Oct 3, 2010

செல்விகள் பஞ்சாபியும் திருமதிகள் சேலையும் அணிந்து ஆலயம் செல்வதே சாலவும் நன்று








எண்ணங்கள்
கந்தையென்றாலும் அதைக் கசக்கிக் கட்ட வேண்டும் என்பது பழமோண். எங்கள் உடல் அழகை எவ்வாறு நாம் சுத்தமாக வைத்திருக்கின்றோமோ! அந்தளவுக்கு எமது உளமும் தூய்மையாக இருக்க வேண்டும்.

நம்மில் பலர் அப்பிடி இல்லை. பக்கத்து வீட்டுப் பொண்ணு என்ன செய்கிறாள் என்றுதான் பார்ப்பார்கள். அவள் செய்ததை விட ஒரு படி கூட தான் செய்ய வேண்டும் என்று அங்கலாய்ப்பாள். இந்த மாதிரியான தன் அங்கலாய்ப்பைத் தீர்ப்பதற்கு கணவனைப் படாத பாடுபடுத்துவாள். கணவனும் அவள் சொல் கேட்டு கடனை உடனைப் பட்டு அவை எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து வைப்பான். நாள் செல்லைச் செல்ல அது ஒரு புற்று நோய் போல அவர்களின் மனங்களை உலுப்பிச் செல்லும் போது பழைய இடத்துக்கு வந்து இருந்து கொண்டு முறைப்படி முன்னேறியவர்களைப் பார்த்து பெருமூச்சுவிட்டுத் தண்ணி மட்டும் குடித்துக் கொண்டிருப்பார்கள்.

பக்கத்து வீட்டுக்காரன் நல்ல வடிவான மோட்டார் சைக்கிள் எடுத்துப் போட்டான் என்பதற்காக எமது தகுதி நிலையினையும் தாண்டி அதை ஒத்ததாகவோ அல்லது அதைவிட பெறுமதியான மோட்டார் சைக்கிளையோ எடுத்து விடுவதென்பது மனிதன் தான் உருக்குலைவதற்கு ஆயத்தமாகின்றான் என்றே அதன் பொருளாகும்.

பக்கத்து வீட்டுக்காரன் தன் மகனை ஒரு வைத்தியராகவோ, அல்லது பொறியியலாளராகவோ உருவாக்கப் பாடுபடுகின்றான் என்றால் அதை நாமும் பின்பற்றுவதென்பது ஊருக்கும் நல்லது என்பதோடு அதுநாட்டுக்கும் ஆரோக்கியமானதாகும்.

நாளுக்கு நாள் மாறும் நாகரிகங்களால் நம்மவர்களின் உடைக் கலாசாரம் நாறிப் புழுத்துப் போவதை யாவரும் காணக் கூடிய ஒன்றாகவே இருக்கின்றது. அதில் ஆண்களின் ஆடைக் கலாசாரம் என்பது ஓரளவு பக்குவ நிலையில் இருக்க பெண்களின் நவ நாகரிக உடைக் கலாசாரங்களால் கந்தபுராணக் கலாசாரம் கந்தறுந்து போகுது என்றுதான் சமூக அக்கறைகொண்டோர் பலரும் ஆதங்கம் கொள்கின்றனர்.

உடலை ஒட்டி உடலை வாளிப்பாகக் காட்டி நிற்கும் உடைகளே இன்று பெரும்பாலான பெண்கள் அணிந்து மகிழ்கின்றனர். அப்படியான உடைகள் அணியாதவர்கள் அநாகரிகமானவர்களாம்.

பெண்களுக்கான உடைகள் எது வந்த போதும் பஞ்சாப் மாநிலப் பெண்களால் பயன்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டுப் பெண்களின் மனங்களில் ஊஞ்சலாடி இன்று எம்மவரையும் கவர்ந்துவிட்ட பஞ்சாபி ஆடை என்பது நாகரிகமானதும், வணக்கத்துக்குரிய ஓர் அம்சமாகவும் விளங்கி வருகின்றது.

பாடசாலை விழாக்கள், கோயில் திருவிழாக்கள், அலுவலகக் கடமை நேரங்கள் மற்றும் வேறு விழாக்களின் போது பஞ்சாபி உடையினைப் பெண்கள் அணிந்து வருகின்ற போது விரச நிலைகள் மறைக்கப்பட்டு தமிழ் கலாசார பண்பு நிலைகள் மேலோங்குவதற்கும் வழி சமைத்து விடுகின்றன.

இன்று பெண்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாக மோட்டார் சைக்கிள் விளங்குகின்றது. மோட்டார் சைக்கிளை சிரமமின்றி ஓட்டுவதற்கும் இதன் சேவை அளப்பரியதாகும்.

திருமணமாகி மூன்று அல்லது நான்கு பிள்ளைக்குத் தாயான பெண்கள் இளைய ஆண் சமூகத்திற்கு முன் தங்களை மாபெரும் கவர்ச்சி பொம்மைகளாகக் காட்டிவிடும் உள் நோக்கில் உடல் இறுக்கு சட்டைகள் அணிந்து கொண்டு தங்களை நாகரிகத்தின் உச்சவாதிகள் என்று காட்டி வலம் வருகின்றனர். இதற்காக நவீன கணவன்மார்களும் உடந்தை கொள்வதுதான் வேடிக்கையானதும், வேதனையானதுமான விடயமாகும்.

வை வைபவங்களின் போது திருமணமான பெண்கள் சாறியும், இளம் பெண்கள் பஞ்சாபியும், சிஹஙுஜீ ஷிஹஙுலீலீ உம் அணிந்து கொள்வது என்பது ஆலய தெய்வீகத்தன்மைக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் உரிய பாதுகாப்பானதாகும் என்பதே எனது ஆதங்கமுமாகும்.

அன்று ஒரு நாள் எனது நண்பர் ஒருவர் கல்யாண வீட்டு வைபவம் ஒன்றுக்காக வேட்டிகட்டி தூய்மையான உடை உடுத்து வந்து நின்றார். அவருக்கு 32 வயதுதான் இருக்கும். அந்த உடையில் அவரைப் பார்க்கும் போது சுத்தமான சைவப்பழமாக அவர் இருந்தார். நான் ஜீன்ஸ்பான்ட் அணிந்திருந்தேன். அவரைப் பார்த்ததும் எனக்கு ஏதோ போல் இருந்தது. உடனடியாக வீடு போய் வேட்டி அணிந்து வந்து நின்றேன்.

நான் அப்படி வந்து நின்ற போதுதான் அறிந்துகொண்டேன் முதல் வேட்டி கட்டி வந்தவரை அவர் மனைவி அவசர அவசரமாகப் பக்கத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று ‘என்ன இது எப்பவும் நாகரிகமில்லாமல்...! மற்றவர்களைப் பாருங்க என்ன டீசென்ராக வந்து நிக்குறாங்கள். கருமம் கருமம்’ என்று திட்டிக்கொண்டாளாம்.

அப்பாவிக் கணவன் அவள் சொல் கேட்டு ஜீன்ஸ் பான்ட் அணிந்து வருவதற்காக வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டாராம். இப்ப நான் மட்டுமே அங்கு சுத்த சைவப்பழமாக நின்றுகொண்டிருந்தேன்.
மேலும் இங்கே தொடர்க...

ராஜகுரு சேனாதிபதி என்ற பெயரைப் பயன்படுத்த மயில்வாகனமே காரணம்...'' ராஜகுரு சேனாதிபதி கனகரட்னம்

அன்று ..........................இன்று



இலங்கை வானொலித் துறையில் மறக்க முடியாத பெயர் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம். 1960முதல் மூன்று தசாப்தங்களாக இலங்கை வானொலி நிலையத்தில் பணியாற்றி வந்தவர். வானொலி மீதுள்ள பற்றின் காரணமாகவே வானொலி அறிவிப்பாளரானதாகக் கூறும்

இவர் ஒரு கட்டை பிரம்மச்சாரி. அக்காலத்தில் இலங்கை வானொலியில் இணைந்திருந்தவர்களில் மிகுந்த இலக்கிய புலமை கொண்டவராகத் திகழ்ந்த ராஜகுரு, இதன் காரணமாக இலக்கிய கண்ணோட்டத்துடன் பாடல்களை ஒலி பரப்பியதோடு, இலக்கியத் தரம் கொண்ட நிகழ்ச்சிகளையும் அறிமுகம் செய்தார். தன் சேவைக் காலத்தில் இவர் ராஜகுருவாகவே நடந்து கொண்டார் என்றால் மிகையல்ல. இலங்கை வானொலி பெற்றெடுத்த வலம்புரிச் சங்கு இவர். சிலாபத்தில் தனியாக வாழ்ந்து வரும் இவரின் வாழ்க்கை பயணத்தில் சில பகுதிகளை நமக்காக அவரின் நினைவலைகளிலிருந்து ஒலிபரப்புகிறார்.

‘என் தங்கச்சி பெயர் நோனம்மா. பாசமலர் படத்தில் வரும் அண்ணன் தங்கை அதாவது சிவாஜி, சாவித்திரி மாதிரி தான் நாங்கள் இருவரும் வாழ்ந்தோம். என் தங்கச்சி மீது உயிரையே வைத்திருந்தேன். எங்கு சென்றாலும் தங்கையை அழைத்துச் செல்வேன். ஒரு நாள் என் அம்மாவை என் தங்கை திட்டினாள். நான் அதை கண்டுக்கொள்ளவில்லை. அப்போது என் அம்மா, என்ன உன் தங்கச்சி திட்டுறத வேடிக்கை பார்க்கிறியா?

என்றார் என்னிடம். உடனே எனக்கு ஆத்திரம் வந்துவிட்டது. என் தங்கையை என் கோபம் தீருமட்டும் அடித்தேன். பாவம் என் தங்கை! துடித்துப் போய்விட்டாள். அந்த சம்பவத்திற்குப் பின் அவள் என்னோடு பேசுவதில்லை. நானும் கதைப்பதில்லை. வீட்டில் அவள் தான் சமையல் செய்வாள். சாப்பாட்டை தட்டில் போட்டு விட்டு நான் இருக்கும் அறைக்கு எதிரே இருக்கும் கதவு நிறையில் சாய்ந்து கொண்டிருப்பாள். அவள் அப்படி நின்றால் அவள் என்னை சாப்பிட கூப்பிடுகிறாள் என்று அர்த்தம். என் தங்கையை நான் அப்படி அடித்திருக்கக் கூடாது. அவசரப்பட்டுவிட்டேன்.

என் தங்கையை அடித்ததை எண்ணி நான் என் மனசுக்குள் அழுத நாட்கள் அனேகம். பிறகு என் தங்கைக்கு பிடித்தவனையே அவளுக்கு திருமணமும் செய்து வைத்தேன். எல்லாமே பாசமலர் படத்தில் வருவது போல.... சில காலங்களுக்கு பிறகு என் தங்கையின் திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் கிளம்ப ஆரம்பித்தன.

துரதிஷ்ட வசமாக அவள் இறந்துவிட்டாள். என் தங்கையின் இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இன்றும் காலையில் அவள் படத்துக்கு முன்பாகத்தான் கண் விழிக்கிறேன்.” என்று தனது பாசத்துக்குரிய தங்கையின் நினைவுகளை எம்மோடு பகிர்ந்துகொண்ட கணகரட்னத்திடம் அவரின் பூர்வீகம் பற்றி கேட்டோம்.

“நான் பிறந்தது சிலாபம் மருதங்குளத்தில். அப்பா பெயர் முத்தையா, அம்மா பொன்னம்மாள். அப்பா ராஜவம்சத்தை சேர்ந்தவர். தமிழ் நாட்டில் இருக்கும் அயோத்தியிலிருந்து வந்தவர். கோட்டையை ஆண்ட காளியங்கராயர் என்ற பட்டயம் ஒன்றும் எங்கள் வீட்டில் இருந்தது. ராஜகுரு சேனாதிபதி என்பது எங்கள் குடும்பத்தின் பரம்பரை பெயர்.

ராஜாவுக்கு குருவாகவும், சேணைக்கு அதிபதியாகவும் இருப்பவர்கள் என்பதுதான் அதன் பொருள். மதுரங்குளம் முழுவதும் என் தாத்தாவுக்கு சொந்தமான இடம் தான். ஆனால் தாத்தாவுக்கு போகும் இடமெல்லாம் மனைவிகள் இருந்திருக்கிறார்கள். அதனால் அவர் அங்கெல்லாம் ஒரு வீட்டை கட்டி அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். தாத்தாவின் அந்த வீடுகள் தாத்தாவுக்கு அந்தப்புரமாக இருந்திருக்கிறது. இப்போது அந்த இடங்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால் காணி தாத்தாவின் பெயரில் தான் இருக்கிறது.

“எங்கள் குடும்பத்தில் நான் ஏழாவது பிள்ளை. நான் பிறந்த வீட்டில் நாயக்கர் காலத்து தூண்கள் மாதிரி பெரிய பெரிய தூண்கள் இருக்கும். ஆனால் எனக்கு அந்த வீட்டில் தொடர்ந்து இருக்கக் கிடைக்கவில்லை. அப்பா அந்த வீட்டை அவரின் அண்ணணுக்கு எழுதி கொடுத்துவிட்டதால், நாங்கள் வேறு வீட்டிற்கு மாறி வந்து விட்டோம். ஆரம்பத்தில் என் பெயரை கணகரட்ணம் என்றுதான் எழுதி வந்தேன். ‘ராஜகுரு சேனாதிபதி என்று எழுதுவதை நான் விரும்பவில்லை.

பிறகு நான் அறிவிப்பாளராக ரேடியோ சிலோனுக்கு பணியாற்ற வந்தபோது, அங்கே மயில்வாகனம் இருந்தார். அவர் என்னை சிலாபக்காரர், கரையர், மீன்பிடிக் கிராமத்தான் என்பதாக மதிப்பிட்டு அப்படியே வெளியே சொல்லியும் வந்தார். ரேடியோ சிலோனிலும் அப்படித்தான் ஏனையோரிடத்தில் அறிமுகம் செய்தும் வந்தார்.

“இவர் ஒரு கரையர் பையன்” என்று சொல்வது எனக்கு பெருத்த அவமானமாக இருந்தது. உண்மையில் நான் ஒரு பெரிய குடும்பத்து பையன் என்பது மயில்வாகனத்திற்கு தெரியாது. இவரது வாயை எப்படி மூடுவது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். பிறகு தான் என் பெயருக்கு முன்னால் ‘ராஜகுரு சேனாதிபதி என்பதை சேர்த்துக்கொண்டேன்” என்று தமது ஊரையும், பெயரையும் பற்றி விபரித்த கணகரட்னத்திடம் முதல் பாடசாலை பிரவேசம் பற்றிக் கேட்டோம்.

“மருதங்குளம் தமிழ் கலவன் பாடசாலையில் தான் என் முதல் அரிவரி தொடங்கியது. என் அம்மாதான் என்னை அங்கே அழைத்துச் சென்றாள். அங்கே நான் நாலாவது வரை கல்விக் கற்றேன்.

எனக்கு அகரம் கற்பித்தவர் யார் என்பது எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஆனால் பாக்கியநாதன், திருமதி பாக்கியநாதன் ஆகியோர் அங்கே படிப்பித்தார்கள். அவர்கள் இருவருக்கும் என்மீது நல்ல பிரியம். நான் அரிவரி படித்த அந்தக் கட்டடத்தை இடித்து விட்டு இப்போது சமுர்த்தி நிலையத்தை அங்கே அமைத்திருக்கிறார்கள்.

(இ-வ) பின்வரிசையில் - பெனடிக், ஜோசப் ராஜேந்திரன், மயில்வாகனம், மஹதி ஹசன், ஜோக்கிம் பெர்னாண்டோ, சந்திரமோகன், சண்முகம் அமர்ந்திருப்போர் - விசாலாட்சி ஹமீத், ராஜேஸ்வரி சண்முகம், பி. பி. தியாகராஜா, கனகரட்ணம் அப்துல் ஹமீத்.

அதற்குப் பிறகு சென் மேரீஸ் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கே எஸ். எஸ். சி. வரைப் படித்தேன். அங்கே என்னோடு ஒரே பெஞ்சில் அமர்ந்து படித்த கந்தசாமி, மெளலானா, அபுல் ஹசன், டக்ளஸ் ஆகியோரை இன்றும் நினைக்கிறேன்” என்றவரிடம், பாடசாலை நாட்களில் நாடகங்கள் நடித்திருக்கிஹர்களா? என்று கேட்டோம்.

“எனக்கு சின்ன வயசிலேயே கிரிக்கெட் விளையாடுவதென்றால் ரொம்பப் பிடிக்கும். ஐந்தாவது படிக்கும்போது ‘அமணனும் குமணனும்’ என்ற நாடகத்தில் புலவர் வேடத்தில் நடித்தேன். அதற்குப் பிறகு நான் நாடங்கள் நடிக்கவில்லை.”

வானொலி பிரவேசம் எப்படி அமைந்தது?

பாசமலர் தங்கை இளமையில் ராஜகுரு

“எனக்கு சின்ன வயசிலேயே வானொலி என்றால் உயிர். அப்போ இப்போ மாதிரி வீட்டுக்கு வீடு வானொலி கிடையாது. எங்கேயோ ஒரு வீட்டில் தான் வானொலியைக் காண முடியும். ஒரு சில ஹோட்டல்களில் வானொலிகளை சத்தமாக போட்டிருப்பார்கள். நான் பாடசாலை செல்லும் நாட்களில் அந்த ஹோட்டல்களுக்கு அருகில் நின்று வானொலி ஒலிபரப்புகளை கேட்பேன். அப்போது என் குரலும் வானொலியில் ஒலிக்காதா என்ற ஆவல் எனக்குள் உருவாகி குதியாட்டம் போடும், நான் தனிமையில் இருக்கும்போது வானொலி அறிவிப்பாளர்கள் பேசுவது போல பேசி பயிற்சி எடுத்துக்கொள்வேன்.

இது இப்படி இருக்க அப்பாவுக்கும் எனக்கும் எப்போதும் கருத்து முரண்பாடு வந்து கொண்டே தான் இருந்தது. அப்பா எனக்கு எந்த உதவியையும் செய்ய முடியாது என்று கூறி வீட்டை விட்டு வெளியே போ என்று விரட்டினார். அப்போது வேறு ஒருவரின் உதவியுடன் வானொலிக்குள் பிரவேசம் செய்ய முயற்சி செய்தேன். வர்த்தமானியில் வெளியான அறிவிப்பாளர்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து விட்டு விண்ணப்பம் போட்டு விட்டு காத்திருந்தேன். பிறகு வரச் சொன்னார்கள்.

அதற்குப் பிறகு நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். தேர்வானேன். முதல் நாள் ஒலிபரப்பிற்காக மைக் முன்னால் அமர்ந்தபோது எனக்கு நடுக்கமாக இருந்தது. எத்தனையோ ஆயிரக்கணக்கானோர் என் குரலைக் கேட்கப் போகிறார்களே என்ற பயமும் பரபரப்பும் தான் அந்த நடுக்கத்திற்குக் காரணம். அப்போது நமது வானொலி தமிழகத்திலும் தெளிவாக ஒலிபரப்பாகி வந்தது. அதனால் அவர்களும் கேட்க கோடிக்கணக்கான மக்களை எமது குரல் சென்றடைந்த காலம் அது. இலங்கை வானொலியில் நிறைய நிகழ்ச்சிகளை செய்திருக்கிறேன். பொதிகை தென்றல், காலைக்கதிர், பாட்டொன்று கேட்போம், இரவின் மடியில் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு நானே பெயரும் சூட்டினேன்.”

அவரது அன்றைய பெங்களூர் ரசிகர்கள்

நீங்கள் வானொலி நட்சத்திரமானப் பின்னர் தங்களின் முதல் ரசிகை? முதல் காதல்?

“நான் வானொலி நட்சத்திரமானப் பிறகு எத்தனையோ பெண்களின் காதல் ரசம் சொட்டும் கடிதங்களைப் பார்த்திருக்கிறேன். இன்றும் அந்தக் காதல் கடிதங்களை மட்டும் பத்திரமாக வைத்திருக்கிறேன். ஆனால் எந்தப் பெண்ணும் என் மனசிலும் பதியவில்லை.

வாழ்க்கையிலும் துணையாகவில்லை. அது ஏனோ தெரியவில்லை. எனக்கு எந்தப் பெண்ணிலும் பிடிப்பு ஏற்படவில்லை. என்னை எத்தனையோ பெண்கள் சுற்றி வந்திருக்கிறார்கள். என் மீது உள்ள காதலை நேரிடையாகவே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் என்னமோ தெரியவில்லை எனக்குதான் காதல் உணர்வே வரவில்லை. ஒரு முறை பெங்களூரிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்தப் பெண் என்னைப் எப்படியோ தேடிக் கண்டுபிடித்து அவள் எனது தீவிர ரசிகை என்றும் அவள் என்னை விரும்புவதாகவும் சொல்லி கெஞ்சினாள்.

ஆனால் நான்தான் அவளோடு வந்த குடும்பத்தார்களிடம் கைகொடுத்து கும்பிட்டு அவளை அழைத்துச் செல்லும்படி சொன்னேன். இப்படியொரு மக்கனாக அந்தக் காலத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன். அந்தப் பெண்களின் சாபம் தானோ என்னவோ நான் இன்று தனிமையில் கஷ்டப்படுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது போலும்.

“ஒருமுறை நேரடியோ சிலோனில் நான் அறிவிப்பாளராக கடமையாற்றி கொண்டிருந்தபோது மறுபக்கத்தில் நந்தசேன என்பவர் ஒலிபரப்பிற்கு உதவியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின் என்னை அழைத்த நந்தசேனை, மச்சான் உனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டா? என்றார் நான் இல்லை என்றேன். தண்ணீ, பொண்ணு என்று கேட்க நான், இல்லவே இல்லை என்று மறுத்தேன்.

அப்போது நந்தசேன, நீயெல்லாம் ஏன்டா பூமியில பிறந்தாய்? என்று கேட்டார். நான் விக்கித்து நின்றேன்” என்று சொன்ன ராஜகுரு சேனாதிபதியிடம் அப்பாவிடம் அடிவாங்கி இருக்கிஹர்களா? என்று கேட்டோம்.

“அப்பாவிற்கு என்னை பிடிக்காது. அதனால் எப்போதும் என்னை அடிப்பார். சில நேரங்களில் என்னை அடித்து வீட்டை விட்டு துரத்திவிடுவார். நான் என் வீட்டுத் தோட்டத்திலுள்ள வாய்க்காலில் தென்னம் ஓலையை போட்டுப் படுத்து தூங்கிவிட்டு மறுநாள் காலையில் வருவேன். சில நாட்களில் மரத்தில் ஏறி அதன் உச்சியில் உள்ள கிளையில் அமர்ந்து அப்படியே தூங்கி விடுவேன்.

கீழே விழாமலிருக்க இடுப்பில் ஒரு கயிற்றை கட்டி மரத்தில் கட்டிவிட்டு தான் தூங்குவேன். ஒரு நாள் நானும் எனது நண்பர் பொன்னம்பலமும் மாலையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு சிலாபத்திற்கு சென்று நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பி வந்தோம். வரும்போது வழியில் நான் கீழே விழுந்து காலில் நல்ல அடிபட்டுவிட்டது. காயத்தோடு வீட்டுக்கு வந்தபோது அப்பா என்னை வீட்டிற்கு வெளியே நின்ற மரத்தில் கட்டி வைத்து அடித்தார். இன்றும் அந்த சம்பவம் என் மனதில் அப்படியே இருக்கிறது.”

தனிமை உங்களுக்கு கொடுமையாகத் தெரியவில்லையா?

“இல்லை. அது ஆண்டவன் கொடுத்த வரம். தனிமையை இனிமையானதாகவே கருதுகிறேன். நானே சமைத்து சாப்பிடுகிறேன். எனக்கு இதுவரையும் எந்த நோயும் வந்ததில்லை. கடவுள் என்னோடு இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. நான் வானொலி, தொலைக்காட்சி கேட்பதும் பார்ப்பதும் கிடையாது. உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள திருச்சி வானொலியை மட்டும் தினமும் கேட்கிறேன்.”

மறக்க முடியாத நபர்கள்?

நண்பர் நமசிவாயம், பெர்ணான்டோ, நெவில் ஜயவீர உள்ளிட்டோரை மறக்கவே முடியாது.

ம்... அது ஒரு காலம் என்று நீங்கள் ஏங்குவது?

“எங்கள் வீட்டுக்கு முன்னாடி இருந்த மதுரங்குளம் குளத்தில கரனம் போட்டு குதித்து, நீந்தி விளையாடிய அந்த நாட்கள்... இன்று அந்தக் குளத்தைப் பார்க்கும்போது ரொம்பவும் ஏக்கமாக இருக்கும். என்ன செய் வது இப்போது என்னால் கரணம் போட்டு அந்த குளத்தில் குதிக்கவோ, நீந்தவோ முடியாது. வீட்டு குளியலறையில் தான் குளிக்கிறேன்.

கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி உங்கள் புரிதல் என்ன?

“நாம் கொண்டு வந்ததும் ஒன்றுமில்லை; கொண்டு போவதும் ஒன்றுமில்லை. குறிப்பிட்ட சில காலங்கள் இங்கே கொஞ்சம் தங்கியிருந்து விட்டு போகிறோம். அவ்வளவு தான். என்னைப் பொருத்தவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை இனிமையானது என்றுதான் சொல்வேன்” என்று முடித்தார் கனகரட்ணம்.

நன்றி தினகரன் .lk
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் நவீன சிறுவர் வைத்தியசாலை அமைக்கப்பட வேண்டும்


லேடி ரிட்ஜ்வே சிறுவர் ஆஸ்பத்திரியைப் போன்ற சகல வசதிகளையும் கொண்ட ஒரு சிறுவர் ஆஸ்பத்திரியின் அவசியம் பற்றியும் இது தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கும் நகர்வுகள் பற்றியும் விளக்குகிறது இக்கட்டுரை.

முப்பது வருட போருக்கு பின்னர் வடக்கு அபிவிருத்தி – வடக்கு வசந்தம் ஆகிய மகுடங்களின் கீழ் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, விவசாயம், கைத்தொழில் மற்றும் பல துறைகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் வடக்கில் நவீன சிறுவர் வைத்தியசாலை ஒன்று அமைய வேண்டிய தேவை குறித்து நவாலி ஹேமலதா செல்வராஜா சிறுவர் ஞாபகார்த்த நிதியம் (ஏடீஙிஹங்ஹசிகீஹ நடீங்சுஹஙுஹகுஹகீ இகீடுங்க்ஷஙுடீடூ ஙடீஙிச்ஙுடுஹங் ஊச்சீடூக்ஷஹசிடுச்டூ) 2009 இன் முற்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவசர முன்மொழிவு பத்திரத்தை சமர்ப்பித்தது.

இதில் வடக்கு மாகாணம் கடந்த போர் யுகத்தில் சுகாதார நவமீளமைப்பு விடயத்தில் உட்கட்டுமான அபிவிருத்தி, நவீன வைத்திய உபகரணங்கள் இல்லாமை, ஆளணியின்மை, வாகனம் குறித்தும், புதிய வைத்தியசாலைகளின் தேவைப்பாடு குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

வடக்குக்கு நவீன தரம் கொண்ட சிறுவர் வைத்தியசாலை ஒன்று அமைய வேண்டும் எனவும் இதற்கு 120 மில்லியன் ரூபாவை ஒதுக்கி உதவுமாறும் கோரப்பட்டிருந்தது.

அத்துடன் கொழும்பில் அமைந்துள்ள லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு நிகரான வைத்தியசாலை ஒன்றினை அமைத்து வடபகுதியில் உள்ள சிறுவர்களின் நோய் பாதுகாப்பு அரணாக இவ்வைத்தியசாலை விளங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதற்கு உடனடியாக செவிசாய்த்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது செயலாளர் லலித் வீரதுங்கவுக்கு விடுத்த பணிப்புரையின் பிரகாரம், மேற்படி திட்டத்தை வடக்கு பகுதியில் நிறைவேற்றுவதற்கான நியாயங்களை வழங்குமாறு வட மாகாண பிரதம செயலாளர் ஆ. சிவசுவாமியையும், ஆளுநரின் செயலாளர் சி. ரங்கராஜாவையும் கடிதம் மூலம் கோரப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து இத்திட்டம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஊடாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் துறைசார் நிபுணர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் கருத்துக்கள் உடன் பெறப்பட்டன.

அத்துடன் இவ் வைத்தியசாலையை சங்கானையில் அல்லது தெல்லிப்பளையில் நிர்மாணிப்பதற்கான முழு நிலமும் அதற்கான நன்னீரும் அவ்விடங்களில் உண்டு எனவும் வடக்கு வசந்தம் அபிவிருத்தியின் கீழ் இதனை முதன்மைப்படுத்துமாறும், இதற்கென முதற்கட்டமாக 80 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறும் 100 படுக்கையறை வசதிகளை கொண்டதாகவும், அதற்கான மருத்துவ ஆளணியினரையும், வசதிகளையும் வழங்குமாறும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர். இரவீந்திரனுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதன் பின்னர் இத்திட்டத்தினை வடக்கு வசந்தம் அபிவிருத்தித் திட்டம் அல்லது ஏதாவது ஒரு சர்வசே நிதி முகவராண்மை நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று தருமாறும் முதற் கட்டமாக 100 படுக்கையறை கொண்ட சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு 80 மில்லியன் ரூபாவை ஒதுக்கி வழங்குமாறு கடந்த வருடம் ஜுலை மாதம் 22ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சு செயலாளர் மீண்டும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஆ. சிவசுவாமியை கடிதம் மூலம் கோரியிருந்தார்.

இவ்விடயம் முதன்மைப்படுத்தல் தொடர்பாக வட மாகாணத்தை சேர்ந்த அரசாங்க அதிபர்கள், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள் உன்னிப்பாக அவதானித்து கொண்டிருக்கின்றார்கள். எனினும் 2010 இல் நிதி ஒதுக்கீடு இடம்பெற்று நவீன சிறுவர் வைத்தியசாலை அமைக்கப்படுவது குறித்தும் முழுமையாக ஆராய்ந்து வருகின்றனர்.

எனினும் கடந்த 3 மாதங்களிற்கு முன்னர் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி எஸ். தயானந்தா கருத்து தெரிவிக்கையில், 2010 இல் திட்டம் நிறைவேறக் கூடியதாக நிதி ஏற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2011இல் வடக்குக்கான சிறுவர் வைத்தியசாலையின் தேவை குறித்து ஏதாவது ஒரு நிதி ஏற்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி பெற வழியமைக்கப்படும் எனவும் இதனை வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஊடாகவும், சர்வதேச நிதி முகவராண்மை நிறுவனமான யுனிசெப் ஊடாக திட்டம் நிறைவேற்ற வழியமைக்கப்படுமென உறுதியாக தெரிவித்து இருக்கிறார். எது எப்படி இருப்பினும் வடக்கு மாகாணத்தில் சிறுவர் வைத்தியசாலை ஒன்று அமைய வேண்டும் என்பது பரவலான எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே வடக்கு மாகாண அபிவிருத்தி என்ற போர்வையில் இத்திட்டம் உரிய காலத்தில் நிறைவேற வேண்டும். இல்லாவிடில் இதனால் முழுமையாக பாதிக்கப்படப் போவது சிறுவர்களே.

இத்திட்டத்தின் அவசர தேவை குறித்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருகின்றார்.

2011இல் வடக்குக்கான சிறுவர் வைத்தியசாலை அமைய வேண்டும். இது தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விழலுக்கு இறைத்த நீராகிவிடக் கூடாது.
மேலும் இங்கே தொடர்க...

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு





பூமியைத் தவிர வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சூரிய குடும்பத்திற்கு வெளியே அதிக வெப்பமும், அதிக குளிரும் இல்லாமல் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா, சாண்டா குரூஸ் பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் கார்னிஜ் நிறுவனத்தை சேர்ந்த குழுவினர் ஆய்வு செய்து, சிவப்பு குள்ளனாக காட்சி தரும் நட்சத்திர குடும்பத்தை சேர்ந்த கிளைஸ் 581 என்ற புதிய கிரகம் ஒன்றை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து சாண்டா குரூஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸ்டீவன் வோட் கூறியதாவது:பசுபிக் கடலில் உள்ள ஹவாய் தீவில் உள்ள கெக் தொலைநோக்கி மூலம் விண்வெளியில் சிவப்பு குள்ள நட்சத்திரத்தையும் அதன் சுற்று வட்டப்பாதையில் வலம் வரும் கிரகங்களையும் 11 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறோம்.அதிக வெப்பம் உள்ள கோள்களோ அல்லது அதிக குளிர் உள்ள கோள்கள் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், அதிக வெப்பமோ அல்லது அதிக குளிரோ இல்லாமல், உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள புதிய கிரகம் ஒன்று இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்த புதிய கிரகம் கிளைஸ் 581 என்று அழைக்கப்படுகிறது. துலா ராசி விண்மீன் நட்சத்திர கூட்டத்தில் இடம் பெற்றுள்ள இந்த கிரகம், பூமியில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதுவரை 500 நட்சத்திர குடும்பங்கள் அறியப்பட்டுள்ளன. இதில், சூரிய குடும்பத் திற்கு அருகில் உள்ள நட்சத்திர குடும்பம் இது.பால்வெளி மண்டலத்தில் காணப் படும் கிரகங்களில், இந்த கிளைஸ் 581 கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளது. குளிர்ந்து வரும் சிறிய நட்சத்தி ரத்தை ஆறு கிரகங்களில் ஒன்றாக இந்த கிரகம் சுற்றி வருகிறது. இது பூமியை போல் மூன்று அல்லது 4 மடங்கு பெரியது. தனது வட்டப்பாதையில் 37 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த கிரகத்தில் -31 முதல் -12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சூரியனை பார்த்தபடி புதன் கிரகம் சுற்றி வருவது போல், இந்த கிரகத்தின் ஒரு பகுதி அதன் சூரியனை பார்த்தபடி சுற்றி வருகிறது.இதனால் இந்த கிரகத்தின் ஒரு பகுதி வெப்பமாகவும், ஒரு பகுதி குளிராகவும் உள்ளது. எனவே, இந்த இரண்டு பகுதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் பூமியை போன்ற சூழ்நிலை நிலவுகிறது. ஈர்ப்பு சக்தி மற்றும் பாறைகள் ஆகியவை பூமியில் உள்ளதை போன்று காணப்படுகிறது. எனவே, இந்த கிரகத்தின் மேற்பரப்பிலும் நீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.இவ்வாறு ஸ்டீவன் வோட் கூறியுள்ளார்.

எவ்வளவு தூரத்தில் உள்ளது? இந்த கிரகம் எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா? பூமியில் இருந்து 172 டிரில்லியன் கி.மீ., தூரத்தில் உள்ளது.அதாவது 172க்கு பின்னால் 12 ஜீரோ சேர்த்தால் வரும் எண் தான் இந்த தூரம். இந்த தூரத்தை கடக்க ராக்கெட் ஒன்று ஒளியின் வேகத்தில் சென்றால் 20 ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த கிரகத்தை அடைய முடியும்.ஒளியின் வேகத்தில் செல்லும் எந்த வாகனமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

100.லச்சம் .கோடி கிலோமீற்றர்

மேலும் இங்கே தொடர்க...