Oct 1, 2010

இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை





இந்தோனேசியா நாட்டில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.இந்த நிலையில் இன்று காலை அங்கு மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள அரு தீவு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு ஓடினார்கள்.

நிலநடுக்கம் மையம் கடலுக்கு அடியில் 12 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்தது. ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 7.2 புள்ளியாக பதிவாகி இருந்தது.

கடலுக்குள் நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் சுனாமி ஏற்பட வில்லை. எனவே சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

நிலநடுக்கம் அளவு 7.2 புள்ளியாக இருப்பதால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை.

இந்தோனேசியாவில் நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 6.6 புள்ளிகளாக இருந்தது.

No comments:

Post a Comment