Nov 15, 2010

தண்ணீர் மட்டுமல்ல சந்திரனில் வெள்ளியும் கண்டுபிடிப்பு





பூமியில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரத்தில் உள்ளது சந்திரன். மனிதர்கள் வாழ்வதற்கு மிகத் தேவையான காற்று, தண்ணீர் ஆகியவை இல்லை. எனவே, சந்திரனுக்கு செல்வது இயலாத செயல் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது.

சமீபத்திய ஆய்வுகள் மூலம் சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பது அறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்ணீர் மட்டும் இல்லாமல், வெள்ளி, கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட தனிமங்களும் அதிகளவில் அங்கு கலவையாக இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா, மனிதனை சந்திரனுக்கு அனுப்ப முயற்சி செய்து வந்தன. இதில், அமெரிக்கா முதலில் வெற்றி பெற்றது. கடந்த நூற்றாண்டில், 1969ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி அமெரிக்க விண்வெளி வீரர் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் இறங்கி சாதனை படைத்தார். இதை தொடர்ந்து, பல முறை விண்வெளி வீரர்கள், ஆளில்லாத ராக்கெட்டுகள் பறக்க விட்டு சந்திரனில் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2008ம் ஆண்டு அக்டோபரில் சந்திரனுக்கு சந்திரயான் -1 என்ற ராக்கெட்டை இந்தியா வெற்றிகரமாக அனுப்பி சாதனை செய்தது. சந்திரனை சுற்றி வந்த சந்திரயான்-1, பல்வேறு கோணங்களில் சந்திரனை படம் எடுத்து அனுப்பியது. அதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், சந்திரனில் தண்ணீர் உள்ளது என்று கண்டுபிடித்தனர்.இந்நிலையில், சந்திரனில் அதிகளவில் தண்ணீர் உள்ளது என்று தெரிய வந்தது. மேலும், பல்வேறு தனிமங்களும் உள்ளன என்றும், குறிப்பாக, வெள்ளி, கார்பன் டை ஆக்சைடு ஆகியவை அதிகளவில் கலவையாக இருப்பது உணர்வு செயற்கைக்கோளை கடந்த ஆண்டு சந்திரனில் மோத செய்து அதன் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ததன் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்து சந்திரனை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கூறியதாவது:சந்திரனில் லேசான ஹைட்ரோ கார்பன்கள், கந்தகம், கார்பன் டை ஆக்சைடு ஆகியவை இருப்பது உணர்வு செயற்கைக்கோள் மோதியதில் தெரிய வந்துள்ளது. சந்திரனில் காணப்படும் பெரிய பள்ளங்களில் தண்ணீர் அதிகமாக இருப்பதும், அந்த பள்ளங்களின் பரப்பில் 5.6 சதவீதம் தண்ணீர் இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது. இதுவரை சந்திரனைப்பற்றி தெரியாத நிலையில், உணர்வு செயற்கைக்கோள் சந்திரனின் இருட்டுப் பகுதியில் மோதிய வேகத்தில் 10 கி.மீ., உயரத்திற்கு தூசிகள் கிளம்பின. இதில், உறை நிலையில் நிரந்தரமாய் தண்ணீர் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. சந்திரனின் தென் துருவப் பகுதியில் காணப்படும் "கேபஸ்' என்ற பெரும் பள்ளத்தில் இருந்து எழும் தூசிகள் குறித்த தகவல்களை அறிய உலகின் பல இடங்களில் உள்ள தொலைநோக்கிகள் செயல்பட்டு வருகின்றன. சந்திரனில் பல முறை விண்கற்கள் மோதி பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, சந்திரனில் காணப்படும் நூறு கிலோ மீட்டர் அகலம் நான்கு கி.மீ., ஆழம் உள்ள பெரும் பள்ளத்தில் ராக்கெட்டை மோத விட்டு ஆய்வு செய்ய நாசா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக 585 கிலோ எடையில் ராக்கெட் தயாரிக்கப்படுகிறது. இந்த ராக்கெட், சந்திரனில் காணப்படும் பெரும் பள்ளத்தில் இரண்டு மீட்டர் ஆழத்தில் மோதுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

த்தத்தை தவிர்க்க பிரபாகரனிடம் விண்ணப்பித்தோம் ஆனால் ஏமாற்றமே: தயா மாஸ்டர்

ஒரு கட்டத்தில் நாங்கள் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான பாலகுமாரன் ஊடாக புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு யுத்தத்தை தவிர்க்கவும் உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்குமாக விண்ணப்பம் ஒன்றை அனுப்பியிருந்தோம். அந்த கடிதத்தின் ஒரு பிரதியை பாலகுமாரன் என்னிடம் அப்போது காட்டியிருந்தார். ஆனால், விண்ணப்பங்களை அனுப்பிய போதும் ஏமாற்றமே அறிகுறியாக இருந்தது என்று புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் தேசிய நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்து கொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு சாட்சியமளித்த தயா மாஸ்டர் மேலும் கூறியதாவது :

நான் ஒரு காலத்தில் புலிகளின் ஊடகத்துறையில் இணைப்பாளராகச் செயற்பட்டேன். புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் கீழே இந்த ஊடகப் பிரிவு வருகின்றது. புலிகள் அமைப்புக்கும் அரசாங்கத்திற்குமிடையில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்களில் அந்த அமைப்பை விட்டு நான் வெளியேறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். காரணம் பேச்சுவார்த்தைகளை முறிப்பதன் மூலமும் புறக்கணிப்பதன் மூலமும் மக்களின் பாதிப்புக்களை தவிர்க்க முடியாது என நான் உணர்ந்திருந்தேன். அதனால்தான் அவ்வாறான தீர்மானமொன்றை எடுத்தேன்.

போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது எண்ணிலடங்காத மக்கள் கொல்லப்பட்டனர். இரு தரப்பினருக்கு மத்தியிலும் சிக்கிய நிலையில் பலர் உயிரிழந்தனர். எனது குடும்பமும் நானும் பல தடவைகள் மரணத்தின் விளிம்பிற்கே சென்று விட்டு வந்தோம். 2009 ஜனவரியில் போர் எங்கு நடைபெறும் என்ற வரையறை இல்லாமலிருந்தது. அதன் பரிமாணம் விரிவடைந்தது. மக்கள் அங்கலாய்த்தவர்களாகக் காணப்பட்டனர். உயிரிழப்புக்கள் இடம்பெற்றன.

ஒவ்வொருவரும் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதற்கு முயற்சித்தமையே உண்மை நிலைமையாகும். அந்தக் காலகட்டங்கள் வாழ்வில் மறக்கமுடியாதவை. தப்புவதற்கு முயற்சித்த பல்லாயிரக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். அந்தச் சந்தர்ப்பங்களை நினைத்து வருந்துகிறேன்.

எப்படியோ போன உயிர்களைத் திருப்பிப்பெற முடியாது. ஒரு கட்டத்தில் நாங்கள் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான பாலகுமாரன் ஊடாக பிரபாகரனுக்கு யுத்தத்தை தவிர்க்கவும் உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்கும் ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தோம்.ஆனால், விண்ணப்பங்களை அனுப்பிய போதும் ஏமாற்றமே அறிகுறியாக இருந்தது என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா விடயத்தில் அரசாங்கத்துக்கு வழிசமைத்துள்ள ஆங்சான் சூகியின் விடுதலை : ரணில்

மியன்மாரை விட ஜனநாயக குணாதிசயங்கள் நிறைந்த நாடாக இலங்கை திகழ்கின்றபோதிலும், அந்த குணாதிசயங்கள் இன்றைய அரசாங்கத்திலும் இந்நாட்டிலும் இருக்கின்றனவா? என்பதை பரீட்சித்துப் பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் இராணுவ ஆட்சியின் 15 வருட வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவியான ஆங் சான் சூகி மீதான இந்த நடவடிக்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடயத்தில் இன்றைய அரசாங்கத்துக்கு ஒரு வழிகாட்டலாக அமைந்துள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள விஷேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

மியன்மாரின் ஆங் சான் சூகி அமைதிக்கான நோபல் பரிசு வென்றவராவார். இவருக்கு விதிக்கப்பட்டிருந்த வீட்டுக் காவல் சிறையிலிருந்து அவர் விடுதலை பெற்றிருப்பதானது ஜனநாயகத்தை மதிக்கின்ற உலக மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

கடந்த 21 வருட இராணுவ ஆட்சிக் காலத்தில் சுமார் 15 வருடங்கள் வீட்டுக் காவல் சிறையில் வைக்கப்பட்ட இவர் தமது சுதந்திரத்தைப் பறிக்கப்பட்டவராகவே இருந்தார்.

நாம் உட்பட உலகில் ஜனநாயகத்தை விரும்புகின்ற சகலரும் வெவேறு விதங்களில் மியன்மார் அரசாங்கத்திடம் வலியுறுத்தி வந்த நிலைமை காணப்பட்டது.

இருப்பினும் இந்த வலியுத்தல்களையும் கேளிக்கைகளையும் மியன்மார் அரசாங்கம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

எது எப்படியிருப்பினும் இறுதியில் ஜனநாயகமே வெற்றி பெற்றுள்ளது. நாட்டின் சுயாதிபத்தியம் என்ற போர்வையில் ஜனநாயகத்தை முடக்குகின்ற ஆட்சியாளர்களை நாம் இனம்கண்டு கொள்ள வேண்டும்.

சுயாதீனம் என்று கூறி மக்களின் சுயாதீனத் தன்மைக்கு எதிராக செயற்படுவதானது ஒரு நிர்வாகத்தின் சுயாதீன ஆட்சியாக இருக்க முடியாது.

விடுதலை பெற்றுள்ள ஆங் சான் சூகி சுதந்திர உலகில் பிரவேசித்து ?? ஜனநாயக ரீதியிலான ??? சகல அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து மியன்மாருக்கு தேவையான ஜனநாயகம் தொடர்பில் அவரது பயணம் அமைய வேண்டுமென்பது எமது பிரார்த்தனையாகும். உலகின் பல்வேறுபட்ட நாடுகளில் பல அரச தலைவர்கள் தமது சந்தர்ப்பவாத அரசியலுக்காக ஜனநாயகத்தை மிதித்து ஆட்சி நடத்துவதற்கு முயற்சிக்கின்றனர். எனினும் அவ்வாறான முயற்சிகள் சதாகாலத்தும் இல்லை என்பதை இந்த சம்பவத்தினூடாக மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம். மியன்மாரிலும் பார்க்க இலங்கை ஜனநாயகம் நிறைந்த நாடாகும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற நாடாகவும் எமது நாடு இருக்கின்றது. எனினும் அது இன்றைய நிலை பரீட்சித்துப் பார்க்க வேண்டிய சூழலுக்குள் தள்ளி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் ஆட்சியாளர்களுக்கும் மேற்படி ஆங் சான் சூகியின் விடுதலை ஒரு வழிகாட்டலாக அமைந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்க அரசு தவறியுள்ளது : சஜித்

சஜித் பிரேமதாஸ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் துரித நிவாரண சேவை களை வழங்குவதற்கு தவறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாஸ, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான அரிசியினை வழங்கினார்.

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஐ.தே.கட்சி எம்.பி.யான சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினர் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்ததுடன் நிவாரணங்களையும் வழங்கினர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

கடந் புதன்கிழமை இரவு 8.00 மணி முதல் வியாழக்கிழமை காலை 8.00 மணிவரையிலான 12.00 மணித்தியாலங்களாக பெய்த கடும் மழையினால் நாட்டின் பல பாகங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் மேல் மாகாணமே அதிக பாதிப்புக்குள்ளானது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மாகாணத்தில் இவ்வெள்ளத்தத்தினால் 70 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு அரசாங்கம் துரித நிவாரண சேவைகளை வழங்கவில்லை.

நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதனை பார்த்துக்கொண்டு ஒரு ஓரத்தில் இருக்க முடியாது. அம்மக்களின் சுகதுக்கங்களில் பங்கெடுத்து எங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ரிஸானாவின் மன்னிப்புக்கு வீட்டு எஜமானருடன் கலந்து பேசுங்கள்: சவூதி மன்னர்

சவூதி அரேபியாவில் ரிஸானா நபீக் என்ற பணிப்பெண் பணிபுரிந்த வீட்டு எஜமானருடன் கலந்துபேசி ரிஸானாவுக்கு பொது மன்னிப்பைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ், அந்நாட்டின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

மரண தண்டனையிலிருந்து ரிஸானாவை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அனுப்பிய கருணை மனுக் கோரிக்கைகளையடுத்தே சவூதி மன்னர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

மூதூரைச் சேர்ந்த பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கிற்கு ரியாத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இருந்தபோதும் பல்வேறு காரணங்களால் அவருக்கு மன்னிப்பளிக்குமாறு ஹொங்கொங்கை தளமாக கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, நியூயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஜெனிவாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை என்பனவும் பல்வேறு புத்திஜீவிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்விடயத்தை ராஜதந்திர ரீதியில் அணுகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்தது. இதனடிப்படையில், ரிஸானாவுக்கு கருணைகாட்டுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸிற்கு கடிதமொன்றை அனுப்பினார். ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரரக அதிகாரிகளினால் மன்னர் மாளிகையிடம் ஒப்படைக்கப்பட்ட இக்கடிதம் தொடர்பாக சவூதி மன்னர் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சவூதி சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு மன்னிப்பை பெற்றுக் கொடுப்பதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும் வேறுசில காரணங்களினாலும், ரிஸானா விடயத்தில்சவூதியின் நிலைப்பாடு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எவ்வாறிருந்தபோதிலும் அங்கிருந்து கிடைக்கும் பிரதிபலிப்புகள் சாதகமானவையாக தோன்றுவதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கவும் விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்குமாக, அவர் பணிபுரிந்த வீடு எஜமானரும் மரணித்த குழந்தையின் பெற்றோருமாகிய அல் ஒடாபி தம்பதிகளுடன் இது விடயமாக கலந்துரையாடுமாறு சவூதி அதிகாரிகளுக்கு மன்னர் பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் பாதிக்கப்பட்ட பெற்றோர் சம்மதிக்கும் பட்சத்தில் இரத்த உறவுக்கான நஷ்ஈட்டுத் தொகையை வழங்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் லிட்ரோ கேஸ் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

'லிட்ரோ கேஸ்' நிறுவனம் இலங்கையில் தனது சேவையை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்றது என அரசாங்க வர்த்தக நிலையத் திணைக்கள இயக்குனர் பி.எம்.எஸ். படகொட தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

" எல்.பி கேஸின் பங்குகளில் 49 வீத பங்குகளை இலங்கை இன்று உத்தியோகபூர்வமாக முழுமையான உரிமை பெறுகிறது. எல்.பி கேஸின் பெயர் லிட்ரோ கேஸாக மாற்றப்பட்டதை தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் இன்று தெரிவு செய்யப்படுவர்.

லிட்ரோ கேஸ் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் உடைமையாக்கபட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது " என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

லெப்டோஸ்பைரோஸிஸ் எனும் எலிக்காய்ச்சல் நாடளாவிய ரீதியில் தீவிரமாக பரவி வருகின்றது என தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வருடம் எலிக்காய்ச்சலினால் 89 பேர் உயிரிழந்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 627 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மேற்படி பிரிவின் புள்ளிவிபர அறிக்கை தெரிவிக்கின்றது.

எலிக்காய்ச்சலினால் ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் அதிகளவு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வயல்வெளிகளில் இருந்து எலிக்காய்ச்சல் நேரடியாக பரவுகின்றது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகளாவர். இது தொற்றுநோய் அல்ல. ஆனால் ஒரு மிருகத்திலிருந்து இன்னொரு மிருகத்திற்கு பரவும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஆசியாவிலேயே வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நடாக இலங்கை உள்ளது : விமல்

ஆசியாவிலேயே மிக வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக இலங்கை இருப்பதாக வீடமைப்பு மற்றும் பொது சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கண்டி சிட்டி சென்டர் நிலையத்தில் இடம் பெற்ற தேசிய உணவுகளைப் பிரபல்யப்படுத்தும் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதயாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த விமல், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் போது தேசிய உற்பத்திகளை ஊக்குவிக்கும் விதத்தில் பல பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளதாகக் கூறினார்.

அத்துடன் இன்றைய இலங்கைக்கும் முன்னனைய இலங்கைக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. இன்று நாம் வாழும் நாடு ஒரு புதிய நாடு. பல வருடங்களாக எம்மை வாட்டிய யுத்தததை முடிவுக்கு கொண்டுவந்த பின் உருவாக்கப்பட்டுள்ள அமைதியான நாடு இது வாகும்.

இவ்வாறான பண்புகளைக் கொண்ட ஒரு நாட்டில் வாழும் குடிமக்களுக்கு பல கடமைகள் உண்டு. தேசிய உணர்வுகளுடன் கூடிய தேசிய உற்பத்தியை அதிகரிக்கும் அரச திட்டத்திற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். கோதுமை மா இல்லா விட்டால் எம்மால் வாழ முடியாது என்ற கோட்பாட்டை சிலர் முன்வைக்கின்றனர். ஆனால் இது ஒரு மனோ நிலையாகும். தற்போது எமது பேக்கரிகளில் அரிசி மாவை பாவித்து பாண் தயாரிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

எனவே அரிசி மாவை கோதுமை மா போன்று மெதுமையாக மாற்றக் கூடிய மத்திய நிலையங்களை நாம் ஆரம்பித்துள்ளோம். எனவே வெகு விரைவில் அரிசி மா பேக்கரிகள் இயங்கத்தொடங்கும்.

இலங்கையில் உண்மையான தேசிய நோக்குள்ள அரசாங்கமே தற்போதே உள்ளது. நாட்டின் அனைத்து துறையிலும் தேசியத்துவத்தை முன்னெடுக்க வேண்டும். விவசாயத்தறையில் இரசாயன பசளை பாவிப்பதையும் நிறுத்த வேண்டும்;;. என்றும் அவர் கூறினார்.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கனாயக்கா மத்திய மாகாண விவசாய அமைச்சர் நிமல் பியதிஸ்;;ஸ ஆகியோரும் இங்கு உரை நிகழ்த்தினர்.
மேலும் இங்கே தொடர்க...

பொது மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தக் கூடிய பரிந்துரையை ஆணைக்குழு முன்வைக்கும் : சி.ஆர்.டி. சில்வா

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாங்கள் மேற்கொண்ட விசாரணை அமர்வுகளின் போது பொது மக்கள் வெளியிட்ட பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தக் கூடிய வகையிலான பரிந்துரையை நல்லிணக்க ஆணைக்குழு முன்வைக்கவுள்ளது. காணாமற் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு பொதுதீர்வு காண்பது அவசியம் என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.

கற்றறிந்த பாடங்களும் தேசிய நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறையில் நடைபெற்ற போது அதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த நான்கு தினங்களாக யாழ். மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்ற நிலையில் நேற்றைய தினம் ஊர்காவற்றுறையில் அமர்வு இடம்பெற்றது. இதில் பொது மக்கள் பலர் சாட்சியமளித்தனர். இந்நிலையில் ஆணைக்குழுவின் தலைவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்:

உங்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றுக்குத் தீர்வு வழங்குவது தொடர்பில் நாங்கள் அக்கறையுடன் இருக்கின்றோம். கடந்த நான்கு தினங்களாக யாழ். மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்று நாங்கள் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தோம். இன்று (நேற்று) அமர்வுகளின் இறுதிநாளாகும். இம்மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் மக்கள் தங்கள் பிரச்சினைகளை எங்களிடம் எடுத்துக் கூறினர். எமது உணர்வுகளை உங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம்.

உங்கள் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தக் கூடியவாறான பரிந்துரைகளை அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பாகும். காணாமற் போனோர் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். உங்கள் பிரச்சினைகளை ஆராய்ந்து நாங்கள் அவற்றை மதிப்பிட்டு வருகின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைப்போம். 30 வருட கால பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது அவசியம்.
மேலும் இங்கே தொடர்க...