பாகிஸ்தானின் வட
மேற்குப் பகுதியில் உள்ள மார்டான் நகரில் உள்ள இராணுவ பயிற்சி முகாமொன்றிற்கு பள்ளிச்சீருடையில் வந்த இளைஞன் ஒருவன் நடத்திய தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் 40 பேர் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும் பலரின் நிலைமை மோசமாக உள்ளதாகவும் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தினர் பயிற்சி மேற்கொண்டிருந்த இடத்திற்கு வந்த பாடசாலை சீரூடை அணிந்த நபரே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தலிபான் மற்றும் அல்-கொய்தா அமைப்புகளுக்கெதிரான பாகிஸ்தான் இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதே முகாமில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலின் போது 36 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












