அவசரகாலச்ச
ட்ட பிரேரணை மீதான விவாதம் 118 மேலதிக வாக்குகளினால் சபையில் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி நிறைவேற்றிக்கொள்ளப்பட்டபோதிலும் அந்த பிரேரணை மீதான விவாதம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும்.
பாராளுமன்றத்தின் ஜனவரி மாதத்திற்கான அமர்வு கடந்த 18 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் 18 ஆம் திகதியிட்டே கையொப்பமிட்டிருந்தார்.
அந்த வர்த்தமானி அறிவித்தல் 10 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதனால் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீது கடந்த 18 ஆம் திகதி விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது. அந்த பிரேரணை மீதான விவாதமே நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும்.
அன்றைய வாக்கெடுப்பின் போது பிரேரணைக்கு ஆதரவாக ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும், எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயகத் தேசிக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இதன் பிரகாரம் பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 05 வாக்குகளும் கிடைத்தன.
இதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற குழுக்கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரிமாளிகையிலும், ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற குழுக்கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியிலும் இன்று திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்றது.
ட்ட பிரேரணை மீதான விவாதம் 118 மேலதிக வாக்குகளினால் சபையில் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி நிறைவேற்றிக்கொள்ளப்பட்டபோதிலும் அந்த பிரேரணை மீதான விவாதம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும்.பாராளுமன்றத்தின் ஜனவரி மாதத்திற்கான அமர்வு கடந்த 18 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் 18 ஆம் திகதியிட்டே கையொப்பமிட்டிருந்தார்.
அந்த வர்த்தமானி அறிவித்தல் 10 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதனால் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீது கடந்த 18 ஆம் திகதி விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது. அந்த பிரேரணை மீதான விவாதமே நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும்.
அன்றைய வாக்கெடுப்பின் போது பிரேரணைக்கு ஆதரவாக ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும், எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயகத் தேசிக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இதன் பிரகாரம் பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 05 வாக்குகளும் கிடைத்தன.
இதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற குழுக்கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரிமாளிகையிலும், ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற குழுக்கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியிலும் இன்று திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்றது.
No comments:
Post a Comment