ஐக்கிய
நாடுகள் தினம் இன்று சர்வதேச ரீதியாக அனுஸ்டிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 65ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. 1945ஆம் ஆண்டு 50உறுப்பு நாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்னர் உலக நாடுகளுக்கிடையில் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்பி பொதுவான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டது.
பொதுச்சபை, பாதுகாப்புச்சபை, தர்மகர்த்தா சபை, தலைமைச் செயலகம், பொருளாதார மன்றம், சர்வதேச நீதிமன்றம் ஆகிய ஆறு பிரிவுகளைக் கொண்ட இதன் முதலாவது பொதுச் செயலாளராக நோர்வே நாட்டைச் சேர்ந்த டிரிக்விலி தெரிவு செய்யப்பட்டார்.
தென்கொரியாவைச் சேர்ந்த பாங்கீ மூன்று தற்போதைய பொதுச் செயலாளர் பதவி வகித்து வருகின்றார். நியூயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் ஐக்கிய நாடுகள் சபையில் தற்போது 199 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
உலகில் சமாதானத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அதன் இலக்கினை அடைவதில் பெரும் சவாலை எதிர்நோக்கி வருவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
நாடுகள் தினம் இன்று சர்வதேச ரீதியாக அனுஸ்டிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 65ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. 1945ஆம் ஆண்டு 50உறுப்பு நாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டது.இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்னர் உலக நாடுகளுக்கிடையில் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்பி பொதுவான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டது.
பொதுச்சபை, பாதுகாப்புச்சபை, தர்மகர்த்தா சபை, தலைமைச் செயலகம், பொருளாதார மன்றம், சர்வதேச நீதிமன்றம் ஆகிய ஆறு பிரிவுகளைக் கொண்ட இதன் முதலாவது பொதுச் செயலாளராக நோர்வே நாட்டைச் சேர்ந்த டிரிக்விலி தெரிவு செய்யப்பட்டார்.
தென்கொரியாவைச் சேர்ந்த பாங்கீ மூன்று தற்போதைய பொதுச் செயலாளர் பதவி வகித்து வருகின்றார். நியூயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் ஐக்கிய நாடுகள் சபையில் தற்போது 199 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
உலகில் சமாதானத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அதன் இலக்கினை அடைவதில் பெரும் சவாலை எதிர்நோக்கி வருவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment