Nov 4, 2010

ரூ.1 கோடி கேட்டு 2 பேர் கடத்தல்: 4 விரல்களை துண்டித்து அனுப்பிய கடத்தல்காரர்கள்

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பதேபூர் சிக்ரி என்ற புராதன நகரைச் சேர்ந்தவர் அனில்குமார். தொழில் அதிபரான இவரது உறவினர்கள் ரஜத், கவுரவ், ஆகியோர் கடந்த மாதம் 15-ந்தேதி காலையில் பால் வாங்குவதற்காக சென்றனர்.

அப்பேது ஜீப்பில் வந்த கடத்தல் கும்பல் இருரையும் தாக்கி ஜீப்பில் தூக்கிப் போட்டு கடத்திச் சென்றனர். பின்னர் அவர்கள் அனில் குமாருக்கு போன் செய்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தனர்.

ஆனால் அந்த அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய அனில்குமார் ரூ.25 லட்சம் வரை தர சம்மதித்தார். இதை கடத்தல் கும்பல் ஏற்றுக் கொள்ள வில்லை.

இதுபற்றி அனில்குமார் போலீசில் புகார் செய்தார். போலீசார் கடத்தல் கும்பல் பற்றி விசாரணை நடத்தி 2 பேரையும் மீட்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அனில் குமாருக்கு மீண்டும் கடத்தல் காரர்களிடம் இருந்து போன் வந்தது. அதில் பேசியவன் உங்களுக்கு தீபாவளி பரிசாக ஒரு பார்சல் அனுப்பி இருக்கிறேன். அந்த பார்சல் சுடுகாடு அருகே கிடக்கிறது. போய் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான்.

உடனே அனில்குமார் பதறியடித்துக் கொண்டு சுடுகாட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு ஒரு பார்சல் கிடந்தது. அதை பதட்டத்துடன் பிரித்துப் பார்த்த போது 4 விரல்கள் துண்டித்து வைத்து அனுப்பப்பட்டு இருந்தது.

கடத்தல் கும்பல் அனில் குமாரை மிரட்டவே கை விரல்களை துண்டித்து அனுப்பியுள்ளது. இது பற்றியும் அனில்குமார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் கை விரல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவை கடத்தப்பட்டவர்களின் கை விரல்கள் தானா ? என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவை பரி சோதனைக்காக சண்டிகாரில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடத்தல்காரர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்தரகுர்ஜார் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளை கும்பல் பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் அடிக்கடி இது போன்ற கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தற்போது கடத்தப்பட்டவர்கள் பற்றி இதுவரை எந்த துப்பும் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் பதட்டத்தில் உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

நடுவானில் பறந்தபோது விமான பாகம் உடைந்து விழுந்தது; 459 பயணிகள் தப்பினர்






சிங்கப்பூரில் இருந்து இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னிக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. 459 பயணிகள் இருந்தனர்.

விமானம் புறப்பட்டு 5-வது நிமிடத்தில் விமானத்தில் ஒருபக்க எந்திரத்தில் உள்ள மேல்பகுதி பாகம் உடைந்து விழுந்தது.

உடனே பைலட் விமானத்தை திருப்பி சிங்கப்பூரில் அவசரமாக தரை இறக்கினார். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளிக்கிழமையில் தீபாவளி லட்சுமி வழிபாடு-பலன்கள் குளியல்-தீபம் ஏற்ற உகந்த நேரம்




வெள்ளிக்கிழமையில் தீபாவளி லட்சுமி வழிபாடு-பலன்கள் குளியல்-தீபம் ஏற்ற உகந்த நேரம்
திரைப்படம் திரைப்படம்
தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களில் அமாவாசை இருந்தாலும் நாளைதான் முழுமையான சர்வ அமாவாசை ஆகும். இந்த தீபாவளி வெள்ளிக்கிழமை அன்று வருவது கூடுதல சிறப்பு வாய்ந்த தாகும். இதுபற்றி பிரபல வாஸ்து பேராசிரியர் யோகஸ்ரீ மணிபாரதி கூறியதாவது:-
இந்த தீபாவளி சித்திரை நட்சத்திரத்தில் வருவதும் சந்திரன் வெள்ளிக்கிழமை வீட்டில் இருப்பதும் நட்சத்திர அதிபதி ஆட்சியாக விருச்சிகத்தில் இருப்பதால் குருவால் பார்க்கப்படுவதால் இந்நாள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் சுக்கிரனுக்கு உகந்தநாள் வெள்ளிக்கிழமை ஆகும். சுக்கிரன் அதிதேவதை மகாலட்சுமி. எனவே மகாலட்சுமியை நாளை வழிபட்டால் கூடுதல் பலன்களை பெறலாம்.

தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய்தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தீபாவளி நாளில் கேதார கவுரி விரதம் இருந்து வழிபட்டால் மனை தோஷங்கள் நீங்கும். வீட்டில் பொன், பொருள் சேரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.

தீபாவளி அன்று குளியல், புத்தாடை உடுத்துதல், தீபம் ஏற்றுதல் கேதார கவுரி விரதம் போன்றவற்றை செய்ய உகந்த நேரம் வருமாறு:-

நாளை மாலை பிரதோஷ காலத்தில் அமாவாசை இருக்கும் நேரத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். எனவே நாளை மாலை 5.41 (சூரிய அஸ்தமனம்) முன்பே தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

நாளை அஷ்டமசுத்தியும், குருபார்வையும் உடைய கன்னியா லக்கனத்தில் அதிகாலை 2.45 மணிக்கு மேல் அதிகாலை 4.45 மணிக்கு முன்னர் தலை குளியல், புத்தாடை உடுத்துதல் நல்லது.

தீபாவளி அன்று செய்யும் மகாலட்சமி பூஜை மிகவும் சிறப்பானது. இப்பூஜையை மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை செய்யலாம்.

வெள்ளிக்கிழமை நாளில் தீபாவளி கொண்டாடப்படுவதால் அனைவரும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிலும் ரிஷபம், துலாம், ராசி லக்னக்காரர்கள் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரக்காரர்கள் அசைவத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு யோகஸ்ரீ மணிபாரதி கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...