வகுத்துள்ள அணுசக்தி இழப்பீட்டு மசோதா சர்வதேச அளவில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளிலிருந்து சற்று மாறுபட்டுள்ளது.
இந்த மாறுபாடுகளை இந்தியா உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று இந்திய-அமெரிக்க உறவு மேம்பாடு குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அணு மின் நிலையங்களுக்குத் தேவையான உபகரணங்களை அளிக்கும் நிறுவனங்கள்தான் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் பொறுப்பாக வேண்டும்.
இந்த நிபந்தனை 80 ஆண்டுகளுக்குப் பொருந்தும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இழப்பீட்டு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது சர்வதேச விதிமுறைகளைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டுள்ளது.
எனவே சர்வதேச விதிமுறைகள்படி இந்தியா மாற்றம் செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அரசியல் விவகாரத்துறை இணையமைச்சர் நிகோலஸ் பர்ன்ஸ் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை துணையமைச்சர் ரிச்சர் ஆர்மிடேஜ் மற்றும் பேராசிரியர் ரிச்சர்ட் ஃபோன்டெய்ன் ஆகியோர் சேர்ந்து தயாரித்த அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும், இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளிடையிலான உறவு எந்த அளவுக்கு மேம்படும் என்பது குறித்தும் அறிக்கை தயாரித்துள்ளனர்.
இரு நாடுகளிடையிலான ஒப்பந்தத்தை சரிவர நிறைவேற்றாவிடில் அதனால் இரு நாடுகளிடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்படும்.
இதனால் அமெரிக்காவும், இந்தியாவும் அணு சக்தி ஒப்பந்தத்தில் சர்வதேச அளவில் வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணு விபத்து இழப்பீட்டு மசோதா, சர்வதேச தரத்திலிருந்து அதிகமாக மாறுபடுகிறது.
அணு உலைகளுக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள்தான் விபத்து ஏற்பட்டால் பொறுப்பேற்க வேண்டும் என்றும்,இது 80 ஆண்டுகளுக்குப் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.
இது அமெரிக்க நிறுவனங்களை மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.
எனவே இந்தப் பிரச்னையைத் தீர்க்க இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை நிறைவேற்றாவிட்டால் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான ஒப்பந்தம் செயல்படாமல் போவதோடு,அரசியல் ரீதியில் இரு நாடுகளிடையே பெரும் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு விபத்து இழப்பீடு மசோதாவில் மாற்றங்கள் செய்து எஞ்சிய பிற அணு ஆயுத பரவல் நிபந்தனைகளையும் இந்தியா நிறைவேற்றினால் அது இந்தியாவுக்கு வரலாற்று ரீதியில் மிகப் பெரிய சாதனையாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அமைச்சரவையில் மிக முக்கியமானவர்களில் ஒருவரான நிகோலஸ் பர்ன்ஸ், இரு நாடுகளிடையிலான அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதில் மிகுந்த தீவிரம் காட்டினார்.
இந்தியா கொண்டு வந்துள்ள அணு விபத்து இழப்பீட்டு மசோதாவால், இரு நாடுகளிடையிலான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றுவதில் சந்தேகமான நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு இருவழிச் சாலை போன்றது.
இதை நிறைவேற்றுவதில் இந்தியாவுக்கும் சில சங்கடங்கள் உள்ளன என்பதையும் உணர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தும்போது, புதிதாக அணுசக்தி மசோதாவை கொண்டு வரலாம். ராணுவ தளவாட தயாரிப்பில் நிலவும் தடைகளை நீக்க வேண்டும்.
காப்புரிமை தொடர்பான விதிமீறல் விவரங்களை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் பர்ன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment