Jan 18, 2011

வெள்ள அனர்த்தம் சேதமடைந்த வயல் நிலங்களுக்கு 30 தினங்களுக்குள் நஷ்டஈடு


வெள்ளத்தினால் சேதமடைந்த வயல் நிலங்களுக்கு அடுத்துவரும் 30 தினங்களுக்குள் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி சபை நேற்று தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக 5 குழுக்கள் கொழும்பில் இருந்து அனுப்பப்பட்டுள்ள தாக விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி சபை பொது முகாமையாளர் பண்டுக வீரசிங்க கூறினார்.

வெள்ளம் காரணமாக 4 இலட்சம் ஏக்கர்களுக்கும் அதிகமான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்படி மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு விவசாய காப்புறுதிசபைக் குழுக்கள் சென்று சேத மதிப்பீடுகளை ஆரம்பித்துள்ளன.

வயல் நிலங்களுக்கு எத்தகைய சேதம் ஏற்பட்டுள்ளது? எவ்வளவு நஷ்டஈடு வழங்குவது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதோடு உரிய தகவல்கள் திரட்டப்பட்ட உடன் துரிதமாக நஷ்டஈடுகள் வழங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விவசாய காப்புறுதி சபையில் காப்புறுதி செய்தவர்களுக்கே முதலில் நஷ்டஈடு வழங்கப்படும். காப்பு றுதி செய்யாதவர்களுக்கு நஷ்டஈடு வழங் கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கமநல மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் எஸ்.எம். சந்ரசேன மற்றும் இடர் முகா மைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நெல் வயல்களுக்கு மட்டுமன்றி சோள பயிர்ச் செய்கைக்காகவும் நஷ்டஈடு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

1 comment: