Dec 26, 2010

10 ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவம்


தேசிய பாதுகாப்பு தினத்தில் பத்து ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த மக்களின் நலன்களில் அக்கறையுடன் ஊடகங்கள் வாயிலாக செய்திகளைப் பிரசுரித்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதற்காக நல்ல சிந்தனைகளை வெளிப்படுத்திய மைக்காக இவ்விருது வழங்கப்பட்டது.

இவ்விருதை தினகரன் இணை ஆசிரியர் மர்லின் மரிக்கார், தினக்குரல் உதவி ஆசிரியர் பா. கிருபாகரன், லக்பிம சாந்தினி புஷ்பா சமரக்கொடி, லக்பிம சுனித்திரா ஜீவணி மிதிமதுர, அஞ்சலா முத்துத்தம்பி உட்பட பத்துப் பேர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வை சிறப்பாக நடாத்த ஒத்துழைப்பு நல்கிய யாழ். மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ். மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவுக்கும் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்
மேலும் இங்கே தொடர்க...

அம்பாந்தோட்டையில் இன்று தேசிய சாரணர் ஜம்போரி

சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு:ஜனாதிபதி அதிதி: 31 வரை விசேட ஏற்பாடுதேசிய சாரணிய சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எட்டாவது தேசிய சாரணர் ஜம்போரியும், ஒன்பதாவது குருளைச் சாரணர் ஜம்போரியும் இன்று 27 ஆம் திகதி அம்பாந்தோட்டை அங்குனுகொல பெலஸ்ஸவில் நடைபெறவுள்ளன.

இதில் வெளிநாட்டு சாரணர்களோடு வடக்கு, கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் அதிகமான சாரணர்கள் பங்குபற்றவுள்ளதோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்தும் கூடுதலானோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று ஆரம்பிக்கும் இந் நிகழ்வு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இன்று அம்பாந்தோட்டையில் தேசிய ஜம்போரியை ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைப்பதாக உலக பாராளுமன்ற சாரணர் சங்கத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்தார்.

திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறும் தேசிய ஜம்போரியில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவுடன், இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் சி. பட்டுவன்கல உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டு தகவல் வழங்கினர்.

அம்பாந்தோட்டையில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கும் தேசிய ஜம்போரியில் யாழ்ப்பாணத்திலிருந்து 650 சாரணர்களும் கண்டியிலிருந்து 600 சாரணர்களும் கலந்து கொள்கின்றனர். இலங்கையில் தற்போது 49 ஆயிரம் சாரணர்கள் உள்ளனர்.

இதனை 2013 இல் ஒரு இலட்சமாக அதிகரிக்கவும் நாட்டின் சகல பாடசாலைகளிலும் சாரணர் இயக்கத்தை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக திரு. பட்டுவன்கல தெரிவித்தார்.

இலங்கையில் அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ளதால், 2012 இல் சாரணர் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 29 ஆவது ஜம்போரியை இலங்கையில் நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக ஜனவரி 04 ஆம் திகதி அலுவலகமொன்றும் திறந்து வைக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 32 மில்லியன் சாரணர்கள் உள்ள நிலையில், ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் 25 மில்லியன் சாரணர்கள் இருப்பதாகவும் பிரதம ஆணையாளர் தெரிவித்தார். இப்பாசறை காலத்துக்குள் பங்குபற்றுபவர்களுக்கு சாரணர் செயற்பாடுகள் பல ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன் அவற்றுள் ஆராய்ச்சி பரிசோதனை, பிரயாணங்கள் இளைஞர் வேலைத் திட்டங்கள், நாடகங்களுக்கும் பாசறைத்தீ,(இஅஙஆ ஊஐதஉ), “ஸ்கில் ஒரமா" (நஓஐகக ஞதஅஙஅ) நடவடிக்கைகளும் படக் காட்சிகள் என்பனவும் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளன.

கலை, கலாசார நிகழ்ச்சிகள், விநோத சுற்றுப் பயணங்கள், குருளை சாரணர் கலை நிகழ்ச்சிகள், விசேடமாக திறந்த வெளியரங்கு நிகழ்வுகள் (ஞடஉச அஐத ஈஐநடகஅவ) விமானப் படை நாய்களின் சாகஸ விளையாட்டுக்கள், விமானப் படை கண்காட்சி அரங்கு (அஐத இதஊப உலஏஐஆஐபஉஐஞச நபஅகக) முதற்தடவையாக குதிரை சாகஸ விளையாட்டுக்களில் விமான சாரணர்கள் பங்கு கொண்டு சாகஸங்கள் நிகழ்த்துவர்.

மகளிர் சாரணர்களும் பங்குபெற உள்ளார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

11 மாவட்டங்களில் பெரும் சோகம்; கதறி அழுது கண்ணீர் அஞ்சலி






சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட ஆறாண்டு நிறைவை வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதி மக்கள் உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தனர்.

உறவுகளையும், உடன்பிறப்புகளையும் இழந்து தவிக்கும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர். கிழக்கில் உறவுகளின் கல்லறைகளுக்கு தீபமேற்றி, மலர்த்தூவி நெஞ்சுருக நினைவு கூர்ந்ததைக் காணக்கூடி யதாக இருந்தது.

மத வழிபாடு களில் கலந்துகொண்ட மக்கள் ஆழிப் பேரலை அள்ளிச்சென்ற உறவுகளின் நினைவாக அன்னதானம் வழங்கியதுடன் தண்ணீர் பந்தல்களையும் நடத்தினர்.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிகளுக்கு அருகில் ஒன்று கூடிய உறவுகள், கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். கிழக்கின் கரையோர கிராமங்களில் நேற்றுக் காலை பெரும் சோகம் கெளவியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

தென் பகுதியில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட இடங்களிலும் மக்கள் சோகமே உருவாக உறவுகளை நினைவுகூர்ந்தனர். உறவுகளின் பிரிவுத்துயரில் தோய்ந்த மக்கள் நீண்ட நேரம் ஓரிடத்தில் குழுமியிருந்து அஞ்சலி செலுத்தினர். இவ்வாறு 11 மாவட்டங்களில் சுனாமியின் சோக வடு நேற்று மீண்டும் மக்களை ஞாபகமூட்டிச் சென்றுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வானுவாத்து நாட்டில் பயங்கர நிலநடுக்கம்


சிட்னி : பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள வானுவாத்து நாட்டில், நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 என, பதிவான இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த 2004 டிசம்பர் 26ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட பெரும் சுனாமியால் இரண்டு லட்சத்து 20 ஆயிரம் பேர் இறந்தனர். சுனாமி தாக்குதலின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் உலகம் முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியா அருகிலுள்ள வானுவாத்து நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 என பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஹவாய் தீவில் இயங்கிவரும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்தது. அதில், கடல் அலைகள் பற்றிய பதிவுகள், சுனாமி ஒன்று உருவானதைக் காட்டுகின்றன. அதனால், சுனாமி அலைகள் கடலோரப் பகுதிகளைத் தாக்கக் கூடும்' என, குறிப்பிட்டிருந்தது. ஆனாலும், நிலநடுக்கத்தால் கடலில் வழக்கத்தை விட சற்று அதிக உயரத்தில், அலைகள் உருவானதே தவிர பெரிய அளவில் சுனாமி தாக்கவில்லை. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், எவ்வித பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

குண்டுவீச்சு: வடகொரிய வீரர்கள் குஷி


பீஜிங் : தென்கொரியத் தீவு மீது, தங்கள் நாட்டு படையினர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதைப் பார்த்து, சந்தோஷம் அடைந்து அந்த வெற்றியைக் கொண்டாடியதாக, வடகொரிய ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர். இது குறித்து வடகொரிய "டிவி' நிலையம் ஒன்றுக்குப் பேட்டியளித்த வடகொரிய ராணுவ வீரர்கள் சிலர்,"நாங்கள் சந்தோஷத்தில் கூச்சலிட்டோம். எங்கள் வாழ்வை உயர்த்தி விட்டோம். எங்கள் கொரிய மக்கள் ராணுவத்தின் தலைவருக்காக (வடகொரிய அதிபர் கிம் ஜாங் இல்) நாங்கள் போராடுவோம். எங்களை முதலில் தாக்கிய எதிரியை பழி வாங்கும் நடவடிக்கையைத் துவக்கி விட்டோம்,'' என்றனர். வடகொரியாவின் தாக்குதல் குறித்து, அந்நாட்டு ராணுவ வீரர்கள் "டிவி'யில் தோன்றி பேட்டியளிப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

