Nov 3, 2010

இலங்கை அகதிகளிடம் பண மோசடி: நாகப்பட்டினத்தில் 3 பேர் கைது



நாகப்பட்டினம், நவ.3: வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, இலங்கை அகதிகளிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினத்தில், அகதி முகாம்களில் இருந்து வெளியேறி வந்த இலங்கை அகதிகள் 14 பேர் போலீசாரால் நேற்று பிடிக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்களை அகதி முகாம்களில் இருந்து வெளியேற்றி அழைத்து வந்ததாகவும், வெளிநாடுகளில் கொண்டு போய் விட்டுவிடுவதாகவும் கூறி, அகதிகளிடம் இருந்து பண பெற்று மோசடி செய்த 3 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

மீட்கப் பட்ட இலங்கை அகதிகள் அனைவரும் மீண்டும் பத்திரமாக அகதி முகாம்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

அணிலை குழந்தையாக வளர்க்கும் அதிகாரி ராமராக கருதி வழிபடும் பக்தர்கள்





சென்னை சந்தாமணி ஆர்.வி, நகரைச் சேர்ந்தவர் மோகணேஷ். தனியார் நிறுவன மேலாளராக உள்ளார். இவருக்கு மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.இவர் தனது வீட்டில் அணில் ஒன்றை குழந்தை போல வளர்த்து வருகிறார். அவர் எங்கு சென்றாலும் அணிலும் அவரது தோளில் தொற்றிக் கொள்கிறது.

அவர் உணவு கொடுத்தால்தான் சாப்பிடுகிறது. அவர் வெளியூர் சென்று விட்டால் எதையும் சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறது.

இதனால் இந்த அணிலை அவர் மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறார். அணில் ராமபிரான் வாகனம் என்பதால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று அதை வழி படுகிறார்கள். அணிலை பார்த்ததும் ராமரை நேரில் பார்த்ததாகவே கருதி மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகிறார்கள். இதுபற்றி மோகணேஷ் கூறியதாவது:-

நான் 4 ஆண்டுகளுக்கு முன்பு 3 அணில் குட்டிகளை வளர்த்தேன். அதில் 2 இறந்து விட்டன. தற்போது இந்த அணில் மட்டும்தான் உயிருடன் உள்ளது.

இதை நானும் குடும்பத்தினரும் குழந்தை போல வளர்த்து வருகிறோம். நாங்கள் என்ன சொல்கிறோமோ அதன்படி நடக்கும். அதற்கு எல்லாமே புரிகிறது.

தினமும் அணிலுக்கு உணவாக பால், ஆப்பிள், கேக், திராட்சை போன்றவற்றை கொடுக்கிறோம். கேக்கை விரும்பி ருசித்து சாப்பிடுகிறது. இதனால் தினமும் அணிலுக்காக ஒரு கேக் வாங்குகிறேன்.

அணிலுக்கு உடல்நிலை சரி இல்லாவிட்டால் எங்கள் குடும்பமே கவலையில் மூழ்கி விடும். உடனே அதை தூக்கிக் கொண்டு செல்லப்பிராணிகள் மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளிப்போம்.

அணில் ராமபிரானின் வாகனம் என்பதால் அக்கம் பக்கத்தினர் கூட்டமாக வந்து அதை பார்த்து வழி படுகிறார்கள். இதை பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

அணிலை நோய்க் கிருமிகள் தொற்றாமல் இருக்க வெந்நீரில் டெட்டால் கலந்து தினமும் அதை துணியில் நனைத்து துடைத்த விடுவோம்.

பெரும்பாலும் அணிலை அவ்வளவு எளிதில் பிடித்து விட முடியாது. வேகமாக ஓடும் தன்மை கொண்டது.

அப்படிப்பட்ட அணில் எங்களை விட்டு பிரியாமல் இருப்பது ராமபிரானின் அனுக்கிரகமாகத்தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

போலி பாஸ்போர்ட் மூலம் கனடா செல்ல முயன்ற குஜராத் தம்பதி கைது; சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்கள்


சென்னை விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து ஒரு விமானம் வந்தது.

அதில் இருந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண்ணும் அவரது கணவரும் மலேசியாவில் இருந்து சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த தம்பதியினர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் போலி பாஸ்போர்ட்டை வைத்து கனடாவுக்கு செல்ல முயன்றதால் மலேசியாவில் இருந்து சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் சிக்கிய தம்பதியரின் பெயர் விஷால்குமார் பட்டேல் (30), சினேகல் (27). கணவன், மனைவி இருவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

கடந்த மாதம் 27-ந்தேதி மும்பையில் இருந்து சுற்றுலா விசாவில் இந்த தம்பதியினர் மலேசியா சென்றுள்ளனர். அங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் கனடா செல்ல முயன்றபோது மலேசிய குடியுரிமை அதிகாரிகள் அதை கண்டுபிடித்து விட்டனர்.

அதை தொடர்ந்து விஷால் குமார் பட்டேல்-சினேகல் ஆகியோரை சென்னைக்கு திருப்பி அனுப்பி விட்டனர். சென்னை விமான நிலையத்தில் நடந்த சோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டது.

கணவன்-மனைவி இருவரையும் சென்னை விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனி, பத்மநாபன் ஆகியோர் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கல்லால் அடித்து கொல்லும் தண்டனை மாற்றம்: ஈரான் பெண்ணுக்கு இன்று தூக்கு

ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் சகினே மொகமதி ஆஸ்தியானி. கணவரை கொலை செய்ததாகவும், வேறு ஒரு ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாகவும் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், இந்த தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்படாமல் உள்ளது. கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்தியானி. தற்போது தெக்ரானில் உள்ள தாப்ரிஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எனவே, பொதுமக்கள் மத்தியில் இவரை கல்லால் அடித்து கொல்ல அந்நாட்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு உலக நாடுகளும், சமூகசேவை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.

எதிர்ப்பு வலுவடைந்ததை தொடர்ந்து இந்த தண்டனையை ஈரான் அரசு கை விட்டது. மாறாக கணவரை கொலை செய்த குற்றத்துக்காக அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.

இந்த நிலையில், அவருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்தியானயை கல்லால் அடித்து கொல்ல விதிக்கப்பட்ட தண்டனை எதிர்த்து போராடிய உலக நிறுவனம் இத்தகவலை தெரிவித்துள்ளது. இது ஜெர்மனியில் இயங்குகிறது.

இதற்கிடையே, தூக்கு தண்டனை இன்று நிறைவேற்றப்படுமா? என தெரிய வில்லை. இது குறித்து ஈரான் அதிகாரிகளிடம் நிருபர்கள், கேட்டனர். அதற்கு பதில் சொல்ல அவர்கள் மறுத்து விட்டனர். தண்டனை இன்று நிறைவேற்றப்படலாம் அல்லது வேறு தேதிக்கு மாற்றப்படலாம் என்று மழுப்பலாக பதில் அளித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

சந்திரனுக்கு எந்திர மனிதனை அனுப்ப “நாசா” திட்டம்


சந்திரனுக்கு மீண்டும் விஞ்ஞானிகளை அனுப்ப அமெரிக்காவின் “நாசா” விண்வெளி நிறுவனம் முடிவு செய்திருந்தது. அதற்காக ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவிட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு அதிக அளவு செலவாகும் என கருதி அதிபர் ஒபாமாவின் அரசு இந்த திட்டத்தை கைவிட்டது.

இந்த நிலையில், சந்திரனுக்கு எந்திர மனிதனை (ரோபாட்) அனுப்ப “நாசா” முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1000 கோடிக்கும் குறைவாகவே செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஹீவ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மைய நாசா என்ஜினீயர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித குணங்களை கொண்ட எந்திர மனிதனை சந்திரனுக்கு பாதுகாப்பாக அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணி 1000 நாட்களில் முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...