Oct 14, 2010

வடக்கில் நவம்பர் இறுதி வரை வாக்காளர் பதிவு கிளிநொச்சியில் தற்காலிக அலுவலகம்


வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா, மற்றும் மன்னார் மாவட்டங்களில் நவம்பர் மாதம் இறுதிவரை வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவுள்ளன. மீள்குடியமர்த்தப்படும் பணிகள் அதிகளவில் நடைபெறும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங் ளுக்கென உதவி தேர்தல் ஆணையாளர் ஒருவர் தேர்தல் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாக்காளர் பதிவுகளை மேலும் இலகுவாக்கும் நோக்குடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி கச்சேரியில் தற்காலிக தேர்தல் அலுவலகமொன்றும் அமைக்கப் பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

2001 ஆம் ஆண்டுக்கு வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை வடமாகாணம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஜூன் 01 ஆம் திகதி ஆரம்பமானது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடமாகாணத்தில் அனைத்து பிரதேசங்களிலும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை பதியும் பணிகள் இம்முறையே முதன் முதலாக நடைபெறுகிறது.

பதிவு செய்யும் நடவடிக்கைகள் பெருமளவில் முடிவு பெற்றுள்ள போதிலும் பெருந்தொகையான இடம்பெயர்ந்தவர்களையும், முகாம்களில் தங்கியிருப்பவர்களையும் கொண்டுள்ள வடமாகாணத்திற்காக விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment