Mar 17, 2011

ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்

கனடாவின் ஒட்டாவா மற்றும் மொன்றியல் நகரங்களில் அந்நாட்டு நேரப்படி 1.36 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக 10 செக்கன்கள் வரை இந்நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகளில் 4.3 ஆக அளவிடப்பட்டுள்ளது.

சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை, சிலியிலும் இதே போன்ற நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன
மேலும் இங்கே தொடர்க...

Feb 11, 2011

ரயிலில் மோதி இளைஞன் பலி



உடரட ரயிலில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று அட்டன் பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட அட்டன் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அட்டன் சித்திர தோட்டத்தைச்சேர்ந்த அங்கப்பன் ஆண்டிராஜ் என்பவரே உயிரிழந்தவராவார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவிக்கும் அட்டன் பொலிஸார், உயிரிழந்த இளைஞன் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

நேரகாலத்துடன் விமான நிலையத்துக்கு வருமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தல்



கட்டுநாயக்க, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தினூடாக எதிர்வரும் 12ஆம், 13ஆம் திகதிகளில் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள், தாம் பயணம் செய்யவுள்ள விமானம் புறப்படுவதற்கு 4 மணித்தியாலங்களுக்கு முன்னராகவே விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்று ஸ்ரீலங்கன் விமான நிலையத்திற்கு செல்லும் இலங்கை கனடா நட்புறவு வீதி மூடப்படுவதன் காரணமாகவே நேரகாலத்துடன் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் செல்லுமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விமான சேவைகள் நிறுவனத்தின் விமான நிலைய முகாமையாளர் எச். எஸ். ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் இலங்கை கனடா நட்புறவு வீதியோடு இணைந்ததாகவுள்ள புகையிரதப் பாதை புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. இதன்பொருட்டு நாளை சனிக்கிழமை இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை இவ்வீதி ஊடான வாகனப் போக்குவரத்தும் முற்றாக தடைசெய்யப்பட்டிருக்கும்.

இந்த 10 மணித்தியால காலப்பகுதியிலும் விமான நிலையத்தை நோக்கி வரும் பயணிகளின் வாகனங்களை மாற்று வீதிகளினூடாக திருப்பி விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, மாற்று வீதிகளூடாக பயணம் செய்து, விமான நிலையத்தை வந்தடைவதற்கு அதிக நேரம் எடுக்கலம். அதனைக் கருத்திற்கொண்டே விமான நிலையத்திற்கு பயணிகள் நேர காலத்துடன் வர வேண்டியுள்ளது.

கொழும்பிலிருந்து விமானநிலையம் நோக்கி வரும் வாகனங்கள் ஜாஎல, எக்கல வீதியூடாக மினுவாங்கொடையை வந்தடைந்து, அங்கிருந்து ஆடிஅம்பலம வீதிவழியாக விமான நிலைய நுழைவாயிலை வந்தடையும். சீதுவை முச்சந்திக்கு வரும் வாகனங்கள் அங்கிருந்து ரத்தொளுகமை வீதியூடாக பழைய சீதுவை முச்சந்திக்கு திருப்பிவிடப்பட்டு பேஸ்லைன் வீதி, எவரிவத்தை ஊடாக விமான நிலையத்தை சென்றடையும்.

நீர்கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்கள் 18ஆம் மைற்கல் சந்திக்கு அருகிலுள்ள பன்சல வீதியூடாக திரும்பி, துளுண சந்திக்கு வந்து பேஸ்லைன் வீதியூடாக எவரிவத்தையை வந்தடைந்து விமானநிலையத்திற்கு செல்லும்.

நீர்கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் தெல்வத்தை முச்சந்தியில் 50 ஏக்கர் வீதியூடாக பயணித்து கிம்புலாப்பிட்டிய முச்சந்தி வரை சென்று அங்கிருந்து ஆடிஅம்பலம ஊடாக விமான நிலையத்தை சென்றடையலாம். நீர்கொழும்பு பிரதான வீதியின் ஊடாக கல்கந்தை முச்சந்திக்கு வரும் வாகனங்கள் கிம்புலாப்பிட்டி வீதி வழியே ஆடிஅம்பல ஊடாக விமான நிலையத்தை அடையும்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்ப 7 மில்லியன் ரூபா கப்பம் கோரிய இருவர் கைது



வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா கப்பம் கோரிய இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரையும் தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரணை நடத்துவதற்கு கொழும்பு பிரதான நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.

கொழும்பு கதிரேசன் வீதியைச் சேர்ந்த பீடி இலை இறக்குமதி செய்யும் வர்த்தகரான ஆறுமுகம் மாணிக்கம் சுப்பிரமணியம் எனும் வர்த்தகரிடம் இவர்கள் 7 மில்லியன் ரூபா கப்பம் கோரியிருந்தனர். பம்பலப்பிட்டியில் வசிக்கும் இந்த வர்த்தகரிடம் புலிகள் இயக்கத்ததை மீளவும் இயங்கச் செய்வதற்கு 7 மில்லியன் ரூபா வழங்கவேண்டுக்ஷீமன இவர்கள் தொலைபேசி மூலம் மிரட்டியுள்ளனர்.

இவ்வாறு பணத்தினை வழங்காவிடில் வர்த்தகருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கேடு விளைவிக்கப்படும் என்றும் இவர்கள் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து குறித்த வர்த்தகர் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

பணம் கொடுக்கும்போது கப்பம் கோருபவர்களை கையும் மெய்யுமாக கைது செய்வதற்கு பம்பலப்பிட்டி பொலிஸக்ஷிர் திட்டமிட்டனர். செட்டியார் தெருவிலுள்ள நகைக்கடைக்கு அண்மையில் வைத்து பணத்தை குறித்த வர்த்தகர் மிரட்டல்காரர்களிடம் கையளித்தபோது இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

மொகமட் சலாகுதீன் மொகமட் அஸ்லம் மற்றும் இந்தியப் பிரஜையான நூர் அமித் முகமட் அஸ்ரப் ஆகிய இருவருமே பொலிஸரால் கைதுசெய்யப் பட்டவர்களாவர். இவர்களுக்கு புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உண்டா என விசாரணை செய்வதற்காக இருவரையும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் நீதிமன்றத்தில் கோரி நின்றனர்.

இதனையடுத்து இதற்கான அனுமதியினை வழங்கிய பிரதான நீதிவான் விசாரணை அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தென்கிழக்காசிய சமூக அபிவிருத்தி மாநாடு கொழும்பில் நடத்த தீர்மானம்



தென்கிழக்காசிய நாடுகளின் சமூக அபிவிருத்தியுடன் தொடர்புடைய அமைச்சர்களது மாநாடு எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

பிரதமர் டி.எம் ஜயரத்தன தலைமையில் நடைபெறும் இம் மாநாட்டில் இலங்கை, இந்தியா, நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைத்தீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகளின் 90 பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தூத்துக்குடி கொழும்பு படகு போக்குவரத்து இன்று ஆரம்பம்




இரண்டு ஆண்டுகளுக்குப் பின், தூத்துக்குடி கொழும்பு இடையேயான படகு மூலம் சரக்கு போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.கடந்த பல ஆண்டுகளாக தூத்துக்குடியில் இருந்து கொழும்பிற்கு படகில் உணவுப் பொரு ட்கள், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

பின்னர் இலங் கையில் உள் நாட்டு போர் தீவிரம் அடைந்ததால், படகு போக்குவரத்து கடந்த இரு ஆண் டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.

தற்போது இலங்கையில் போர் முடிந்து அமைதி திரும்பியதால், தூத்துக்குடி கொழு ம்பு சரக்கு போக்குவரத்தை, இன்று முதல் மீண் டும் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதற் காக, தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நேற்றுமுன்தினம் தனியாருக்கு சொந்த மான ஒரு படகில் மஞ்சள், மக்காச்சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்கள் ஏற்றப்பட்டன. 300 தொன் சரக்குடன் இந்த படகு, நேற்று காலை தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டதைத் தொடர்ந்து இன்று கொழும்பை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

Feb 10, 2011

பாகிஸ்தான் இராணுவ முகாமில் குண்டுவெடிப்பு: 27 பேர் பலி


பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள மார்டான் நகரில் உள்ள இராணுவ பயிற்சி முகாமொன்றிற்கு பள்ளிச்சீருடையில் வந்த இளைஞன் ஒருவன் நடத்திய தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 40 பேர் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும் பலரின் நிலைமை மோசமாக உள்ளதாகவும் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தினர் பயிற்சி மேற்கொண்டிருந்த இடத்திற்கு வந்த பாடசாலை சீரூடை அணிந்த நபரே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தலிபான் மற்றும் அல்-கொய்தா அமைப்புகளுக்கெதிரான பாகிஸ்தான் இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதே முகாமில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலின் போது 36 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

அரசினால் அறிவிக்கப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்கக் கோரி இன்று பிற்பகல் 1 மணியளவில் வங்கி ஊழியாகள் அடையாள வேலை நிறுத்தப் போராகீட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் இலங்கை தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்கள் இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுன்னாகம், சாவகச்சேரி, மானிப்பாய், சங்கானை என அனைத்து வங்கிகளிலும் இந்த அடையாள வேலை நிறுத்தம் இடம்பெற்றது. இதேநேரம் ஊர்வலமாக வந்த தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்களை இராணுவத்தினர் இடைநிறுத்தி விசாரணைக்கு உட்டடுத்தப்பட்ட பின்னர் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது



விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஐவர் தம்புள்ளையில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை கண்டலம பிரதேச ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்த போதே இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைதின் போது இவர்களிடம் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பாடல்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சில குழந்தைகளுடைய புகைப்படங்கள் மற்றும் வேறு சில ஆவணங்கள் அடங்கிய சீ.டீ என்பன கைப்பற்றப்பட்டதாக பொலீஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பு வவுணதீவு பாதை சீரமைப்புப் பணியில் புளொட் உறுப்பினர்கள்- படங்கள் இணைப்பு



மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும்மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்;லுதல், மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து, நோயாளர்களை ஏற்றி இறக்குதல், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வைத்தியர்களை அழைத்துச் சென்று வருதல், மருத்துவ உதவிகள் போன்ற பணிகளுக்கு நான்கு இயந்திரப் படகுகளைக் கொண்டு புளொட் உறுப்பினர்கள் உதவி வருகின்றனர். அத்துடன் பல்வேறு பகுதிகளின் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவினையும் வழங்கி வருகின்றனர். புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர் திரு.கேசவன் உட்பட 30ற்கும் மேற்பட்ட புளொட் உறுப்பினர்கள் கடந்த ஒருவாரமாக இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, நாவற்காடு, வவுணதீவு, கரவெட்டி, கன்னங்குடா, சேத்துக்குடா, புதூர், ஈச்சந்தீவு, குறிஞ்சாமுனை, காரையாக்கன்தீவு, கொத்தியாவளை ஆகிய பிரதேசங்களிலேயே புளொட் உறுப்பினர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பு நகரையும் வவுணதீவு பிரதேசத்தையும் இணைக்கும் வலையிறவு பாலம் ஊடான வீதி கடும்மழை காரணமாக பழுதடைந்து காணப்படுவதால் இன்று அவ்வீதியினை சீர்ப்படுத்தும் பணிகளில் வவுணதீவு பிரதேச செயலகத்துடன் இணைந்து புளொட் உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர். நேற்றையதினம் ஈச்சந்தீவு, நாவற்காடு, கரவெட்டி பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமைத்த உணவுப் பொதிகளையும் புளொட் உறுப்பினர்கள் வழங்கியதுடன், நேற்று வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு குடிநீரையும் புளொட் உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர்.





























































































































மேலும் இங்கே தொடர்க...

Feb 8, 2011

தபால் சேவைகள் பாதிப்பு: தேங்கிய நிலையில் பொதிகள்






நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதான தபால் நிலையங்களில் பெருமளவு கடிதங்கள் விநியோகிக்கப்படாமல் குவிந்து கிடப்பதாக தபால் திணைக்களம் கூறியது.

தபால் நிலையங்கள் மட்டுமன்றி வீதிகள் வீடுகள் என்பனவும் நீரில் மூழ்கியுள்ளதால் கடிதங்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் கூறியது.

வெள்ளம் வடிவதோடு அவற்றை துரிதமாக விநியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அடை மழை காரண மாக வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்கள் கூடுதலாக பாதிக்கப் பட்டுள்ளன. இப்பகுதிகளில் விநியோகம் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய பிரதேசங்களிலும் தபால் விநியோகிப்பதில் ஓரளவு தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

Feb 7, 2011

நாட்டில் தொடர்ச்சியான மழை: 12,43,478 பேர் பாதிப்பு; 2,50,501 மக்கள் முகாமில்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்துவருகின்ற தொடர்ச்சியான மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 18 மாவட்டங்களில் மூன்று இலட்சத்து 62 ஆயிரத்து 821 குடும்பங்களைச் சேர்ந்த 12 இலட்சத்து 43 ஆயிரத்து 478 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 67 ஆயிரத்து 508 குடும்பங்களை சேர்ந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்து 501 பேர் இடம்பெயர்ந்த நிலையில் 689 முகாம்களில் தங்கியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரை வெள்ளம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் மூவர் காணாமல் போயுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 ஆயிரத்து 350 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 40 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 94 ஆயிரத்து 354 பேர் 197 முகாம்களில் தங்கியுள்ளனர். நாடளாவிய ரீதியில் 1161 வீடுகள் முழுமையாகவும் 8412 வீடுகள் பகுதியளவிலும் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது

திருகோணமலை மாவட்டத்தில் 87 ஆயிரத்து 191 குடும்பங்களை சேர்ந்த மூன்று இலட்சத்து 24 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்து 220 குடும்பங்களை சேர்ந்த 78 ஆயிரத்து 510 பேர் 176 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இம்மாவட்டத்தில் கந்தளாய், மூதூர், வெருகல், தம்பலகாமம் உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 ஆயிரத்து 350 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 40 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 ஆயிரத்து 19 குடும்பங்களைச் சேர்ந்த 94 ஆயிரத்து 354 பேர் 197 முகாம்களில் தங்கியுள்ளனர். கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று மேற்கு, மண்முனை மேற்கு, மண்முனை பற்று, காத்தான்குடி, எருவில்பற்று, போரதீவு பற்று, ஏறாவூர் உள்ளிட்ட பல பிரதேசங்கள் இந்த மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் 74 ஆயிரத்து 432 குடும்பங்களை சேர்ந்த இரண்டு இலட்சத்து 82 ஆயிரத்து 685 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6558 குடும்பங்களை சேர்ந்த 24 ஆயிரத்து 923 பேர் 81 முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த மாவட்டத்தில் சம்மாந்துரை, நிந்தவூர், கல்முனை, இறக்காமம், சாய்ந்த மருது, காரைதீவு, ஆலையடி வேம்பு, திருக்கோவில் உள்ளிட்ட பல பிரதேசங்கள் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மாத்தளை மாவட்டத்தில் 478 குடுபங்களை சேர்ந்த 1949 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 350 குடும்பங்களை சேர்ந்த 1450 பேர் ஏழு முகாம்களில் தங்கியுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இம்மாவட்டத்தில் 11 முகாம்களில் 240 குடும்பங்களை சேர்ந்த 808 பேர் தங்கியுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தில் 6124 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5247 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 631 பேர் 68 முகாம்களில் தங்கியுள்ளனர். இம்மாவட்டத்தில் பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 1007 குடும்பங்களை சேர்ந்த 3769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 தற்காலிக முகாம்களில் 3467 பேர் தங்கியுள்ளனர்.

இதேவேளை வெள்ளப்பெருக்கு காரணமாக வவுனியா மாவட்டத்தில் 20 ஆயிரத்து 789 குடும்பங்களை சேர்ந்த 79 ஆயிரத்து 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6613 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 876 பேர் 79 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். அத்துடன் இந்த மாவட்டத்தில் 697 வீடுகள் முழுமையாகவும் 3224 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 351 குடும்பங்களை சேர்ந்த 1312 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 437 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர். கண்டி மாவட்டத்தில் 202 குடுங்களை சேர்ந்த 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் 249 குடும்பங்களை சேர்ந்த 764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 முகாம்களில் 764 பேர் தங்கியுள்ளனர்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் 3351 குடும்பங்களை சேர்ந்த 12158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் மடு நானட்டான் மாந்தை மேற்கு மன்னார் முசலி ஆகிய பகுதிகள் வெள்ளம் காரணமக்ஷிக பாதிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 451 குடும்பங்களை சேர்ந்த 59 ஆயிரத்து 977 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 616 குடும்பங்களை சேர்ந்த 2048 பேர் 4 முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த மாவட்டத்தில் துணுக்காய் , ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 3711 குடும்பங்களை சேர்ந்த 14827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 115 குடும்பங்களை சேர்ந்த 430 பேர் 7 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

சூரியனின் முழுப் முப்பரிமாண தோற்றம்: அதிசய படங்கள்



மனித வரலாற்றில் முதன் முறையாக சூரியனின் 360 பாகை அதாவது முழுப் முப்பரிமாண தோற்றத்தின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

நாசாவினால் கடந்த 2006 ஆம் ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட ஸ்டீரியோ எனப்படும் இரட்டை விண்வெளி ஓடங்கள் சூரியனுக்கு நேர் எதிராகப் பயணித்து இம் முப்பரிமாண படங்களை பதிவு செய்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

பெனாசிர் கொலை வழக்கில் முஷாரப்பின் பெயர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலையின் குற்றவாளி பெயர் பட்டியலில் முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

பெனாசிரின் கொலை வழக்கு தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் இன்று தாக்கல் செய்த தாற்காலிக குற்றப் பத்திரிகையில் முஷாரப்பின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராவல்பிண்டி நகரில் உள்ள தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முஷாரப் தற்போது பஹ்ரைன் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளுராட்சித் தேர்தல் அமைதியான முறையில் சுகந்திரமாக நடைபெற வேண்டும்: பெப்ரல்

பிரதேச சபைகளுக்கான உள்ளுராட்சித் தேர்தல்கள் சுகந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் என சுகந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் கண்கானிப்பு மத்திய நிலைத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோஹன ஹெட்டிஆராச்சி கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தேர்தல் அமைதியாக நடத்தும் பொறுப்பு தேர்தல் திணைக்களத்திற்கு மட்டுமல்ல பொலிஸ் திணைக்களம், அரசியற் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கும் உரியது.

தேர்தல் சட்டத்தை அனைத்துக் கட்சிகளும் பின்பற்ற வேண்டும். தேர்தல் நடவடிக்கைகள் கிராம மட்டத்தில் இடம்பெறவிருப்பதால் சூழலுக்கு பாதகமில்லாத முறையில் பிரசாரம் மேற்கொள்ளவேண்டும்’ எனவும் கேட்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...