நீர்மூழ்கி கப்பல்களை தாக்கும் போர் விமானங்கள்:

தீவிரம் "நீர்மூழ்கிக் கப்பல்களை குறி பார்த்து தாக்கும் போர் விமானங்கள் அடுத்தாண்டு முதல் தைவான் ராணுவப் பணியில் ஈடுபடுத்தப்படும்' என்று அந்நாட்டு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. சீனாவுக்கு எதிரான தைவானின் நடவடிக்கையாக இதை ஆசிய நாடுகள் கருதுகின்றன. தென் சீன கடல் பகுதியில், சீனாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மை மற்றும் ராணுவத்தை அதிநவீனமாக்கும் அதன் செயல்பாடுகள், கிழக்காசிய நாடுகள் மத்தியில் பீதியை கிளப்பி வருகின்றன. இந்நிலையில், சீனாவிடம் இருந்து முழுமையாக விடுபடத் துடிக்கும் தைவான் நாட்டுக்கு, நீர்மூழ்கிக் கப்பலை குறி பார்த்து தாக்கும் பி-3சி ரக போர் விமானங்களை விற்பதாக அமெரிக்கா ஒப்பந்தம் செய்தது. அதன்படி, அடுத்தாண்டில் 12 பி-3சி ரக போர் விமானங்களில் ஒன்றை அமெரிக்கா, தைவானுக்கு வழங்கும். இது, தற்போது தைவானில் செயல்பாட்டில் இருக்கும் எஸ்-2டி விமானங்களுக்கு மாற்றாக இருக்கும். கடந்த 1949ல் சீனாவில் நிலவி வந்த ஷியாங்கே ஷேக் தலைமையிலான குவாமின்டாங் கட்சியின் சர்வாதிகாரத்துக்கு எதிராக மா சே துங் நடத்திய புரட்சியின் போது, ஷேக் உட்பட அக்கட்சியின் பெரும்பான்மையோர் தைவானில் தஞ்சம் அடைந்தனர். ஷேக், தைவானில் தனது ஆட்சியை உருவாக்கினார். அமெரிக்கா அதற்கு ஆதரவு தெரிவித்தது. அது முதல் தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்து தனியாக செயல்பட்டு வருகிறது. மாவோவுக்குப் பின் வந்த டெங் ஷியாவ்ப்பிங்கும், அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் பலரும் தைவான், சீனாவுடன் சேர வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். 1980ம் ஆண்டுகளில் தைவானில் ஜனநாயக ஆட்சி உருவானது. கடந்த 2005ல், சீன ராணுவத் தலைவராக ஹூ ஜிண்டாவோ பொறுப்பேற்ற போது, தைவான் சீனாவிடம் இருந்து விடுதலையாகப் போவதாக எதிர்காலத்தில் பிரகடனம் செய்வதைத் தடுக்கும் வகையில், "பிரிவினைக்கு எதிரான சட்டம்' ஒன்றை கொண்டு வந்தார். குவாமின்டாங் கட்சியின் மாயிங் ஜியோ அதிபராக பொறுப்பேற்ற பின், இரு தரப்பு உறவையும் மேம்படுத்தி வந்தார். 2008, டிசம்பரில் 60 ஆண்டு கால பகைமையை மறக்கும் வண்ணம், சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து துவங்கியது. ஆனால், 2009ல் சீனாவின் வடக்கு மற்றும் தென்பகுதியில் உள்ள முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்கக் கூடிய மூன்று ஏவுகணைகளை தைவான் பரிசோதித்து, இரு தரப்பிலும் மீண்டும் பகைமையை வளர்த்தது. இந்நிலையில் அமெரிக்கா, சீனாவின் ஓர் அங்கம் தைவான் என்பதை ஏற்றுக் கொண்டாலும், தைவான் மீது அன்னிய நாட்டு தாக்குதல் நேரும் பட்சத்தில் தான் உதவி புரிவதாக ஓட்டளித்து ஆயுதங்களை வாரி வழங்கியது. தைவான் தனது பகுதி என்று வலியுறுத்தி வரும் சீனா, தைவானுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவு காரணமாக, அதன் மீது போர் தொடுத்து தன்னுடன் இணைப்பதற்கு தயங்கி வருகிறது. தைவானும் இந்த சாக்கில் ஆயுதங்களை குவித்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...