Jan 18, 2011

உள்ளூராட்சி தேர்தல்: திட்டமிட்டபடி 20 முதல் வேட்புமனுக்கள் ஏற்பு

திட்டமிட்டபடி வடக்கு கிழக்கு உட்பட நாடு பூராவும் 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்பட உள்ளதாக தேர்தல் செயலகம் நேற்று தெரிவித்தது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆராயும் உயர் மட்ட மாநாடு நேற்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக் கவின் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி கள், மாவட்ட உதவித் தேர்தல் ஆணை யாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வெள்ளப் பாதிப்பு காரணமாக கிழக்கு மாகாணத்தில் தேர்தல் ஒத்திவைப்பது குறித்து ஆராயவே இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக வெளியான செய்தியை தேர்தல் திணைக்களம் மறுத்தது.

தேர்தல் பணிகள் மற்றும் ஒழுங்குகள் குறித்து ஆராயவே இந்தக் கூட்டம் நடைபெற்றதாக பிரதி தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி கூறினார். ஏற்கனவே அறிவித்த படி 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment