பல்கலைக்கழக
26வது பட்டமளிப்பு விழா நேற்று 06.10.2010 புதன்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சிவசூரியா, மற்றும் பல்கலைக்கழக உபவேந்தர். பேராசிரியர்.என்.சண்முகலிங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதல் அமர்வு காலை 9மணிக்கு இடம்பெற்றது. அடுத்த அமர்வு பகல் 11மணிக்கும் அடுத்தடுத்த 3ம் 4ம் அமர்வுகள் பிற்பகல் 1.30 மற்றும் 3.00மணி ஆக நான்கு அமர்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஏராளமானோர் இளம், முது மற்றும் கலாநிதிப்பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தனித்துவமான சம்பிரதாங்களின் அடிப்படையில் பல்கலைக்கழகம் வாழை,மாவிலை, தோரணங்களாலும், வாகை மாலைகளாலும் அலங்கரிக்கப்பெற்றிருந்தது.
வேந்தர் மற்றும் உபவேந்தர் உள்ளிட்ட விருந்தினர்களும் பட்டம் பெறும் மாணவர்களும் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்திற்குக் காரணராயிருந்த சிவதருமவள்ளல் சேர்.பொன்.இராமநாதனின் திருவுருவத்திற்கு முன்னிருந்து பட்டமளிப்பு விழா நடைபெற்ற கைலாசபதி கலையரங்கிற்கு பாரம்பரிய மங்கல இசை முழங்க ஆலவட்டம், குடை முதலிய உபசாரங்களுடன் அழைத்து வரப்பெற்றனர்.
இவ்வாண்டில் இப்பல்கலைக்கழகத்தில் நிகழும் இரண்டாவது பட்டமளிப்பு விழா இது என்பதும் குறிப்பிடத்தக்கது. பட்டம் பெறுபவர்களின் உறவினர்கள் , நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் நல்லையாதீன மஹாசந்நிதானம் உள்ளிட்ட குருமார்களும் கலந்து கொண்டனர். கைலாசபதி கலையரங்கு இவ்வாண்டின் ஆரம்பத்தில் குளிரூட்டப்பெற்று வர்ணம் தீட்டி பாரம்பரியம் பேணிப் புனரமைக்கப்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பட்டமளிப்பு விழாவிற்காக பல்கலைக்கழகத்திலுள்ள ஸ்ரீ பார்வதீ பரமேஸ்வரன் கோயில் இன்று முழுவதும் திறந்திருப்பதையும் விசேட வழிபாடுகளில் மாணவர்கள் ஈடுபடுவதையும் காண முடிகிறது.
பாரம்பரிய முறைப்படி பட்டம்பெறும் மாணவர்களின் மகிழ்ச்சியோடு இணைந்து நிகழ்ந்த இந்நிகழ்வு இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தனித்துவமான சிறப்பம்சம் என்பது பெருமையோடு சொல்ல வேண்டிய ஒன்றாகும்.
26வது பட்டமளிப்பு விழா நேற்று 06.10.2010 புதன்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சிவசூரியா, மற்றும் பல்கலைக்கழக உபவேந்தர். பேராசிரியர்.என்.சண்முகலிங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதல் அமர்வு காலை 9மணிக்கு இடம்பெற்றது. அடுத்த அமர்வு பகல் 11மணிக்கும் அடுத்தடுத்த 3ம் 4ம் அமர்வுகள் பிற்பகல் 1.30 மற்றும் 3.00மணி ஆக நான்கு அமர்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஏராளமானோர் இளம், முது மற்றும் கலாநிதிப்பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தனித்துவமான சம்பிரதாங்களின் அடிப்படையில் பல்கலைக்கழகம் வாழை,மாவிலை, தோரணங்களாலும், வாகை மாலைகளாலும் அலங்கரிக்கப்பெற்றிருந்தது.
வேந்தர் மற்றும் உபவேந்தர் உள்ளிட்ட விருந்தினர்களும் பட்டம் பெறும் மாணவர்களும் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்திற்குக் காரணராயிருந்த சிவதருமவள்ளல் சேர்.பொன்.இராமநாதனின் திருவுருவத்திற்கு முன்னிருந்து பட்டமளிப்பு விழா நடைபெற்ற கைலாசபதி கலையரங்கிற்கு பாரம்பரிய மங்கல இசை முழங்க ஆலவட்டம், குடை முதலிய உபசாரங்களுடன் அழைத்து வரப்பெற்றனர்.
இவ்வாண்டில் இப்பல்கலைக்கழகத்தில் நிகழும் இரண்டாவது பட்டமளிப்பு விழா இது என்பதும் குறிப்பிடத்தக்கது. பட்டம் பெறுபவர்களின் உறவினர்கள் , நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் நல்லையாதீன மஹாசந்நிதானம் உள்ளிட்ட குருமார்களும் கலந்து கொண்டனர். கைலாசபதி கலையரங்கு இவ்வாண்டின் ஆரம்பத்தில் குளிரூட்டப்பெற்று வர்ணம் தீட்டி பாரம்பரியம் பேணிப் புனரமைக்கப்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பட்டமளிப்பு விழாவிற்காக பல்கலைக்கழகத்திலுள்ள ஸ்ரீ பார்வதீ பரமேஸ்வரன் கோயில் இன்று முழுவதும் திறந்திருப்பதையும் விசேட வழிபாடுகளில் மாணவர்கள் ஈடுபடுவதையும் காண முடிகிறது.
பாரம்பரிய முறைப்படி பட்டம்பெறும் மாணவர்களின் மகிழ்ச்சியோடு இணைந்து நிகழ்ந்த இந்நிகழ்வு இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தனித்துவமான சிறப்பம்சம் என்பது பெருமையோடு சொல்ல வேண்டிய ஒன்றாகும்.
No comments:
Post a Comment