத்தும்படி விடுக்கப்பட்டுள்ள உத்தரவை அடுத்து இவ்வெண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது.
அண்மைக் காலமாக, நாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகங்களின் பின்னணியில், ஐந்து ஆபாச இணையங்கள் வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளன.
இதையடுத்தும் மகளிர் மற்றும் சிறுவர் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டதையடுத்தும் இவ்வாறு ஆபாச இணையங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment