லெப்டோஸ்பை
ரோஸிஸ் எனும் எலிக்காய்ச்சல் நாடளாவிய ரீதியில் தீவிரமாக பரவி வருகின்றது என தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வருடம் எலிக்காய்ச்சலினால் 89 பேர் உயிரிழந்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 627 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மேற்படி பிரிவின் புள்ளிவிபர அறிக்கை தெரிவிக்கின்றது.
எலிக்காய்ச்சலினால் ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் அதிகளவு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வயல்வெளிகளில் இருந்து எலிக்காய்ச்சல் நேரடியாக பரவுகின்றது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகளாவர். இது தொற்றுநோய் அல்ல. ஆனால் ஒரு மிருகத்திலிருந்து இன்னொரு மிருகத்திற்கு பரவும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ரோஸிஸ் எனும் எலிக்காய்ச்சல் நாடளாவிய ரீதியில் தீவிரமாக பரவி வருகின்றது என தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.இவ்வருடம் எலிக்காய்ச்சலினால் 89 பேர் உயிரிழந்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 627 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மேற்படி பிரிவின் புள்ளிவிபர அறிக்கை தெரிவிக்கின்றது.
எலிக்காய்ச்சலினால் ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் அதிகளவு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வயல்வெளிகளில் இருந்து எலிக்காய்ச்சல் நேரடியாக பரவுகின்றது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகளாவர். இது தொற்றுநோய் அல்ல. ஆனால் ஒரு மிருகத்திலிருந்து இன்னொரு மிருகத்திற்கு பரவும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment