பாகிஸ்தான் கடலுக்குள் சென்று மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 5 பேரை பாகிஸ்தான் கடற்படை செவ்வாய்க்கிழமை கைது செய்தது. அவர்களிடம் இருந்து 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தியாவைச் சேர்ந்த 5 மீனவர்கள், 2 படகுகளில் இந்திய கடல் எல்லையத் தாண்டி 45 நாட்டிகல் மைல் பாகிஸ்தான் கடலுக்குள் நுழைந்து மீன்பிடித்தனர். இதையடுத்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர் என பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் வளம் அதிகமாக உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள விலையுயர்ந்த மீன்களை பிடிப்பதற்காக இந்திய மீனவர்கள் தொடர்ந்து பாகிஸ்தான் கடலுக்குள் நுழைந்து வருகின்றனர்.
பாகிஸ்தான் கடல் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த பாகிஸ்தான் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment