18 ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தமானது மக்களின் அதிகாரத்தை குறைத்துள்ளதாகவும், இது ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
18 ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் இன்று சட்ட மூலமாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப் பட்டதன் பின்னர் விசேட உரையொன்றை ஆற்றிய அவர், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார்.
இதனையடுத்து இன்று மாலை கூடிய செய்தியாளர் சந்திப்பின் போதே ரணில் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்,
அரசியல் அமைப்பு ஜனநாயகத்துக்கு விரோதமானது. அத்துடன் நாடாளுமன்றத்திற்கு கிடைந்த வாக்குகளுக்கு விரோதமானதாகும். உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பான சட்ட மூலம் இன்று சமர்ப்பிக்கப்படும் நிலையில், அது தொடர்பான யோசனைகள் உள்ளுராட்சி மன்றங்களில் இருந்து பெறப்பட்டிருக்க வேண்டும். எனினும் அவ்வாறு யோசனைகள் பெறப்படவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
புதிய அரசியல் அமைப்பின் படி, ஜனாதிபதியின் அதிகாரம் அதிகரித்துள்ளது. பொதுமக்களி;ன் அதிகாரம் குறைந்துள்ளது. அத்துடன் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவை அதிகாரங்களும் குறைந்துள்ளன.
இந்த நிலையில் குறித்த பிரேரணை நாடாளுமன்றதில் விவாதித்து நிறை வேற்றப்படும் வரையில் நாடாளுமன்றத்திற்கு சமுக மளிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment