Oct 28, 2010

சிங்கப்பூர் நாட்டில் இரு தமிழர்கள் அமைச்சர்களாக நியமனம்


சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டின் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த தமிழர்கள் இருவர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். சிங்கப்பூர் பிரதமராக இருக்கும் லீ ஹூசைன் லூங் தனது மந்திரிசபையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அதன்படி உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சராக கே.சண்முகம் மற்றும் நிதி அமைச்சராக தர்மன் சண்முகரத்னம் ஆகியோரை நியமித்துள்ளதாக அறிவித்தார். இவர்கள் இருவம் இந்தியா வம்சாவழி தமிழர்கள். மேலும் உள்துறை விவகார அமைச்சர் சண்முகம் தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஒருங்கிணைப்பாளராகவும்,துணைப்பிரதமர் அந்தஸ்தினையும் பெற்றுள்ளார். முன்னதாக லீ ஹூசைன் லூங் அமைச்சரவையில் எஸ்.ஜெயக்குமார் என்பவர் பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரியாக நீண்ட நாட்களாக பணியாற்றி வருகிறார்.

No comments:

Post a Comment