இந்திய பிரதமருடனும் முக்கிய அமைச்சர்களுடனும் பேச்சு
இந்தியாவில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று புதுடில்லி பயணமானார்.
நேற்று நண்பகல் புதுடில்லி பாம் இராணுவ விமானத் தளத்தைச் சென்றடைந்த ஜனாதிபதிக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள் மகத்தான வரவேற்பளித்துள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பினை ஏற்று பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி யில் கெளரவ அதிதியாகக் கலந்து கொள்ளும் ஜனாதிபதி இந்தியாவில் தங்கியுள்ள காலப் பகுதியில் இந் தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்குடன் இரு தரப்புப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன் மேற்படி விளையாட்டுப் போட்டியில் 72 வருடங்களின் பின்னர் குத்துச் சண்டைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்து தாய் நாட்டுக்குப் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர் மஞ்சு வன்னியாராச்சிக்கு ஜனாதிபதி நேரில் வாழ்த்துத் தெரிவிக்கவுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிசும் இணைந்து கொண்டுள்ளது டன் இரு நாடுகளினதும் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறை சம்பந்த மான முக்கியமான பேச்சுவார்த்தைகள் பல அங்கு இடம்பெறவுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டலுவல் கள் அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, உள்நாட்ட லுவல்கள் அமைச்சர் பி. சிதம்பரம் மற்றும் மத்திய அமைச்சர் வயலார் ரவி உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் பலருடனும் துறை சார்ந்த முன்னேற்றங்கள் குறித்த முக்கிய பேச்சு வார்த்தைகளை அமைச்சர் பீரிஸ் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment