பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாக முறைப்பாடு மற்றும் தகவல்களை வழங் கும் இணையத்தள சேவை ஒன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
‘பொலிஸ் மா அதிபருக்குச் சொல்லுங்கள்’ என்ற இந்த இணையத்தள சேவையை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்று ஆரம்பித்து வைத்தார்.
சமய வழிபாடுகளுடன் இந்த இணையத்தள சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சூசூசூ.ஙீச்ங்டுஷடீ.ங்கூ என்ற இணைய தளத்திலுள்ள சிலீங்டுகிஙீஃஙீச்ங்டுணீலீ.ங்கூ என்ற மின்னஞ்சலை தெரிவு செய்து இணையத் தளத்தின் ஊடாக முறைப்பாடுகள், கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாக தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் தமது பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகள், பொலிஸ் நிலையங்களில் நடைபெறும் விசாரணைகளில் ஏற்படும் தாமதங்கள் என்பவற்றையும் இந்த இணையத்தளம் மூலம் தெரிவிக்க முடியும் என்று பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
இந்த முறைப்பாடுகளுக்கு இரு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment