Oct 13, 2010

உக்ரைனில் பஸ் மீது ரயில் மோதல்: 40 பேர் சாவு


உக்ரைனில் ரயிலில் சிக்கியுள்ள பேருந்து. அருகில், விபத்தில் சிக்கி இறந்தவர்களின் சடலங்கள்.
கீவ், அக்.12: உக்ரைன் நாட்டின் டினிபுரோபெட்ரோவெஸ்க் நகரில் பயணிகள் பேருந்து மீது ரயில் மோதியது. இதில் 40 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி அளவில் இந்த விபத்து நடந்தது. ரயில் வேகமாக வந்து கொண்டிருந்துள்ளது. இதை தெரிவிக்கும் வண்ணம் ஆளில்லா லெவல் கிராசிங்கில் சிவப்பு விளக்கு எரிந்தது.

ஆனால் பேருந்து டிரைவர் இதை அலட்சியப்படுத்திவிட்டு ரயில் வருவதற்குள் தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றுள்ளார். ஆனால் வேகமாக வந்த ரயில், பேருந்து மீது மோதியது. இதில் ரயில் இன்ஜினில் பேருந்து சிக்கி நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.

பேருந்தில் பயணித்தவர்களில் 40 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்துக்கு பேருந்து டிரைவர்தான் முழுக்க முழுக்கக் காரணம் என்று அந்நாட்டின் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் விபத்தில் இறந்தவர்களுக்கு மெüன அஞ்சலி செலுத்தப்பட்டது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டார் அந்நாட்டின் அதிபர் விக்டர் யானுகோவிச்.

இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment