Oct 12, 2010

மலையில் விமானம் மோதி 7 பேர் பலி




ஆப்கானில் பயணிகள் விமானம் ஒன்று மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் இறந்தனர். ஆப்கன் தலைநகர் காபூல் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்த பயணிகள் விமானம், காபூல் அருகே உள்ள மலை மீது மோதியதில் விழுந்து நொறுங்கியது. இதில் 7 பேர் பலியானர். இறந்தவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் என்றும், எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை எனவும் உள்ளூர் விமான போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.

No comments:

Post a Comment