பொதுநலவாய
விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழாவில் இலங்கை ஜனாதிபதி பங்கேற்பதற்குக் கண்டனம் தெரிவித்து கோவை காந்திபுரத்தில் ம.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் கோவை மாநகர மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை ஆரிய வைத்திய நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென இதில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய வைகோ,
"எனது உடல்நிலையைக் காரணம் காட்டி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தினார்கள். அதையும் மீறி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்துள்ளேன். இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் எனது குரலை பதிவு செய்ய ஓடி வந்தேன்.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டபோது, இந்திய அரசு கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தானில் இந்தியர்கள் தாக்கப்பட்டபோது பிரணாப் முகர்ஜி கொந்தளித்தார். ஆந்திரா, கேரள மக்கள் தாக்கப்பட்டால், இந்திய அரசு பெரும் குரல் கொடுத்து பேசுகிறது.
ஆனால் இலங்கையில் தமிழன் தாக்கப்பட்டபோது, பிரதமர் உட்பட அனைவரும் வாய்மூடித்தான் இருந்தார்கள். ஆயுத பலம், படை பலம் போன்றவற்றைக் கொடுத்து போர் செய்ய சொன்ன சோனியா காந்தி, இலங்கை ஜனாதிபதியை வரவழைத்து பரிவட்டம் கட்டி அழகு பார்த்தார்.
71 நாடுகள் கலந்து கொள்ளும் பொதுநலவாய போட்டிக்கு வரவழைத்து, இப்போது உபசரிக்கப் பார்க்கிறார். இதையெல்லாம் முதல்வர் கருணாநிதியின் அரசு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி போர் செய்த இலங்கை ஜனாதிபதிக்கு, மேலும் அழகுபடுத்தி பார்க்கிறார்கள்.
தயவு செய்து ஒன்றே ஒன்றை மட்டும் குறித்துக் கொள்ளுங்கள். இதே நிலைமை நீடித்தால் தமிழகம் காஷ்மீராக மாறுவதை யாரும் தடுக்க முடியாது" என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோவை, பொலிசார் கைது செய்து கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பாலகிருஷ்ணா திருமண மண்டபத்தில் தடுத்து வைத்தனர்.
விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழாவில் இலங்கை ஜனாதிபதி பங்கேற்பதற்குக் கண்டனம் தெரிவித்து கோவை காந்திபுரத்தில் ம.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டம் கோவை மாநகர மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை ஆரிய வைத்திய நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென இதில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய வைகோ,
"எனது உடல்நிலையைக் காரணம் காட்டி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தினார்கள். அதையும் மீறி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்துள்ளேன். இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் எனது குரலை பதிவு செய்ய ஓடி வந்தேன்.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டபோது, இந்திய அரசு கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தானில் இந்தியர்கள் தாக்கப்பட்டபோது பிரணாப் முகர்ஜி கொந்தளித்தார். ஆந்திரா, கேரள மக்கள் தாக்கப்பட்டால், இந்திய அரசு பெரும் குரல் கொடுத்து பேசுகிறது.
ஆனால் இலங்கையில் தமிழன் தாக்கப்பட்டபோது, பிரதமர் உட்பட அனைவரும் வாய்மூடித்தான் இருந்தார்கள். ஆயுத பலம், படை பலம் போன்றவற்றைக் கொடுத்து போர் செய்ய சொன்ன சோனியா காந்தி, இலங்கை ஜனாதிபதியை வரவழைத்து பரிவட்டம் கட்டி அழகு பார்த்தார்.
71 நாடுகள் கலந்து கொள்ளும் பொதுநலவாய போட்டிக்கு வரவழைத்து, இப்போது உபசரிக்கப் பார்க்கிறார். இதையெல்லாம் முதல்வர் கருணாநிதியின் அரசு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி போர் செய்த இலங்கை ஜனாதிபதிக்கு, மேலும் அழகுபடுத்தி பார்க்கிறார்கள்.
தயவு செய்து ஒன்றே ஒன்றை மட்டும் குறித்துக் கொள்ளுங்கள். இதே நிலைமை நீடித்தால் தமிழகம் காஷ்மீராக மாறுவதை யாரும் தடுக்க முடியாது" என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோவை, பொலிசார் கைது செய்து கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பாலகிருஷ்ணா திருமண மண்டபத்தில் தடுத்து வைத்தனர்.
No comments:
Post a Comment