Dec 9, 2010

கிளிநொச்சியில் 22,000 பேர் பாதிப்பு; 1000 ஏக்கர் வயல் நிலம் வெள்ளத்தில் நாநூறுக்கும் மேல் கால்நடைகள் உயிரிழப்பு


அடைமழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 5628 குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 564 பேர் பாதிக்கப் பட்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் நேற்று தெரிவித்தார்.

இம் மழை காரணமாக சுமார் ஆயிரம் ஏக்கர் வயல் நிலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் நானூறு கால் நடைகள் உயிரிழந்திருப்பதாகவும் அவர் குறிப் பிட்டார்.

ஜனாதிபதி செயலணியின் அங்கீ காரத்தோடு மழையால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்தும் சமைத்த உணவு, நிவாரணம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; அடைமழையினால் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் 2327 குடும்பங்களைச் சேர்ந்த 8010 பேரும், கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் 2612 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 789 பேரும், பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் 689 குடும்பங் களைச் சேர்ந்த 2786 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 764 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாய், நுளம்பு வலைகள், சவர்க்காரம், குழந்தைகளுக்கான உடுதுணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன என்றார்.

அடைமழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குளங்கள் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஆராய அமைச்சரவை உப குழு


வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஆராயவென ஜனாதிபதி தலைமையிலான 15 பேர் கொண்ட உயர்மட்ட அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அமைச்சரவை உப குழுவை நியமித்துள்ளார். பிரதமர் உள்ளிட்ட 15 அமைச்சரவை அமைச்சர்களை உள்ளடக்கிய இவ்வுபகுழு, வாழ்க்கைச் செலவு மற்றும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற பொருளாதார அபிவிருத்தி பணிகள் ஊடாக மக்களுக்கு கிடைக்கும் பலன்கள், எவ்வகையான நிவாரணங்கள் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என்பது பற்றியும் ஆராய்ந்து பரிந்துரை செய்யும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த உயர்மட்ட அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இச் சமயத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கடற் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்

கடற் பாதுகாப்பு மற்றும் கடற் படை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் 21 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டதோடு, 6 கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இலங்கையின் கடற் படையின் 60 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்த ஏற்பாடுகள் நடைபெற்றன.

இதில் பிரதம அதிதிகளாக இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

தேடப்படும் குற்றவாளி அல்ல தேவானந்தா"







இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1986 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சென்னை சூளைமேடு துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அவ்வழக்கு நடைபெறும் நான்காவது அமர்வு நீதிமன்றத்திடம் அது விடுத்துள்ள கைது வாரண்ட்டைத் திரும்பப் பெறுமாறு டக்ளஸ் தேவானந்தா கோரவேண்டும் என்றும், தவிரவும் முன் ஜாமீன் கோர உயர்நீதிமன்றத்தை அவர் அணுகலாம் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டது.

ஒருவர் கொல்லப்பட்ட சூளைமேடு வழக்கு விசாரணையின்போது ஆஜராகாத தேவானந்தா தேடப்படும் குற்றவாளி என் 1990ஆம் ஆண்டில் அமர்வு நீதிமன்றம் அறிவித்தது.

அதைச் சுட்டிக்காட்டி சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயுடன் இந்தியா வந்திருந்த டக்ளஸ் தேவானந்தாவைக் கைதுசெய்யவேண்டும் என்று ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய பரபரப்பு ஏற்பட்டது.

நடவடிக்கை ஏதும் எடுக்கப்படும் முன் இலங்கை திரும்பிய டக்ளஸ், தான் தேடப்படும் குற்றவாளி என்ற அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

தனது தீர்ப்பில் நீதிபதி அக்பர் அலி, "சூளைமேடு வழ்க்கில் டக்ளஸ் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற உத்திரவு வெளியிடப்பட்டபோது, அவர் இந்தியாவில் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, தேடப்படும் குற்றவாளியாக டக்ளஸ் தேவானந்தாவைக் கருத அவசியமில்லை. ஆனால் வழக்கு தொடர்கிற நிலையில் டக்ளஸ் கைது வாரண்ட்டைத் திரும்பப் பெறச்சொல்லி அமர்வு நீதிமன்றத்தை அணுகவேண்டும், முன் ஜாமீனுக்கு உயர்நீதிமன்றத்தை அணுகலாம்" எனத் தீர்ப்பளித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மக்கள் தற்போதுதான் நிறைய துன்பங்களை அனுபவிக்கின்றனர்: சிறிதரன்

வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் கடந்த காலங்களை விட தற்போது தான் அதிக துன்பங்களை அனுபவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

நடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால மற்றும் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறிதரன் எம்பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையற்றிய அவர்,

"கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தை விட தற்போது தான் மக்கள் அதிகளவு துன்பங்களை எதிர்கொள்கின்றனர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் இளைஞர்கள் யுவதிகள் மற்றும் வயோதிபர்கள் சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாடசாலைகள் இராணுவ ஸ்தலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்ச் சமூகத்தின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைகின்றன. மேலும் சனல் 4 தொலைக்காட்சியில் பல தமிழ் யுவதிகள் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதுவே ஒரு சிங்கள சமூகத்தில் நடைபெற்றிருக்குமாயின் நீங்கள் பொறுத்துக் கொண்டு இருப்பீர்களா?

தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசமான வட, கிழக்கில் அரசில் தீர்வு இல்லாமல் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. மேலும் நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பினரால் எதிர் கட்சிகளின் கருத்துக்கு ஆதரவு வழங்குவது இல்லை. சத்தம், கூச்சல் போட்டு சபை நடவடிக்கைகளைக் குழப்புகின்றனர். இது ஜனநாயகத்திற்குப் பொறுத்தமற்றதொரு செயலாகும்" எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...