Oct 1, 2010

இசையமைப்பாளர் சந்திரபோஸ் காலமானார்!





எளிமையின் கலைஞன் முரளியின் மறைவால் ஏற்பட்ட சுவடுகள் ஆறுவதற்குள் பின்னனிப்பாடகி ஸ்வர்ணலதாவின் மரணம் திரையுலகை அதிச்சியில் ஆழ்த்தியது. இப்போது தமிழ்திரையிசை உலகின் சாதனையாளர்களில் ஒருவரான சந்திரபோஸும் சிறுநீரக கூட்டு செயலிழப்பு காரணமாக இன்று காலமானார்.

சென்னை மயிலாப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்த அவருக்கு வயது 57.
362 படங்களுக்கு இசையமைத்தவர் சந்திரபோஸ். இதில் ரஜினி நடித்த மனிதன், ராஜா சின்னரோஜா உள்ளிட்ட ஏவி.எம்.மின் தயாரிப்பில் வந்த 12 படங்களும் அடங்கும். 1977-ல் தொடங்கிய இவரது இசை சாம்ராஜ்யம் தொடர்ந்து 20 வருடங்களுக்கும்மேலாக நிலைத்தது.

1978 இல் வெளியான “மச்சானைப் பார்த்தீங்களா” திரைப்படம் சந்திரபோஸுக்கு நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்திருந்தது. அதில் குறிப்பாக “மாம்பூவே சிறு மைனாவே” பாடல் காலத்தால் விஞ்சிய ஒரு தேன் விருந்தா‌க அமை‌ந்‌தது. கே.பாலாஜியின் விடுதலை படத்தில் சந்திரபோஸின் இசை மறுபடி‌யு‌ம்‌ கலக்கியது. பொதுவாக இப்படியான மொழிமாற்றுப் படங்களிலே மூலப்படங்களின் பாடல்கள் முழுவதையுமே நகல் எடுப்பது வழக்கம். ஆனால் “விடுதலை” திரைப்படத்துக்காக விஷேஷமாக சந்திரபோஸால் மெட்டமைக்கப்பட்ட “நீலக்குயில்கள் ரெண்டு” பாடல் பெ‌ரி‌ய ஹி‌ட்‌. அதற்‌கு‌ பி‌றகு ஏவி‌.எம்‌. நி‌றுவன படங்‌கள்‌ அவருக்‌கு கி‌டை‌த்‌து.

எண்பதுகளில் ஏ.வி.எம் நிறுவனத்துக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்த திரைப்படம் சங்கர் குரு. அர்ஜீன, சீதாவுடன் பேபி ஷாலினி பாடிக் கொண்டே வரும் “சின்னச் சின்னப் பூவே” பாடலும் இப்பட வெற்றிக்குக் கைகொடுத்த சமாச்சாரங்கள் என்றால் வைரமுத்து வரிகளில் சந்திரபோஸ் இசையமைத்த “காக்கிச் சட்டை போட்ட மச்சான்” பாட்டு கூட இந்த வெற்றியில் பங்கு போட்டது.

ரா‌ஜா‌ சி‌ன்‌ன ரோ‌ஜா‌ படத்‌தி‌ல்‌ சூ‌ப்‌பர்‌ ஸ்‌டா‌ரு யா‌ருன்‌னு கே‌ட்‌டா‌…, பு‌தி‌யபா‌தை‌ படத்‌தி‌ல்‌ பச்‌சபு‌ள்‌ள அழுததுண்‌ணா‌…பா‌ட்‌டி‌ சொ‌ல்‌லை‌ தட்‌டா‌தே‌ படத்தில்‌ டி‌ல்‌லி‌க்‌கு ரா‌ஜான்னா‌லும்‌ பா‌ட்‌டி‌ சொ‌ல்‌லை‌ தட்‌டா‌தே‌…, மனி‌தன்‌ படத்‌தி‌ல்‌ கா‌ளை‌ கா‌ளை‌ முரட்‌டு கா‌ளை‌ நீ‌தா‌னா‌… என பல பா‌டல்‌கள்‌ பெ‌ரி‌ய ஹி‌ட்‌.

இசை‌யமை‌ப்‌பா‌ளரா‌க இருந்‌த சந்‌தி‌ரபோ‌ஸ்‌ நடி‌கரா‌க மலர்‌கள்‌ தொ‌டரி‌ல்‌ நடி‌க்‌க ஆரம்‌பி‌த்‌தா‌ர்‌. லி‌ங்‌கம்‌ என்‌கி‌ற அவரது வி‌ல்‌லதனமா‌ன பா‌த்‌தி‌ரம்‌ ரசி‌கர்‌கள்‌ மத்‌தி‌யி‌ல்‌ பரபரப்‌பா‌க பே‌சப்‌பட்‌டது. டைரக்டர் தினேஷ் இவரை தனது கத்திக்கப்பல் படத்தில் மெயின் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செ‌ய்‌தா‌ர்‌. கலை‌ஞர்‌ தொ‌லை‌க்‌கா‌ட்‌சி‌யி‌ல்‌ ஒளி‌பரப்‌பா‌ன வைரநெஞ்சம் தொடரில்‌ மாமனார் வே‌டத்‌தி‌லும்‌‌, மெகா சேனலில் ஒளி‌பரப்‌பா‌ன யார் கண்ணன் இயக்கி‌ய ஜனனம் தொடரில் வைத்தியராகவும் நடி‌த்‌தா‌ர்‌. அவர்‌ ஒரு முறை‌ அளி‌த்‌த பே‌ட்‌டியில்‌

“நடிக்கும் ஆசையில் தான் சினிமாத் துறைக்கே வந்தேன்.ஆனால் வெளிப்படுத்த முடிந்தது எனக்குள் இருந்த இசையைத்தான். 12 வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடிக்க வந்து விட்டேன். கலைஞர் நடித்த மணிமகுடம் நாடகத்தில் கூட நடித்திருக்கிறேன். கலைஞரின் பராசக்தி நாடகமாக நடந்தபோது அதிலும் நடித்திருக்கிறேன். என் நடிபபில் எனக்கே திருப்தி ஏற்பட்ட நேரத்தில் தான் சினிமாவுக்கு நடிக்க வந்தேன். எதிர்பாராமல் இசையமைப்பாளராகி, அதில் பிரபலமான நேரத்தில் நடிப்பு ஆசையை ஒத்தி வைத்தேனே தவிர, நடிப்பார்வம் உள்ளூர கனன்று கொண்டுதான் இருந்திருக்கிறது. அதுதான் இத்தனை வருடம் கழித்து மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இசையமைப்பில் சாதித்ததையும் தாண்டி நடிப்பில் சாதிக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு எனக்குள் விதவித கேரக்டர்களாய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.” என்‌று சொல்லியிருந்தவர் சமீபத்தில் தனது மகனின் திருமனத்தை நடத்தி முடித்தார். மகன் திருமணத்துக்கு பிறகு ஒரு படத்தையும் இசையமைத்து இயக்க இருந்தாராம். இந்நிலையில் கடந்த 6 மாதமாகவே சிறுநீரகபிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து வந்ததாக குடுபந்தினர் தெரிவிக்கிரார்கள். சிலி தினங்களின் முன் அவரது உடல்நிலை மோசமாகிய போது, அவர் இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. எனினும் வைத்தியர்களின் தீவிர சிகிச்சையில் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியிருந்த அவர் இன்று காலமானார். சந்திரபோஸின் உடல் மைலாபூரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிகாக வைக்கப்படுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அயோத்தி தீர்ப்பு : இந்து மகா சபா, முஸ்லிம் சன்னி வக்பு வாரியம் எதிர்ப்பு




அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து, அதை இந்து, முஸ்லிம் அமைப்புகளுக்கு வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக இந்து மகா சபாவும், முஸ்லிம் சன்னி வக்பு வாரியமும் அறிவித்துள்ளன.

அதே நேரத்தில் இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக பாஜக, ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை அறிவித்துள்ளன.

அது போன்றே தீர்ப்பை எதிர்த்து அவசரப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதில்லை என்று பாபர் மசூதிக் கமிட்டி அறிவி்த்துள்ளது.

இந்த நிலத்தின் ஒரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், அதே நேரத்தில், மசூதி இருந்த மொத்த இடமும் தங்களுக்கே சொந்தம் என்று கூறிய முஸ்லிம் சன்னி வக்பு வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இந்த இடம் முழுவதையும் தங்களிடமே தர வேண்டும் என்று கோரிய, அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதே நேரத்தில் இந்த இடத்தில் 3இல் ஒரு பங்கு இடத்தை மட்டும் இந்த அமைப்பிடம் தர உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தங்களுக்கு 90 சதவீத வெற்றியே கிடைத்திருப்பதாகவும், பாபர் மசூதி கமிட்டிக்கு 3இல் ஒரு பங்கு இடத்தைத் தர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் இந்து மகா சபா அறிவித்துள்ளது.

யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை

ஆனால், இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது யாருக்கும் வெற்றி-தோல்வி இல்லை என்றும், இதை அனைவருமே மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்,

"ராமர் கோயில் கட்டுவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தீர்ப்பு வழி ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பால் யாருக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. ராமர் கோயில் கட்டுவதற்கு முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்" என்றார்.

தீர்ப்பை வரவேற்றுள்ள பாஜக செய்தித் தொடர்பாளரும், இந்து மகா சபாவுக்காக வாதாடிய வழக்கறிஞருமான ரவிசங்கர் பிரதாத், இந்தத் தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகாமல், அங்கு இந்துக்கள் கோவில் கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத்தும் தீர்ப்பை வரவேற்றுள்ளது.

ராமர் பிறந்த இடம் என்ற இந்துக்களின் நம்பிக்கை நீதித்துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை வரவேற்கிறோம் என்று அதன் பொதுச் செயலாளர் பிரவீண் தொகாடியா கூறினார்.

இதன் மூலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வழி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பாஜக அவசரக் கூட்டம்

இந்தத் தீர்ப்பையடுத்து பாஜக உயர்நிலைக் குழு கூட்டம் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் தலைமையில் இன்று இரவு நடைபெறுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இன்னொரு சூரிய குடும்பம் மனிதன் வாழ தகுதியுள்ள புதிய கோள் கண்டுபிடிப்பு







நமது சூரிய குடும்பத்தை போல ஏராளமான சூரிய குடும்பங்கள் வான வீதியில் உள்ளன. அதில் கிரிசி-581 என்ற சூரிய குடும்பம் 11 ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டது. இது பூமியில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தூரத்துக்கு அப்பால் உள்ளது.

இதில் உள்ள ஒரு கோளை விஞ்ஞானிகள் 11 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்தனர். நமது சூரிய குடும்பத்தில் சூரியனில் இருந்து பூமி எவ்வளவு தூரத்தில் உள்ளதோ அதே போல அந்த கோளும் அங்குள்ள சூரியனில் இருந்து இதே தூரத்தில் அமைந்துள்ளது.

இதனால் பூமியை போலவே சூரியனின் வெப்பம் இந்த கோளிலும் இருக்கிறது. எனவே இதில் தண்ணீர் மற்றும் ஆக்சிஜன் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஆகவே இந்த கோளில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு இருக்கிறது. மனிதன் அங்கு குடியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை





இந்தோனேசியா நாட்டில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.இந்த நிலையில் இன்று காலை அங்கு மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள அரு தீவு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு ஓடினார்கள்.

நிலநடுக்கம் மையம் கடலுக்கு அடியில் 12 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்தது. ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 7.2 புள்ளியாக பதிவாகி இருந்தது.

கடலுக்குள் நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் சுனாமி ஏற்பட வில்லை. எனவே சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

நிலநடுக்கம் அளவு 7.2 புள்ளியாக இருப்பதால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை.

இந்தோனேசியாவில் நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 6.6 புள்ளிகளாக இருந்தது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவுக்கு 30 மாதங்கள் சிறை: ராஜபட்ச





இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கும் தீர்ப்புக்கு அதிபர் ராஜபட்ச வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

இலங்கை உள்நாட்டு போரின்போது ராணுவத்துக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்ததில் ஊழலில் ஈடுபட்டதாக பொன்சேகா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ராணுவ நீதிமன்றம் அவருக்கு அண்மையில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதிபர் ஒப்புதல் அளித்த பின்னரே தீர்ப்பு செயல்படுத்தப்படும் என்பதால் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது.

ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றிருந்த அதிபர் ராஜபட்ச புதன்கிழமை கொழும்பு திரும்பினார். பொன் சேகாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்த விவரங்களைப் பரிசீலித்த அவர், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை இரண்டரை ஆண்டுகளாகக் குறைத்தார். தீர்ப்பை செயல்படுத்த ஒப்புதல் அளித்து அது தொடர்பான ஆவணங்களில் வியாழக்கிழமை அவர் கையெழுத்திட்டார். பொன் சேகாவின் பதவி, அந்தஸ்து, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை ரத்து செய்து ராணுவ நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நேட்டோ படையின் 27 எரிபொருள் டேங்கர் எரிப்பு : பாகிஸ்தானில் சதி செயலில் ஈடுபட்டது யார் ?






இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த நேட்டோ படையினரின் எரிபொருள் டாங்கர் மீது தாக்குதல் நடத்தி எரிக்கப்பட்டது. இச்சம்பவம் சர்வதேச அளவில் நேட்டோ படையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பாகிஸ்தானின் , ஆப்ககன் எல்லையோர சிந்து மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியது யார் என இன்னும் அறியப்படவில்லை.

முகமூடி அணிந்து வந்தனர் : கடந்த ஒரு வருடத்தில் நேட்டோ படையினரின் டாங்கர்கள் 100 க்கும் மேற்பட்டவை எரிக்கப்பட்டிருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது குறித்த போலீஸ் அதிகாரி அகம்மது சாண்டியோ கூறுகையில்; முகத்தை மூடிய சிலர் சிக்காபூர் டவுண் அருகே இந்த வாகனத்தை நிறுத்துமாறு டிரைவரை மிரட்டியுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டும் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியும் அட்டூழியம் செய்துள்ளனர். இதில் 27 டேங்கர்கள் தீ பற்றி எரிந்தது என்றார்.

இதில் கோடிக்கணக்கான மதிப்பிலான எரிபொருள் தீ பற்றி எரிந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஆப்கன் செல்ல வேண்டிய 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாகிஸ்தான் எல்லை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் நேட்டோ படையினர் தாக்குதலில் பலியான 24 மணி நேரத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் இந்த விஷயம் தொடர்பாக இது வரை வாய்திறக்கவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என மர்மம் நீடிக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...