Dec 10, 2010

கொழும்பு துறைமுகத்தில் 50 கிலோ ஹெரோயின் மீட்பு



கொழும்பு துறைமுகத்தில் 50 கிலோ நிறையுடைய ஹெரோயினை போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பிரிவினர் சற்றுமுன்னர் கைப்பற்றியுள்ளனர்.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிசிற மென்டிஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேகத்தின்பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

சட்டவிரோதமாக நீரைப் பெறுவதனால் 2.7 பில்லியன் ரூபா நஷ்டம்

சட்டவிரோதமாக நீரைப் பெற்றுக் கொள்வதனால் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு வருடமொன்றுக்கு 2.7 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகின்றது என நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

''பிரதான நீர்விநியோகக் குழாய்களில் இருந்து சட்டவிரோதமான முறையில் நீர்பெற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர்சோதனை நடவடிக்கைளின்போது சட்டவிரோத நீர்ப்பாவனையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர் மற்றும் நீர்விநியோக நடவடிக்கைகளுக்கு கடுமையான சட்டதிட்டங்களை வகுப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மனித உரிமைகள் தினத்தைப் பிரகடனம் செய்ததையடுத்து கடந்த 62 ஆண்டுகளாக மேற்படி தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல பாகங்களிலும் பல்வேறு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மீது சர்வதேச மட்டத்தில் யுத்தக் குற்ற விசாரணை வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச அளவிலான விசாரணை அவசியம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானிய "சனல் 4' தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பப்பட்ட 5 நிமிட காணொளியைக் கொண்டு சர்வதேச மட்டத்தில் ஒரு விசாரணையை முன்னெடுக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சென்ற வருடம் ஒளிபரப்பப்பட்ட கானொளியின் நீட்டிப்பு கானொளி என குறிப்பிட்ட கானொளி ஒளிபரப்பப்பட்டுள்ளது.

அக் கானொளியில் உள்ள ஒரு பெண்ணின் உடல் விடுதலைபுலிகள் இயக்கத்தின் தொலைக்காட்சி சேவையில் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவினுடையது என சர்வதேச தமிழ் ஊடகங்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயின் ஒளிபரப்பப்பட்ட கானொளி சித்தரிக்கப்பட்டவை என இலங்கை அரசு தெரிவிக்கிறது என ஏபி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...