பாகிஸ்தானில் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகளின் நிலையை குறிவைத்து அமெரிக்கப் படை ஞாயிற்றுக்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதில் 7 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் இரு வாகனங்கள் தீ பற்றி எரிந்து சாம்பலாகியதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்திருந்த கட்டடம் ஒன்றுக்குள் தீவிரவாதிகள் முகாமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து 4 ஏவுகணைகளை வரிசையாக ஏவி அந்தக் கட்டடத்தை தகர்த்தது அமெரிக்கப் படை. இத் தாக்குதலில் கட்டடத்துக்குள் இருந்த 7 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் சமீபகாலமாக நேட்டோ படை வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நேட்டோ படைக்கு எண்ணெய் ஏற்றிச் செல்லவிருந்த 15 டேங்கர் லாரிகளை தலிபான்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.
இதையடுத்து பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையை நேட்டோ படை துரிதப்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment