புளியந்தோப்பு பி.கே. காலனியில் வசித்து வந்தவர் துர்கைவேல் (வயது 28) பிரபல ரவுடி. இவர் மீது எண்ணூர், புது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியில் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று மாலையில் காசிமேடு மீன்பிடித்துறை முகம் கடற்கரையில் துர்கைவேல் கத்திகுத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.
மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசிங் விரைந்து சென்று துர்கைவேலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
கொலையுண்ட துர்கைவேல் இதற்கு முன்பு காசி மேடு காசிமாநகரில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடி பவுடர் ரவியுடன் இவருக்கு முன் விரோதம் இருந்து வந்தது. இதன் பின்னர் துர்கைவேல் புளியந்தோப்பில் குடியேறினார். ஆனால் பவுடர் ரவி, துர்கைவேல் மீதான பகையை மறக்காமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் இன்னொரு நண்பர் மூலமாக துர்கைவேலை தீபாவளி விருந்துக்காக புவடர் ரவி அழைத்துள்ளார்.
இதை நம்பி துர்கைவேல் காசிமேடு மீன்பிடிதுறை முகத்துக்கு சென்றார். அங்கு வைத்து புவுடர் ரவியும் அவனது கூட்டாளிகளும் துர்கை வேலை சரமாரியாக கத்தியால் குத்தினர். பின்னர் கழுத்தை அறுத்து அவரை கொலை செய்து கடலில் வீசியுள்ளனர்.
புவுடர் ரவியை போலீசார் கைது செய்தனர். கூட்டாளிகளான தேசப்பன், இன்னொரு தேசப்பன், கார்த்திக் 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட பவுடர் ரவி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
எனக்கும் துர்கைவேலுக்கும் தகராறு இருந்து வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு எனது படகை துளை போட்டு கடலில் மூழ்கடித்து விட்டான். இதனால் அவன் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எப்படியாவது தீர்த்து கட்டி விட வேண்டும் என்று திட்டமிட்டேன். எங்கள் திட்டப்படி நண்பர்கள் துர்கைவேலை அழைத்து வந்தனர். மது விருந்து கொடுத்து போதையில் இருந்த போது கழுத்தை அறுத்து கொன்றோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
No comments:
Post a Comment