Dec 10, 2010

சட்டவிரோதமாக நீரைப் பெறுவதனால் 2.7 பில்லியன் ரூபா நஷ்டம்

சட்டவிரோதமாக நீரைப் பெற்றுக் கொள்வதனால் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு வருடமொன்றுக்கு 2.7 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகின்றது என நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

''பிரதான நீர்விநியோகக் குழாய்களில் இருந்து சட்டவிரோதமான முறையில் நீர்பெற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர்சோதனை நடவடிக்கைளின்போது சட்டவிரோத நீர்ப்பாவனையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர் மற்றும் நீர்விநியோக நடவடிக்கைகளுக்கு கடுமையான சட்டதிட்டங்களை வகுப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது" என்றார்.

No comments:

Post a Comment