Oct 1, 2010

பொன்சேகாவுக்கு 30 மாதங்கள் சிறை: ராஜபட்ச





இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கும் தீர்ப்புக்கு அதிபர் ராஜபட்ச வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

இலங்கை உள்நாட்டு போரின்போது ராணுவத்துக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்ததில் ஊழலில் ஈடுபட்டதாக பொன்சேகா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ராணுவ நீதிமன்றம் அவருக்கு அண்மையில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதிபர் ஒப்புதல் அளித்த பின்னரே தீர்ப்பு செயல்படுத்தப்படும் என்பதால் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது.

ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றிருந்த அதிபர் ராஜபட்ச புதன்கிழமை கொழும்பு திரும்பினார். பொன் சேகாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்த விவரங்களைப் பரிசீலித்த அவர், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை இரண்டரை ஆண்டுகளாகக் குறைத்தார். தீர்ப்பை செயல்படுத்த ஒப்புதல் அளித்து அது தொடர்பான ஆவணங்களில் வியாழக்கிழமை அவர் கையெழுத்திட்டார். பொன் சேகாவின் பதவி, அந்தஸ்து, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை ரத்து செய்து ராணுவ நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment