
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்த வி.எஸ். திருப்பதி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். திருநெல்வேலி மேற்கு மாவட்ட பொறுப்பாளராக திவ்யா எம்.ரெங்கன் நியமிக்கப்படுகிறார். இவருடன் இணைந்து செங்கோட்டை எம்.கண்ணன், கே.முத்துக்குமார், ஏ.பி.காமராஜ், வெ.சோலை கனகராஜ், க.இன்பராஜ் ஆகியோர் செயல்படுவார்கள்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்த எஸ்.என்.மருதையன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். த.லோ.பரமசிவம் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
தே.மு.தி.க. புதுச்சேரி மாநில பொறுப்பாளராக கோ.ராமதாஸ் நியமிக்கப்படுகிறார்.
விழுப்புரம் மாவட்டம் உறுப்பினர்களாக செயல்பட்டு வந்த ஆர்.சுப்பராயலு மற்றும் எம்.எஸ்.உதயகுமார் ஆகியோர் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment