Oct 11, 2010

பாகிஸ்தானில் யு.எஸ். ஏவுகணை தாக்குதல்: 7 தீவிரவாதிகள் சாவு

:

பாகிஸ்தானில் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகளின் நிலையை குறிவைத்து அமெரிக்கப் படை ஞாயிற்றுக்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் 7 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் இரு வாகனங்கள் தீ பற்றி எரிந்து சாம்பலாகியதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்திருந்த கட்டடம் ஒன்றுக்குள் தீவிரவாதிகள் முகாமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து 4 ஏவுகணைகளை வரிசையாக ஏவி அந்தக் கட்டடத்தை தகர்த்தது அமெரிக்கப் படை. இத் தாக்குதலில் கட்டடத்துக்குள் இருந்த 7 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் சமீபகாலமாக நேட்டோ படை வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நேட்டோ படைக்கு எண்ணெய் ஏற்றிச் செல்லவிருந்த 15 டேங்கர் லாரிகளை தலிபான்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.

இதையடுத்து பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையை நேட்டோ படை துரிதப்படுத்தியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

16,634 மில்லியன் ரூபா செலவில் மட்டு. மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகள்



மட்டக்களப்பு மாவட்டம் முப்பது வருட யுத்தத்தின் பின் இவ்வருடம் பாரியளவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. இதற்கென இவ்வாண்டு 16,634 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆராயும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தலைமையில் நேற்று (11) நடைபெற்றது.

பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீல. மு.கா. பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், மாகாண அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாண்டு வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் 15,319 மில்லியன் ரூபாய் செலவிலும், அமைச்சுக்களின் 750 மில்லியன், கமநெகும திட்டத்தின் 243 மில்லியன், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் 25 மில்லியன், கிழக்கு மாகாண சபையின் 307 மில்லியன் ரூபாய் செலவிலும் 2857 அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றுள் 70 சதவீதமான பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சண்டே லீடரில் வெளியான செய்திக்கு பொன்சேகா மறுப்புத் தெரிவிக்கவில்லை


வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாக, 2009 டிசம்பர் 12ம் திகதி ‘சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான தலைப்புச் செய்திக்கு சரத் பொன்சேகா ஒரு போதும் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்று சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்ஸ் மேல் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ட்ரயல் - அட்-பார் விசாரணையின் போது தெரிவித்தார்.

வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அச்சமயம் பிரதி சட்ட மா அதிபர் வசந்த நவரட்ண பண்டாரவினால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதே ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் இவ்வாறு கூறினார்.

அத்துடன் புலிகள் இயக்க தலைவர்கள் வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்த போது கொல்லப்படவில்லை என்றும் யுத்தத்தின் போதே அவர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறும் தெளிவான விளக்கமொன்றை 2009 டிசம்பர் 20ம் திகதி ‘சண்டே லீடர்’ பத்திரிகையில் பிரசுரிக்குமாறு சரத் பொன்சேகா பின்னர் ஒரு தடவை கூறியதாகவும் மங்கள சமரவீர உள்ளிட்ட நண்பர்கள் பலருடன் கலந்துரையாடிய பின்னரே சரத் பொன்சேகா இவ்வாறு தன்னிடம் கூறியதாகவும் பிரெட்ரிகா ஜான்ஸ் குறுக்கு விசாரணையின் போது கூறினார்.

குறிப்பிட்ட தெளிவான விளக்கத்தை பத்திரிகையில் பிரசுரித்த பின் சரத் பொன்சேகாவை தன்னால் தொடர்பு கொள்ள முடியாமற் போனதாக அவர் மேலும் கூறினார்.

விளக்கம் பத்திரிகையில் வெளியானதை யடுத்து ஜே.வி.பி.யினர் தனக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட தாகவும் தனது நற்பெயருக்கு களங்கம் விலைவிக்க முற்பட்டதாகவும் அவர் குறுக்கு விசாரணையின் போது குறிப்பிட்டார்.

வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான கட்டுரை பத்திரிகையில் வெளிவந்ததையடுத்து ஆயிரம் பேருக்கு மேல் அதனைப் பாராட்டியதாகவும் அது தொடர்பாக பி.பி.ஸி கூட தன்னை தொடர்பு கொண்டதாகவும் கூறிய பிரெட்ரிகா ஜான்ஸ் வெள்ளை கொடி விவகாரம் தொடர்பாக தான் எந்தவொரு ஊடகவியலாளர் மாநாட்டிலும் கலந்து கொள்ள வில்லை என்பதுடன் அவ்விடயம் பற்றி பத்தாரிகைச் செய்தி வெளியான பின் ஒரே ஒரு முறை மாத்திரம் சரத் பொன்சேகாவிடம் தான் பேசியதாகவும் குறிப்பிட்டார்.

வழக்கு விசாரணை இன்று காலை 10.30க்கு தொடரும்.
மேலும் இங்கே தொடர்க...

டிக்கோயா வைத்தியசாலையில் 150 கட்டில்களுடன் புதிய வார்ட் இந்தியா நிதியுதவி


டிக்கோயா, கிலென்கெய்ன் ஆதார வைத்தியசாலையில் 150 கட்டில்களைக் கொண்ட புதிய வார்ட்டுத் தொகுதியொ ன்றை எழு நூறு மில்லியன் (700) ரூபா செலவில் நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.

இவ்வார்ட்டுத் தொகுதியின் நிர்மாண வேலைகள் இவ்வருட முடிவுக்குள் ஆரம்பிக்கப்பட்டு அடுத்து வரும் மூன்று வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என்று கண்டியிலுள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகர் விக்ரம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

உதவி உயர் ஸ்தானிகரான மிஸ்ரா கடந்த சனியன்று டிக்கோயா கிலென்கெய்ன் ஆதார வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்தார்.

அங்கு ஆஸ்பத்திரியின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் நிஹால் விக்கிரம சூரியவை சந்தித்துக் கலந்துரையாடியதுடன் ஆஸ்பத்திரியையும் சுற்றிப்பார்த்தார்.

இவ்வாஸ்பத்திரியில் கடமையாற்றும் டாக்டர்களினதும், இதர ஊழியர்களினதும் பணிகளை அவர் பெரிதும் பாராட்டினார். இச்சமயமே அவர் இவ்வாஸ்பத்திரியை விஸ்தரிக்கும் திட்டத்தின் கீழ் 700 மில்லி யன் ரூபா செலவில் 150 கட்டில்களைக் கொண்ட புதிய வார்ட்டுத் தொகுதி அமைக் கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக்கு 690 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கீடு

பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக்கு 690 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டு ள்ளது.

பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பொலன்ன றுவை பிரதேச செயலாளர் காரியாலயத்தில் நேற்று (11) இடம்பெற்றது.

அக்கூட்டத்துக்கு தலைமை வகித்து உரையாற்றிய போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

இடைநிறுத்தப்பட்டுள்ள 50 குடிநீர் திட்டங்களும் இந்த மேம்பாட்டுத் திட்டங்களில் உள்ளடக்கப்பட் டுள்ளன.

இந்த குடி நீர்த்திட்டங்க ளுக்கு 124 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வருட இறுதிக்குள் இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவிடும் என்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கூட்டத்தில் தெரிவித்தார். அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் பொலன்னறுவை மாவட்ட அரசியல் அதிகாரசபை இந்தக் குடிநீர் திட்டங்களை வகுத்துள்ளது.

இதன் மூலம் ஏராளமானோர் நன்மை பெறுவர்.

அதேவேளை மெதிரிகிரிய, தமன்கடுவ, லங்காபுர, வெலிகந்த, திம்புலாகல, எலெஹார மற்றும் ஹிங்குராக்கொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களும் விரைவில் செயற்படுத்தப்படவுள்ளன.

பொலன்னறுவை மாவட்ட மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவும் ஜாதிக சவிய, கமநெகும, சமுர்த்தி, கெமிதிரிய மற்றும் யலி பிபிதெமு ஆகிய திட்டங்களை இப்போது இருப்பதைவிட மக்களுக்கு பயன்படும் வகையில் மக்களுடனும் பிரதேச அரசியல் அதிகார சபையுடனும் கூட்டாக நடத்துவத ற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இங்கு ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்க வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடு நிலைமையை ஆராய விஷேட குழு இன்று விஜயம்

முப்பது பேர் அடங்கிய அமெ ரிக்க வர்த்தகத் தூதுக்குழு நேற்று இலங்கை வந்தடைந்தது.

அமெரிக்க அரச மற்றும் தனியார் வர்த்தகப் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த தூதுக்குழு இன்று (12) வட மாகாணத்திற்கு, விஜயம் செய்யவு ள்ளது. யாழ்ப்பாணத்தை இன்று காலை சென்றடையும் மத்திய மற் றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க வர்த்தக அமைப்பின் (மடூடுசிடீசிக்ஷ நசிஹசிடீ பஙுஹக்ஷடீ தடீஙீஙுடீஙூடீடூசிஹசிடுசுடீ- மநபத) பிரதிநிதி மைக்கல் மெலன் தலை மையிலான உயர்மட்ட அமெரிக்க வர்த்தக தூதுக்குழுவினருக்கும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறிக்கும் இடையி லான விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண பொது நூலகத்தில் வட மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற வுள்ள இந்த சந்திப்பின் போது வட மாகாணத்திலுள்ள முதலீட்டு வாய் ப்புக்கள் குறித்தும், வட பகுதியில் முதலீடு செய்வது குறித்தும் விரி வாக ஆராயப்படவுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தலைமையில் அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத்தின் வர்த்தக பொறு ப்பாளர் நிமல் கருணாதிலக்க, இல ங்கை வர்த்தக திணைக் களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜி. ரி. சேனாதீர, இலங்கை வெளி விவகார அமை ச்சு, இலங்கை முதலீட்டுச் சபை ஆகியவற்றின் பிரதி நிதிகளும் இன்று யாழ்ப்பாணத்திற்குச் செல்லவுள்ளனர்.

அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, மண்டத்தீவு, கேரதீவு, தீவு பகுதிகளு க்கும், வட பகுதியிலுள்ள கைத் தொழில் மற்றும் சுற்றுலா பிரதேசங் களுக்கும் இந்த வர்த்தகத் தூதுக்குழு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வர்த்தக துறையினரையும் சந்தித்துப் பேசவுள்ளனர். அமெரிக் காவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கை வந்துள்ள இந்த வர்த்தகத் தூதுக் குழுவின் சுமார் ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர்.

இருநாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அமெ ரிக்க- இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு திட்ட ஒப்பந்தத்திற்கு அமைய (மந- நஙுடுங்ஹடூகூஹ பஙுஹக்ஷடீ & ஐடூசுடீஙூசிஙிடீடூசி ஊஙுஹஙிடீசூச்ஙுகூ அகிஙுடீடீ ஙிடீடூசி பஐஊஅ) தனியார் வர்த்தக துறை யினரின் ஒத்துழைப்பை, பெற்றுக் கொள்ளும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதுரகத்தின் வர்த்தக பொறுப்பாளர் நிமல் கருணாதிலக்க தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதேவேளை நாளை 13ம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ள தனியார் மற்றும் அரச பங்குடமை மாநாட்டில் இந்தத் தூதுக்குழுவினர் கலந்து கொள்ள வுள்ளனர். அத்துடன் 14ஆம் திகதி இருநாட்டு அரசாங்க பிரதி நிதிகளுக்கும் இடையில் அமெரிக்க- இலங்கை வர்த்தக மற்றும் முதலீ ட்டு திட்ட ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையும் இடம்பெறவுள் ளது.

வடக்கில் முதலீட்டுத்துறையை மேம்படுத்தும் பொருட்டு அரசா ங்கம் பல்வேறு திட்டங்களையும், செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, தற்பொழுது அதிகமான உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து தமது பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...